என் மலர்
நீங்கள் தேடியது "Risk of accidents due"
- வாழை சருகுகளை தீ வைத்ததால் மெயின் ரோடு முழுவதும் புகைமண்டலமாக இருந்தது.
- வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
பு.புளியம்பட்டி:
புஞ்சை புளியம்பட்டி அடுத்து நல்லூர்-சத்திய மங்கலம் சாலையில் வாழை க்காய் பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் கேரளா மாநிலம் சென்று வாழைக்காய் தாறுகளை இறக்கி விட்டு வரும்போது நல்லூர் பகுதியில் சத்தியமங்கலம் சாலை மெயின் ரோட்டோரம் சில மாதங்களாகவே வாழை சருகுகளை கொட்டி தீ வைத்து விடுகின்றனர்.
இது மேலும் அதிகரித்து வாழை சருகுகளை தீ வைத்ததால் அப்பகுதி மெயின் ரோடு முழுவதும் புகைமண்டலமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும் வாழை சருகுகளை தீவைத்து எரித்து அதில் வரும் புகை மண்டலம் ரோடு முழுவதும் பரவுவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எதிரே வரும் வாகனங்கள் ஒன்றும் தெரிவதில்லை.
இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.






