என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்னூர் ெரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வாலிபர் பிணம்
- யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா விண்ணமங்கலம் மின்னூர் ரெயில்வே கேட் அருகே இன்று காலை அடையாளம் தெரியாத 25 வயது வாலிபர் பெங்களூர் சென்னை மார்க்கமாக செல்லும் ெரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து ஜோலார்பேட்டை ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ெரயிலில் இருந்து விழுந்திருந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? இவர் யார்? எந்த ஊர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






