search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்துக்கள் ஏற்படும் அபாயம்"

    • சாக்கடை கழிவுநீர் பள்ளம் நிரம்பி சாலைகள் முற்றிலும் தெரியாமல் ஆறாக ஓடுகிறது.
    • விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி பவானிசாகர் எஸ்.ஆர்.டி.நகர் அருகில் சாக்கடை கழிவுநீர் போகும் வடிகால் பள்ளம் உள்ளது.

    இதில் பவானிசாகர் சாலை எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் உள்ள வீதிகளில் இருந்தும் மற்றும் பழைய மார்க்கெட் பின்புறம் உள்ள வீதிகளில் இருந்தும் வரும் சாக்கடை கழிவுநீர் அனைத்தும் எஸ்.ஆர்.டி. நகர் அருகே உள்ள சாக்கடை வடிகால் பள்ளத்தில் வந்து சேருகிறது.

    இதில் மழை காலங்களில் அந்த சாக்கடை கழிவுநீர் பள்ளம் நிரம்பி சாலைகள் முற்றிலும் தெரியாமல் ஆறாக ஓடுகிறது.

    மேலும் பவானிசாகர் சாலையில் இருந்து எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் செல்லும் அப்பகுதி மக்கள் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    மேற்படி இருபுறமும் சாக்கடை கழிவுநீர் பள்ளம் இருப்பதால், அது மழைக்காலங்களில் நிரம்பி வழிவதால் நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் வாகனங்களில் செல்லும் பொதுமக்களுக்கு விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    • வாழை சருகுகளை தீ வைத்ததால் மெயின் ரோடு முழுவதும் புகைமண்டலமாக இருந்தது.
    • வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி அடுத்து நல்லூர்-சத்திய மங்கலம் சாலையில் வாழை க்காய் பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் கேரளா மாநிலம் சென்று வாழைக்காய் தாறுகளை இறக்கி விட்டு வரும்போது நல்லூர் பகுதியில் சத்தியமங்கலம் சாலை மெயின் ரோட்டோரம் சில மாதங்களாகவே வாழை சருகுகளை கொட்டி தீ வைத்து விடுகின்றனர்.

    இது மேலும் அதிகரித்து வாழை சருகுகளை தீ வைத்ததால் அப்பகுதி மெயின் ரோடு முழுவதும் புகைமண்டலமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    மேலும் வாழை சருகுகளை தீவைத்து எரித்து அதில் வரும் புகை மண்டலம் ரோடு முழுவதும் பரவுவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எதிரே வரும் வாகனங்கள் ஒன்றும் தெரிவதில்லை.

    இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

    ×