search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசைத்தறியாளர் சங்கம்"

    • தமிழகத்தில் உள்ள 6 லட்சம் விசைத்தறிகள் உள்ளது.
    • மாவட்டங்களில் காடா நெசவு செய்யப்படுகிறது.

    மங்கலம் :

    திருப்பூர், கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கத்தலைவர் ஆர்.வேலுச்சாமி, சங்க செயலாளர் அப்புக்குட்டி என்கிற எம்.பாலசுப்ரமணியம், பல்லடம் விசைத்தறி சங்க துணைச்செயலாளர் பாலாஜி, மங்கலம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்க துணைத்தலைவர் சுல்தான்பேட்டை கோபால், கண்ணம்பாளையம் விசைத்தறி சங்க செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை சந்தித்து மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள 6 லட்சம் விசைத்தறிகள் திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ளது. இந்த மாவட்டங்களில் காடா நெசவு செய்யப்படுகிறது. இதனால் இரண்டு மாதங்களுக்கு 6ஆயிரம் யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கறோம். தொழில் மந்தநிலை, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, கொரோனா தொற்று என பல காரணங்களால் உயர்த்தப்பட்ட கூலி கிடைக்கவில்லை. தற்போது அபரிமிதமான பஞ்சு நூல் விலை உயர்வு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு விசைத்தறிகள் சரிவர இயங்காமல் உள்ளது. ஆகவே விசைத்தறிக்கு உயர்த்திய மின் கட்டணத்தை ரத்து செய்தும் ஆண்டுக்கு 6சதவீத உயர்வையும் ரத்து செய்து பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    ×