search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாராஹி அம்மன் சன்னதி"

    • வாராஹி, சப்த மாதாக்களில் முதன்மையானவள்.
    • கருடன், சேஷநாகம், மகிஷன், சிங்கம், முதலியவை இவள் வாகனங்கள்.

    ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனை மாய்த்து தந்தத்தால் ஆன மாலை சூடிய பூவராக மூர்த்தியின் ஸ்த்ரீ அம்சமான

    வாராஹி, சப்த மாதாக்களில் முதன்மையானவள்.

    இவளே வாக்தேவி என்று ரிக் வேதம் சொல்லும்.

    பெண்மையின் மஹா சக்தியான இவள் மனித குலத்தின் பரிணாம வளர்ச்சிக்கு ஆதாரம்.

    வெவ்வேறு வகையான கோலங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, சுதை பத்மம், மீன், குழந்தை

    முதலியவற்றைக் கையில் ஏந்தி காட்சி தருபவள்.

    கருடன், சேஷநாகம், மகிஷன், சிங்கம், முதலியவை இவள் வாகனங்கள்.

    ஸ்ரீவித்யா உபாசனையில் பரவித்யாவாக போற்றப்படுபவள்.

    விஷ்ணுவின் யோகமாயையான இவளே ஸ்ரீலலிதையின் தண்ட நாயகியாகவும், தண்டினி என்றும் வழங்கப்படுகிறாள்.

    பூமி தானேஸ்வரியான இவள் நமக்கு பூமி சம்மந்தமான சொத்துக்கள் பெறவும், வழக்குகள் வியாஜ்யங்கள் இவற்றில் வெற்றி பெறவும் உதவுவாள்.

    இவளை வழிபட வாஸ்து தோஷம் நீங்கும்.

    தானிய வளம் பெருக இவள் கருணை வேண்டும்.

    இவளை உபாசிப்பவர்களை எதிரிகள் எதிர்க்கமாட்டார்கள்.

    வணங்குபவர்களின் குலத்திற்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் தந்து சகல சங்கடங்களிலிருந்து

    நிவாரணம் தரும் இந்த மஹா சக்தியான கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான ஸ்ரீவராஹி,

    அஸ்வாரூடா, கஜாரூடா, வியாக்ராரூடா, மந்திர வாராஹி சொப்ன வாராஹி என்று பல ரூபங்களில் தரிசனம் தருகிறாள்.

    இவ்வளவு சிறப்புகள் பெற்ற இந்த ஜகன்மாதா இத்திருத்தலத்தில் அணி அண்ணாமலையர் சன்னதியின் மேற்கு புறத்தில் வீற்றிருந்து அருள்பாளித்து வருகிறாள்.

    ×