search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "for the 3rd day"

    • ட்ரோன் கேமிரா மூலம் காட்டுயானையை வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மயக்க ஊசி செலுத்தி பிடித்து கும்கி யானைகளின் உதவியுடன் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்து விள மூண்டி வன சரகத்திற்கு உட்பட்ட அய்யம்பாளையம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பார்வை குறைந்த ஒற்றை காட்டுயானை கிராமத்துக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டு வந்த விலை நிலங்களில் வாழை மரங்களை சேதப்படுத்தியும் மற்றும் வனத்துறையினர் வாகனத்தையும், வீடுகளையும், தண்ணீர் குழாய்களையும், கம்பி வேலைகள் ஆகியவ ற்றை சேதப்படுத்தியும், பொது மக்களை அச்சுறுத்தியும் சென்றது.

    இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் அந்த ஒற்றை காட்டு யானையை மய க்க ஊசி செலுத்தி பிடி க்கும்மாறு கோரிக்கை விடுத்தனர்.

    அதனைத்தொ டர்ந்து வனத்துறையினர் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கபில்தேவ் மற்றும் முத்து என்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது.

    மேலும் வாழை மரங்களை சேதப்படுத்தியும், பொது மக்களை அச்சுறுத்தி சென்று வனப்பகுதிக்குள் சுற்றி வரும் ஒற்றை காட்டு யானையை பிடிப்பதற்காக வன அதிகாரி கள் உட்பட 15 பேர் கொண்ட வனத்துறையி னர் குழுக்களாக இணைந்து சென்று 2 நாட்களாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் இது வரை அந்த ஒற்றை காட்டு யானை வனத்துறையினர்கள் பார்வையில் தட்டுப்ப டவில்லை. மேலும் தொடர்ந்து இன்று 3-வது நாளாக வனப்பகுதியில் ட்ரோன் கேமிரா மூலம் காட்டுயானை எங்கு உள்ளது என கண்காணித்து தேடும் பணியில் ரேஞ்சர் கணேஷ் பாண்டியன் தலைமையில் 15 பேர் கொண்ட வனத்துறையின ர்கள் குழுக்களாக பிரிந்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேற்படி காட்டு யானையை பார்த்தவுடன் கும்கி யானைகளுடன் சென்று மயக்க ஊசி செலுத்தி பிடித்து கும்கி யானைகளின் உதவியுடன் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    • 3-வது நாளாக மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை பெய்துள்ளது.
    • மாவட்டத்தில் அதிகபட்சமாக கோபியில் 94 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி ரோடுகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

    இந்நிலையில் நேற்று 3-வது நாளாக மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை பெய்துள்ளது. குறிப்பாக கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது.

    இதனால் கோபிசெட்டிபாளையம், மொடச்சூர், குள்ளப்பாளையம், வெள்ளாளபாளையம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக கோபியில் 94 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதேப்போல் கொடிவேரி, சத்தியமங்கலம், குண்டேரிபள்ளம், பெருந்துறை, கவுந்தப்பாடி, வரட்டுபள்ளம் போன்ற பகுதிகளும் விடிய, விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான அணைகள், ஏரி குளங்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கோபி-94, கொடிவேரி-72, சத்தியமங்கலம்-58, குண்டேரி பள்ளம்-56, பெருந்துறை-27, கவுந்தப்பாடி-26.8, வரட்டு பள்ளம்-11, தாளவாடி-10.4, பவானிசாகர்-8.20, சென்னிமலை-7, நம்பியூர்-2.

    ×