என் மலர்
நீங்கள் தேடியது "The body of the teenager"
- விருதுநகரை சேர்ந்த என்ஜினீயர்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளி மலை மலை மீது நேற்று காலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்த கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மேல்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் விருதுநகரை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி பால்பாண்டி (வயது 23) என தெரிய வந்தது. பால்பாண்டி விருதுநகரில் இருந்து வள்ளி மலைக்கு ஏன் வந்தார்.
இரவு நேரத்தில் மலை மீது சென்றது ஏன்? யாராவது பால்பாண்டியை மலை மீது இருந்து தள்ளி கொலை செய்தார்களா? வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற போது தவறி விழுந்தார்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 38). இவர், கடந்த 24-ந்தேதி மாடுகளை ஓட்டிக்கொண்டு நிலத்திற்கு சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை ஆற்காட்டை அடுத்த தாழனூர் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் பிரபு பிணமாக கிடப்பதாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் - சித்தேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே காட்பாடி ரெயில் மார்க்கத்தில் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ் பெக்டர்கள் ஆனந்தன் மற்றும் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பிணத்தை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரித்து வருகின்றனர்.
- அடையாளம் தெரியாமல் திணறல்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூர்-திருத்தணி ரெயில் நிலையத்திற்கு இடையே திருப்பதி ரெயில் மார்க்கத்தில் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணம் கிடப்பதாக அரக்கோ ணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீ சார் சம்பவ இடத்துக்கு சென்ற உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோ ணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- துர்நாற்றம் வீசியது.
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் ஒன்றியம் கடலாடி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மேல்சோழங்குப்பம் பூங்காவனத்தம்மன் கோவில் ஓடை பாலத்தின் கீழ் தண்ணீரில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் மிதந்து கிடந்தன.
இது பற்றி தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கடலாடி ேபாலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு வந்து கவுந்த நிலையில் உள்ள வாலிபரின் உடலை தூக்கிய போது உடல் முழுவதும் அழுகிய நிலையில் கிடந்தது. இறந்து சுமார் 4,5 நாட்கள் ஆகிய நிலையில் இருந்ததால் துர்நாற்றம் வீசியது. உடனே உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இறந்த நபர் பற்றி விசாரணை செய்ததில் அதே பகுதி டேங்க் தெருவை சேர்ந்த வடிவேல் (வயது 30) என்றும் கூலி தொழிலாளி எனவும் தெரியவந்தது.
மேலும் இவருக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகின்றன இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
இறந்த நபர் கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திருப்பவில்லை என்பது தெரிய வந்தன. மேலும் இறந்த நபர் எப்படி இறந்தார் தெரியவில்லை.
முன்விரோதம் காரணமாக யாராவது அடித்து கொலை செய்து போட்டுவிட்டு உள்ளார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.