என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கராபுரத்தில் கிணற்றில் பிணமாக மிதந்த வாலிபர்
- கிணற்றில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
- கிணற்றில் இருந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மணிநதி ஆற்றுப்பாலம் அருகே உள்ள ஒரு கிணற்றில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
தகவல் அறிந்த சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ்குமார் தலைமையிலான வீரர்கள் மூலம் கிணற்றில் இருந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் கருநீலகலர் சட்டைஅணிந்திருந்தார். அவர் யார? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் இறந்தவர் யார்? அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரதுசாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






