என் மலர்
உள்ளூர் செய்திகள்

செயல்படாத சிக்னலால் வாகன ஓட்டிகள் அவதி
- செயல்படாத சிக்னலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்
- திருமாநிலையூர் பகுதியில்
கரூர்
கரூர், திருமாநிலையூரில் போக்குவரத்து சிக்னல்களை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் திருச்சி சாலை, திருமாநிலையூரில், போக்குவரத்தை கட்டுப்படுத்த, சில மாதங்களுக்கு முன், சிக்னல் கம்பம் அமைக்கப்பட்டது. இது முறையாக இயங்கிய நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல், விபத்தின்றி வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலையில், தற்போது சிக்னல் விளக்குகள் சேதமடைந்துள்ளன. எனவே, திருமாநிலையூர் பகுதியில் சிக்னல் விளக்குகளை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story