என் மலர்
நீங்கள் தேடியது "youth marriage"
வடமதுரை:
திண்டுக்கல் அருகில் உள்ள சித்துவார்பட்டி கிராமம் வடுகம்பட்டியை சேர்ந்த ராமசாமி மகள் ராதிகா (வயது19). இவர் வேடசந்தூரில் உள்ள கலைக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
நான் கல்லூரிக்கு சென்று வரும்போது கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் உள்ள ரெங்காச்சிபட்டியை சேர்ந்த ராசு மகன் திலிப் என்ற கிருபாகரனுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் பாலிடெக்னிக் படித்து வருகிறார். நட்பாக தொடங்கிய எங்கள் பழக்கம் காதலாக மாறியது.
சம்பவத்தன்று என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்தார். பின்னர் என்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தவே 18.4.2018-ந் தேதியன்று அய்யர்மலை கோவிலில் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு 3 நாட்கள் என்னை தனியாக ஒரு வீட்டில் வைத்து உல்லாசமாக இருந்தார்.
அதன்பிறகு என்னை வீட்டிற்கு செல்லும்மாறும் சில நாட்கள் கழித்து அழைத்து செல்வதாகவும் கூறினார். ஆனால் அதன்பிறகு பரமேஸ்வரி என்ற பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து நான் கேட்டபோது எனக்கு 19 வயதுதான் ஆகிறது. எனவே நமது திருமணம் செல்லாது. இனிமேல் என்னை பார்க்க வரக்கூடாது என்று மிரட்டி விட்டார்.
இதுகுறித்து வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்த புகார் மனுவை அளிப்பதாக கூறி இருந்தார்.
எஸ்.பி. உத்தரவின்பேரில் மீண்டும் ராதிகாவையும், கிருபாகரனையும் தனித்தனியாக அழைத்து போலீசார் விசாரித்தனர். தன் மீது புகார் அளித்ததால் ஆத்திரம் அடைந்த கிருபாகரன் அவரது வீட்டிற்கு சென்று ராதிகாவை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.






