search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் திருமணம்"

    குஜராத் மாநிலத்தில் நெடுநாட்களாக திருமணத்துக்கு ஏங்கிய வாலிபருக்கு மேளதாளத்துடன் ஊரை அழைத்து, தடபுடலாக விருந்து வைத்து மணமகள் இல்லாமல் திருமணம் நடத்தப்பட்டது.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம், சபர்கந்தா மாவட்டம், ஹிம்மத்நகர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு பரோட். இவரது மகன் அஜய் பரோட் பிறந்த சில நாட்களிலேயே அவரது தாயார் மரணம் அடைந்தார். பிறவியிலேயே கற்றல் குறைபாட்டுடன் வளர்ந்த அஜய்க்கு சிறு வயதில் இருந்தே இசைமீது அதிக நாட்டம்.

    யார் வீட்டு திருமணம் மற்றும் சுபகாரியங்களில் ஸ்பீக்கரில் பாட்டு சத்தம் கேட்டுவிட்டால் அங்கு ஆஜராகி விடும் அஜய் இசைக்கேற்ப குத்தாட்டம் போட்டு கும்மாளமாக மகிழ்வது வாடிக்கை.

    நாட்கள் செல்லச்செல்ல பருவ வயதை எட்டியபோது உறவினர்களின் இல்லங்களில் நடைபெறும் திருமண விழாக்களை பார்க்கும்போது, தனக்கும் அப்படியொரு சுபநிகழ்ச்சி நடைபெற வேண்டும் என்ற தீராத ஏக்கம் அஜயின் இதயத்தில் நீங்காத இடத்தை பிடித்து விட்டது.

    எனக்கு ஏன் இப்படி எல்லாம் செய்யவில்லை? என்று வெகுளித்தனமாக அஜய் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாத அவரது தந்தை விஷ்ணு பரோட் சுக்குநூறாக நொறுங்கிப் போனார்.

    தற்போது 27 வயதாகும் அஜய் அதற்கேற்ற உடல் மற்றும் அறிவு வளர்ச்சி இல்லாதிருப்பதால் அவருக்கேற்ற மாதிரி மணமகளை தேடுவதில் உள்ள சிக்கலையும் சிரமத்தையும் எப்படி அவரிடம் கூறி விளக்குவது? என்று உறவினர்களும் தடுமாறினர்.

    சமீபத்தில் தனது தந்தையின் சகோதரர் மகனின் திருமணத்துக்கு சென்றுவந்த பிறகு அஜயின் திருமண ஏக்கம் விஸ்வரூபம் அடைந்ததை உணர்ந்த அவரது தந்தை உறவினர்களிடம் பேசி ஒரு முடிவுக்கு வந்தார்.

    அஜய்க்கு திருமணம் செய்விக்க சுபமுகூர்த்த நாள் நிச்சயிக்கப்பட்டது. உற்றார், உறவினர்களுக்கு எல்லாம் அழைப்பிதழ்கள் வினியோகிக்கப்பட்டன.

    திருமணத்துக்கு முன்னர் ‘மெஹந்தி’, ‘நலங்கு’ என மணமகன் வீடு களைகட்டியது. மேளதாளம், பேண்டு வாத்தியம் முழங்க குதிரை மீது அஜய் தலைப்பாகையுடன் மணக்கோலத்தில் பட்டாடையில் ஊர்வலமாக வர ஊரே அவரது பின்னால் திரண்டு வந்தது.



    குஜராத்தி மொழியின் மிக பிரபலமான பாடல்களை வாத்திய குழுவினர் இசைத்தபோது சுமார் 200 பேர் நடனமாட  மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்குமுக்காடிப் போனார் மணமகன் அஜய்.

    ஒருவழியாக மகனின் திருமண ஆசையை நிறைவேற்றிய திருப்தியுடன் தனது வீட்டின் அருகாமையில் உள்ள சமூக நலக்கூடத்தில் சுமார் 800 பேருக்கு தடபுடலான அறுசுவை விருந்து படைத்து மகிழ்ந்தார், விஜய் பரோட்.

    இந்த வினோத திருமணத்துக்கு வந்தவர்களில் பலருக்கு அஜய் பரோட் போல இனி யாரும் பிறக்கவே கூடாது என்னும் வேதனை ஏற்பட்டிருக்கலாம். ஆனால், விஷ்ணு பரோட்டை போன்றதொரு பாசக்கார தந்தை கிடைத்தால் இப்படி பிறந்தாலும் தவறில்லை என்ற எண்ணம் அவர்களில் சிலருக்கு தோன்றி இருக்கலாம்.
    திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவியிடம் உல்லாசமாக இருந்துவிட்டு வேறு திருமணம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகில் உள்ள சித்துவார்பட்டி கிராமம் வடுகம்பட்டியை சேர்ந்த ராமசாமி மகள் ராதிகா (வயது19). இவர் வேடசந்தூரில் உள்ள கலைக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    நான் கல்லூரிக்கு சென்று வரும்போது கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் உள்ள ரெங்காச்சிபட்டியை சேர்ந்த ராசு மகன் திலிப் என்ற கிருபாகரனுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் பாலிடெக்னிக் படித்து வருகிறார். நட்பாக தொடங்கிய எங்கள் பழக்கம் காதலாக மாறியது.

    சம்பவத்தன்று என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்தார். பின்னர் என்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தவே 18.4.2018-ந் தேதியன்று அய்யர்மலை கோவிலில் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு 3 நாட்கள் என்னை தனியாக ஒரு வீட்டில் வைத்து உல்லாசமாக இருந்தார்.

    அதன்பிறகு என்னை வீட்டிற்கு செல்லும்மாறும் சில நாட்கள் கழித்து அழைத்து செல்வதாகவும் கூறினார். ஆனால் அதன்பிறகு பரமேஸ்வரி என்ற பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து நான் கேட்டபோது எனக்கு 19 வயதுதான் ஆகிறது. எனவே நமது திருமணம் செல்லாது. இனிமேல் என்னை பார்க்க வரக்கூடாது என்று மிரட்டி விட்டார்.

    இதுகுறித்து வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்த புகார் மனுவை அளிப்பதாக கூறி இருந்தார்.

    எஸ்.பி. உத்தரவின்பேரில் மீண்டும் ராதிகாவையும், கிருபாகரனையும் தனித்தனியாக அழைத்து போலீசார் விசாரித்தனர். தன் மீது புகார் அளித்ததால் ஆத்திரம் அடைந்த கிருபாகரன் அவரது வீட்டிற்கு சென்று ராதிகாவை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ×