search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனத்துறையினர் தீவிரம்"

    • தேன்கனிக்கோட்டை அருகே சுற்றித் திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்.
    • வனப்பணியாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம். தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட, தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தண்டரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட, இஸ்லாம்பூர் கிராமம் அருகில், சனத்குமார் ஓடைப் பகுதியில் கடந்த மாதம் 28-ந் தேதி அப்பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த ஆடுகளை சிறுத்தை ஒன்று தாக்கி, ஒரு ஆட்டினை இழுத்து சென்றதாக தகவல் கிடைக்கப்பெற்றது.

    இந்த தகவலின் பேரில், தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் விஜயன், தலைமையிலான வனப்பணியாளர்கள் அடங்கிய குழுவினர், மேற்படி இடத்தை தணிக்கை செய்து, சிறுத்தை நடமாட்டம் இருப்பதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டது.

    சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க, தானியங்கி கேமராக்கள் பொருத்தப் பட்டு, வனச்சரக அலுவலர் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் மற்றும் வன கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் பிரகாஷ், ஆகியோர் இரவு பகலாக தொடர் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    சிறுத்தை நடமாட்டம் உள்ள தேன்கனிக்கோட்டை காப்புக்காட்டிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியைச் சுற்றி சாமிபுரம், அடவிசாமிபுரம், அடைகலபுரம், தண்டரை, இஸ்லாம்பூர், பன்டேஸ்வரம், பேலூர், எண்ணேஸ்வரம். பெண்ணங்கூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிரா மங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் உள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பா கவும், எச்சரிக்கையாகவும் இருக்கும்படி வனப்பணி யாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    கடந்த 4-ந் ேததி சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட மேற்படி பகுதியில் ஓசூர் வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர் தலைமையில் தணிக்கை மேற்கொண்டு, டிரோன், தொலைநோக்கி கள் மற்றும் கேமராக்கள் கொண்டு மேற்படி பகுதியை ஆய்வு செய்து, வன கால்நடை உதவி மருத்துவர் ஆலோ சனைப்படி கூண்டுகள் வைக்கப்பட்டு உள்ளது.

    • ட்ரோன் கேமிரா மூலம் காட்டுயானையை வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மயக்க ஊசி செலுத்தி பிடித்து கும்கி யானைகளின் உதவியுடன் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்து விள மூண்டி வன சரகத்திற்கு உட்பட்ட அய்யம்பாளையம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பார்வை குறைந்த ஒற்றை காட்டுயானை கிராமத்துக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டு வந்த விலை நிலங்களில் வாழை மரங்களை சேதப்படுத்தியும் மற்றும் வனத்துறையினர் வாகனத்தையும், வீடுகளையும், தண்ணீர் குழாய்களையும், கம்பி வேலைகள் ஆகியவ ற்றை சேதப்படுத்தியும், பொது மக்களை அச்சுறுத்தியும் சென்றது.

    இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் அந்த ஒற்றை காட்டு யானையை மய க்க ஊசி செலுத்தி பிடி க்கும்மாறு கோரிக்கை விடுத்தனர்.

    அதனைத்தொ டர்ந்து வனத்துறையினர் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கபில்தேவ் மற்றும் முத்து என்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது.

    மேலும் வாழை மரங்களை சேதப்படுத்தியும், பொது மக்களை அச்சுறுத்தி சென்று வனப்பகுதிக்குள் சுற்றி வரும் ஒற்றை காட்டு யானையை பிடிப்பதற்காக வன அதிகாரி கள் உட்பட 15 பேர் கொண்ட வனத்துறையி னர் குழுக்களாக இணைந்து சென்று 2 நாட்களாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் இது வரை அந்த ஒற்றை காட்டு யானை வனத்துறையினர்கள் பார்வையில் தட்டுப்ப டவில்லை. மேலும் தொடர்ந்து இன்று 3-வது நாளாக வனப்பகுதியில் ட்ரோன் கேமிரா மூலம் காட்டுயானை எங்கு உள்ளது என கண்காணித்து தேடும் பணியில் ரேஞ்சர் கணேஷ் பாண்டியன் தலைமையில் 15 பேர் கொண்ட வனத்துறையின ர்கள் குழுக்களாக பிரிந்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேற்படி காட்டு யானையை பார்த்தவுடன் கும்கி யானைகளுடன் சென்று மயக்க ஊசி செலுத்தி பிடித்து கும்கி யானைகளின் உதவியுடன் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    • கடம்பூர் அடுத்த தட்டப் பள்ளம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
    • ஆக்ரோஷத்துடன் பின் தொடர்ந்து அவர்களை ஒற்ைற யானை விரட்டியது.

    சத்தியமங்கலம், 

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் குன்றி மலைப்பகுதியை சேர்ந்தவர் பொம்மேகவுடர் (55) விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் சித்துமரி (65) கூலி தொழிலாளி.

    நேற்று மதியம் பொம்மேகவுடர் மாக்கம்பாளையத்தில் மளிகை பொருட்களை வாங்கி கொண்டு நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார்.

    இதேபோல் குன்றி மலைப்பகுதியில் இருந்து சித்துமரி வேறு ஒரு மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு மாக்கம்பா–ளையம் நோக்கி வந்தார்.

    அப்போது அவர்கள் கடம்பூர் அடுத்த தட்டப் பள்ளம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வனப்பகுதி யில் இருந்து வெளியேறிய ஒரு ஒற்றை யானை திடீரென சாலைக்கு வந்தது.

    யானையை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரும் அதிர்ச்சியடைந்து மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

    இதில் ஆக்ரோஷத்துடன் பின் தொடர்ந்து அவர்களை ஒற்றை யானை விரட்டியது. ஒரு கட்டத்தில் பொம்மேகவுடர், சித்துமரி ஆகியோரை யானை துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்து அடித்து கொன்றது.

    மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதுபற்றி தெரிய வந்ததும் கடம்பூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து யானை தாக்கி இறந்த 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிேசாதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்க ளது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படை க்கப்படுகிறது.

    இதனால் பலியானவர்களின் உறவினர்கள் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

    மேலும் யானை தாக்கிய பலியானவர்களின் குடும்பத்துக்கு வனத்துறை சார்பில் தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவியும் வழங்கப்படுகிறது.

    இதற்கிடையே 2 பேரை அடித்து கொன்ற ஒற்றை யானையை கண்காணித்து விரட்ட கடம்பூர் வனச்சரகர் இந்துமதி தலைமையில் வனத்துறையினர் குழு அமைத்துள்ளனர். அவர்கள் யானையின் நடமாட்டத்தை கண்டறிந்து வனப்பகுதி க்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் ஒற்றை யானை நடமாட்டம் இருப்பதால் மாக்கம்பாளையம் சுற்று வட்டார பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.

    ×