search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் பிணம்"

    • சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
    • இறந்த நபர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை மதுரவாயல் கங்கையம்மன் கோவில் தெருவில் இன்று காலை சாலையோரம் வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இதை கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அங்கு சென்ற போலீசார் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த நபர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் - சித்தேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே காட்பாடி ரெயில் மார்க்கத்தில் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ் பெக்டர்கள் ஆனந்தன் மற்றும் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பிணத்தை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரித்து வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாமல் திணறல்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூர்-திருத்தணி ரெயில் நிலையத்திற்கு இடையே திருப்பதி ரெயில் மார்க்கத்தில் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணம் கிடப்பதாக அரக்கோ ணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீ சார் சம்பவ இடத்துக்கு சென்ற உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோ ணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாயல்குடி அருகே வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
    • அவரது உடலில் ரத்தக்காயங்கள் தென்பட்டன.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள உறைகிணறு கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    இதைப்பார்த்த அந்தப்பகுதி மக்கள் உடனே சாயல்குடி ேபாலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் சல்மான் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நட த்தினர். அப்போது பிணமாக கிடந்தவர் உடலில் ரத்தக்காயங்கள் தென்பட்டன. அங்கிருந்த தடயங்களை சேகரித்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் உடலில் காயங்கள் உள்ளதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து ள்ளது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துர்நாற்றம் வீசியது.
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் ஒன்றியம் கடலாடி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மேல்சோழங்குப்பம் பூங்காவனத்தம்மன் கோவில் ஓடை பாலத்தின் கீழ் தண்ணீரில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் மிதந்து கிடந்தன.

    இது பற்றி தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கடலாடி ேபாலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதன் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு வந்து கவுந்த நிலையில் உள்ள வாலிபரின் உடலை தூக்கிய போது உடல் முழுவதும் அழுகிய நிலையில் கிடந்தது. இறந்து சுமார் 4,5 நாட்கள் ஆகிய நிலையில் இருந்ததால் துர்நாற்றம் வீசியது. உடனே உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும் இறந்த நபர் பற்றி விசாரணை செய்ததில் அதே பகுதி டேங்க் தெருவை சேர்ந்த வடிவேல் (வயது 30) என்றும் கூலி தொழிலாளி எனவும் தெரியவந்தது.

    மேலும் இவருக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகின்றன இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

    இறந்த நபர் கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திருப்பவில்லை என்பது தெரிய வந்தன. மேலும் இறந்த நபர் எப்படி இறந்தார் தெரியவில்லை.

    முன்விரோதம் காரணமாக யாராவது அடித்து கொலை செய்து போட்டுவிட்டு உள்ளார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    • கடலூரில் உள்ள லாட்ஜ் அறையில் வாலிபர் பிணமாக கிடந்தார்.
    • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூட்டியிருந்த கதவை உடைத்துத் திறந்து பார்த்தனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிபுலியூர் பஸ் நிலையம் அருகே தனியார் லாட்ஜ் உள்ளது. கடந்த 18-ந் தேதி 40 வயது வாலிபர் ஒருவர் தொழில்ரீதியாக தங்குவதற்கு அறை கேட்டுள்ளார். அதன்படி கடந்த 18-ந் தேதி முதல் அறையில் தங்கியுள்ளார். ஆனால் 18 -ந்தேதி அறைக்கு சென்றவர் 2 நாட்களான நிலையில் அறையிலிருந்து வெளியில் வராததால் லாட்ஜில் பணிபுரிந்த ஊழியர்கள் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூட்டியிருந்த கதவை உடைத்துத் திறந்து பார்த்த போது அங்கிருந்த பாத்ரூமில் இறந்த நிலையில் கிடந்தார். இதனை தொடர்ந்து இறந்த நபரின் உடலை போலீசார் கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆண்டிமடம் வரதராஜன் பேட்டையை சேர்ந்தவர் ஜெபஸ்டின் வயது 41 என்பது தெரியவந்தது.

    கடந்த 18-ந் தேதி கடலூருக்கு வந்தவர் மீண்டும் வீட்டிற்கு செல்லாததால் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் அவர்களது உறவினர்கள் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெபஸ்டினை தேடி வந்தது குறிப்பிடத்தக்கதாகும். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்ததற்கான காரணம் என்ன? என்பதனை விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • கிணற்றில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • கிணற்றில் இருந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மணிநதி ஆற்றுப்பாலம் அருகே உள்ள ஒரு கிணற்றில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    தகவல் அறிந்த சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ்குமார் தலைமையிலான வீரர்கள் மூலம் கிணற்றில் இருந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் கருநீலகலர் சட்டைஅணிந்திருந்தார். அவர் யார? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் இறந்தவர் யார்? அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரதுசாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என விசாரணை செய்து வருகின்றனர்.

    ×