search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன ஓட்டிகள் அவதி"

    • செயல்படாத சிக்னலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்
    • திருமாநிலையூர் பகுதியில்

    கரூர்

    கரூர், திருமாநிலையூரில் போக்குவரத்து சிக்னல்களை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் திருச்சி சாலை, திருமாநிலையூரில், போக்குவரத்தை கட்டுப்படுத்த, சில மாதங்களுக்கு முன், சிக்னல் கம்பம் அமைக்கப்பட்டது. இது முறையாக இயங்கிய நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல், விபத்தின்றி வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலையில், தற்போது சிக்னல் விளக்குகள் சேதமடைந்துள்ளன. எனவே, திருமாநிலையூர் பகுதியில் சிக்னல் விளக்குகளை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • பண்ருட்டியில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
    • திடீர் மழையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    கடலூர்:

    பண்ருட்டியில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது திடீரென இடி, மின்னல், சூறைகாற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில்மழைநீர் வெள்ளநீராக பெருக் கெடுத்து ஓடியது. நகரின் முக்கிய தெருக்கள், எல்.என்.புரம் உள்ளிட்டபகுதிகளில் மின்தடை செய்யப்பட்டது.பலகிரா மங்கள் இருளில்மூழ்கியது. திடீர் மழையால் வாகன ஓட்டி கள் கடும் அவதிக்கு ள்ளா கினர்.வாகனங்க ளில்முகப்பு விளக்கை எரியவி ட்டபடி ஊர்ந்து சென்றனர். தெருக்கள் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தது பண்ருட்டி சென்னை சாலை, பண்ருட்டி கும்பகோ ணம் சாலை குளம் போல காட்சியளித்தது. சாலை களில் குண்டும் குழியுமான பள்ளங்களில் வாகன ஓட்டிகள் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக இருந்தது.

    • புகார் செய்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சிய போக்கால் விட்டுவிடுகின்றனர்.
    • பாலத்தின் மீது இரவு நேரத்தில் சிறுசிறு விபத்துக்கள் தினமும் நடைபெற்று வருகிறது.

    காவேரிப்பட்டணம்,

    காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் தினமும் சொந்த வேலையாகவும், அரசு வேலையாகவும் கிருஷ்ணகிரிக்கு தென்பெண்ணை ஆற்று பாலத்தின் மீது சென்று வருகின்றனர். தென்பெண்ணை ஆற்றின் மீது பாலத்தில் உள்ள மின் விளக்குகள் டியூப் லைட்டுகள் போடப்பட்டுள்ளன. ஆனால் ஒரு டியூப் லைட் கூட எரிவதில்லை.

    பாலத்தின் மீது லைட் எரிவது இல்லை என புகார் செய்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சிய போக்கால் விட்டுவிடுகின்றனர். இதனால் பாலத்தின் மீது இரவு நேரத்தில் சிறுசிறு விபத்துக்கள் தினமும் நடைபெற்று வருகிறது. இதேபோல காவேரிப்பட்டணம் -சேலம் மெயின் ரோட்டில் உள்ள காவல் நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதிகளில் மின் விளக்குகள் சரியான முறையில் எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில் காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றின் மீது டியூப்லைட்கள் உள்ளன. இதில் வருகிற வெளிச்சம் போதுமானதாக இல்லை. மேலும் மின் விளக்குகள் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இதை எந்த அதிகாரியும் கண்டுகொள்வதில்லை. இதனால் ஆற்றுப்பாலத்தில் தினமும் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பாலத்தின் மீது உள்ள டியூப் லைட்டுகளை மாற்றிவிட்டு எல்.இ.டி. பல்புகளை மாற்றினால் ஆற்றுப்பாலத்தில் நல்ல வெளிச்சமாக இருக்கும்.

    இதனால் விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். மேலும் பாலத்தில் மீது உள்ள ரோடுகள் பெயர்ந்து விட்டதால் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளன. இதை உடனடியாக சரி செய்து வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

    • கொடைக்கானல் நகர் மற்றும் மேல் மலை, கீழ் மலை கிராமங்களில் ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் சாரல் மழை, அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது.
    • இந்த மலைச்சாலையை விரைந்து சீரமைக்க பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்காலை:

    கொடைக்கானல் நகர் மற்றும் மேல் மலை, கீழ் மலை கிராமங்களில் ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் சாரல் மழை, அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுவது டன் மின்தடையும் ஏற்படு கிறது. இதன்காரணமாக நகர் பகுதி மற்றும் கிராமப் பகுதி பொது மக்கள் கடும் அவதி அடைகின்றனர்.சாலையோரங்கள் மற்றும் மின் கம்பங்கள் உள்ள இடங்களில் விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பல முறை கோரிக்கை வைத்தும் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.

    இதேபோல் மேல்மலை கிராமமான மன்னவனூர் பகுதியில் உள்ள நெடுஞ்சா லைக்கு சொந்தமான பிரதான சாலை குண்டும் குழியுமாகவும் சேரும் சகதியுமாகவும் உள்ளது. இதனால் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. நடந்து செல்வதற்கு கூட ஏற்ற சாலைகளாக இல்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு.தற்போது மன்னவனூர் பகுதி சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது.

    ஆனால் கொடைக்கா னலில் இருந்து மன்னவனூர் சூழல்சுற்றுலா மையம் செல்லும் வரையிலும் அதைத் தாண்டி கவுஞ்சி, கிளாவரை, பூண்டி உள்ளி ட்ட மலை கிராமங்கள் செல்லும் பிரதான சாலை கள்மிகவும் மோசமாக சிதலமடைந்துள்ளது.இதனால் உள்ளூர் பொது மக்களும் சுற்றுலா பயணி களும் வாகனங்களை இயக்குவதில் சிரமம் அடைந்து வருகின்றனர்.இந்த மலைச்சாலையை விரைந்து சீரமைக்க பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிராமப்புற சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடு த்துள்ளனர்.

    • பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா நகரில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகிறது. விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
    • விவசாயிகள் அறுவடை செய்யும் பச்சை தேயிலை மூட்டைகளை தினமும் ஏற்றி செல்லும் சரக்கு லாரிகள் மழைக்காலத்தில் சேற்றில் சிக்கி விடுகிறது.

    ஊட்டி:

    கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் சட்டப்பிரிவு- 17 நிலம் உள்ளது. இதனால் அடிப்படை வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆதிவாசி கிராமங்களுக்கு உச்சநீதிமன்ற அனுமதி பெற்று அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஆனால் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சாலை உள்பட எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்களுக்கு சாலை வசதி பூர்த்தி செய்யப்படவில்லை. தொடர்ந்து பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா நகரில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகிறது. விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் அவசர காலங்களில் ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    இதனால் நோயாளிகள், கர்ப்பிணிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் விவசாயிகள் அறுவடை செய்யும் பச்சை தேயிலை மூட்டைகளை தினமும் ஏற்றி செல்லும் சரக்கு லாரிகள் மழைக்காலத்தில் சேற்றில் சிக்கி விடுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான வாகன டிரைவர்கள் அப்பகுதிக்கு வர தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் விவசாயிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    எனவே அண்ணாநகர் பகுதியில் தார் சாலை வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இனிவரும் காலங்களில் சாலை வசதி அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறும் போது, வனவிலங்குகள் நடமாட்டம், சாலை வசதி இன்மை உள்ளிட்ட காரணங்களால் கடும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே அதிகாரிகள் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×