search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடகொரியா ஏவுகணை"

    • தேசிய பாதுகாப்பை பெரிதும் பாதிக்கும் விஷயமாகும்.
    • ஜப்பானிடம் வடகொரியா தெரிவித்துள்ளது.

    வடகொரியா, கடந்த ஆகஸ்டு மாதம், உளவு செயற்கைக் கோளை ஏவியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. பின்னர் அக்டோபரில் 2-வது முறையாக ஏவிய உளவு செயற்கைக் கோளும் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் 3-வது முறையாக உளவு செயற்கைக் கோளை விண்ணில் ஏவி உள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இந்த தகவலை ஜப்பானிடம் வடகொரியா தெரிவித்துள்ளது.

    அதன்படி வருகிற 30-ந்தேதிக்குள் உளவு செயற்கைக் கோளை ஏவுவதற்கான தனது திட்டத்தை ஜப்பானிடம் வடகொரியா கூறியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இது தொடர்பபாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறும்போது, வடகொரியா செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதே நோக்கமாக இருந்தாலும், ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் தொடர் மீறலாகும்.

    இது தேசிய பாதுகாப்பை பெரிதும் பாதிக்கும் விஷயமாகும். அமெரிக்கா, தென்கொரியா மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து செயற்கைக் கோள், ஏவுகணை ஏவுவதை தொடர வேண்டாம் என்று வடகொரியாவை ஜப்பான் வலியுறுத்தும் என்றார்.

    • வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கையை ரஷியா, சீனா தங்களது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தின.
    • கடந்த மாதம் வடகொரிய ராணுவ அணிவகுப்பில் ரஷியா, சீனா அதிகாரிகள் பங்கேற்றுள்ளார்கள்.

    நியூயார்க்:

    வடகொரியா ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. தென்கொரியா-அமெரிக்கா இணைந்து போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏவுகணை சோதனை நடத்துகிறது.

    சமீபத்தில் வடகொரியா 2-வது முறையாக ராணுவ உளவு செயற்கைகோளை விண்ணில் ஏவியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

    இந்தநிலையில் வடகொரியாவில் ஏவுகணை சோதனைகள் நடைபெறுவதை கண்டித்து நடவடிக்கை எடுக்கும் விதமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தில் விவாதம் கொண்டு வரப்பட்டது.

    இதில் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள ரஷியா, சீனா ஆகியோரை தவிர 13 உறுப்பினர்கள் வடகொரிய ராணுவம் உளவு செயற்கை கோளை ஏவுவதற்கு கண்டனம் தெரிவித்தன.

    ஆனால் வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கையை ரஷியா, சீனா தங்களது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தின. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

    இதுகுறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன் பீல்டு கூறும்போது, "வடகொரியா விவகாரம் எங்களை ஒன்றிணைக்கும் ஒரு பிரச்சினையாக இருக்க வேண்டும். ஆனால் 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சீனா, ரஷியாவின் இடையூறுகளால் இந்த கவுன்சில் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டது. வடகொரியாவின் அணுசக்தி அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதற்கான தங்கள் பொறுப்பை ரஷியாவும், சீனாவும் ஏற்கவில்லை.

    கடந்த மாதம் வடகொரிய ராணுவ அணிவகுப்பில் ரஷியா, சீனா அதிகாரிகள் பங்கேற்றுள்ளார்கள். இரு நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறுகிறார்கள். கவுன்சில் நடவடிக்கைகளை தொடர்ந்து தடுக்கிறார்கள்.

    கடந்த ஆண்டு மே மாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியா மீது புதிய தடைகளை விதிக்கும் தீர்மானத்தை சீனாவும், ரஷியாவும் தங்களது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவின் முதல் கப்பல் வந்தபோது, வடகொரிய அடுத்தடுத்து ஏவுகணைகளை செலுத்தியது
    • தற்போது 2-வது கப்பல் வந்தநிலையில், வடகொரியா இதுகுறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை

    வடகொரியாவின் ராணுவ அத்துமீறல்களை எதிர்கொள்ள தென்கொரியா, அமெரிக்காவுடன் கைகோர்த்துள்ளது. சில தினங்களுக்கு முன் யுஎஸ்எஸ் கென்டுக்கி (USS Kentucky) எனும் அமெரிக்க அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல், தென் கொரிய துறைமுகத்தை வந்தடைந்தது.1980-களுக்குப் பிறகு தென்கொரியாவிற்கு வருகை தரும் ஒரு அமெரிக்க அணு ஆயுத ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் இதுதான்.

    மேலும் வட கொரியாவுடன் அணுஆயுத போர் ஏற்பட்டால் பதிலடி கொடுக்க அமெரிக்காவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. யுஎஸ்எஸ் கென்டுக்கியின் வருகைக்குப் பிறகு கடந்த வாரம், 2 வெகுதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா ஏவியது. நேற்று முன் தினமும் மீண்டும் சில குரூஸ் ஏவுகணைகளை ஏவியது.

    இந்த நிலையில் இன்று இரண்டாவதாக யுஎஸ்எஸ் அனாபோலிஸ் (USS Annapolis) எனும் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தென் கொரியாவை வந்தடைந்தது.

    "தென்கொரியாவின் தெற்கு தீவான ஜெஜூவில் உள்ள கடற்படை தளத்தில் அது நிறுத்தப்பட்டிருக்கிறது. அறிவிக்கப்படாத சில செயல்பாடுகளுக்காக ராணுவ தளவாடங்கள் அதில் ஏற்றப்பட்டிருக்கிறது. இரு நாடுகளுக்கான கூட்டணியின் 70-வது ஆண்டு நிறைவை நினைவு கூறும் வகையில் யுஎஸ்எஸ் அனாபோலிஸின் வருகையுடன் ஒரு ஒருங்கிணைந்த பாதுகாப்பு நிலைப்பாட்டை வலுப்படுத்த இருநாட்டு கடற்படைகளும் திட்டமிட்டுள்ளன" என்று தென்கொரிய கடற்படை தெரிவித்துள்ளது.

    வெகுதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை தாங்கிய நீர்மூழ்கிக் கப்பலான அமெரிக்காவின் யுஎஸ்எஸ் கென்டுக்கி, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தென் கொரிய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.

    யுஎஸ்எஸ் கென்டுக்கியை போல் யுஎஸ்எஸ் அனாபோலிஸ் அணுஆயுதம் தாங்க கூடியதல்ல. ஆனால் போரில் கடற்படை தாக்குதல் மற்றும் கப்பல் எதிர்ப்பிலும் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பிலும் நிபுணத்துவம் பெற்றது.

    கடந்த செப்டம்பரில் கொரிய தீபகற்பத்தில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் தென்கொரியா மற்றும் ஜப்பானுடன் முத்தரப்பு நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியிலும் இது இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தென்கொரியாவில் அமெரிக்க ராணுவம் அதிகரிப்பை தொடர்ந்து வடகொரியா எச்சரிக்கை
    • இன்று காலை குரூஸ் ஏவுகணைகளை அதிக அளவில் ஏவி அச்சுறுத்தியது

    ராணுவ உதவி அளிக்கும் விதமாக தென்கொரிய- அமெரிக்க அணுஆயுத ஆலோசனை குழுவின் முதல் சந்திப்பு தென்கொரியாவில் நடந்தது.

    இதன் பின்னணியில் அமெரிக்காவின் யூஎஸ்எஸ் கெண்டுக்கி (USS Kentucky) எனும் அணு ஆயுத ஏவுகணையை தாங்கி செல்லும் 18,750 டன் எடையுள்ள நீர்மூழ்கி கப்பல் ஒன்று தென்கொரியாவின் தென்கிழக்கு துறைமுக பூஸான் நகரை வந்தடைந்தது.

    "பல ராணுவ மூலோபாயங்களை கையாண்டு வருவதையும், அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் நீர்மூழ்கி கப்பலை தென்கொரியாவில் நிலைநிறுத்துவதையும் அமெரிக்கா நிறுத்தாவிட்டால் பதில் நடவடிக்கையாக அணுஆயுத பிரயோகம் செய்வோம்" என வடகொரியா எச்சரித்தது.

    தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா நெடுந்தூரம் சென்று தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் 2 குறுகிய தூர ஏவுகணைகளையும் இம்மாதம் 12-ம்தேதி பரிசோதனை செய்தது. இதனையடுத்து கொரிய எல்லையில் பதட்டம் உருவானது. இதற்கிடையே குரூஸ் ஏவகணைகளை அடுத்தடுத்து ஏவியது.

    இதுகுறித்து தென்கொரியா அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வடகொரியா ஏதேனும் அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அந்நாட்டின் கிம் ஜாங்-உன் ஆட்சியின் முடிவாக அது அமைந்துடும். தென்கொரிய- அமெரிக்க கூட்டணிக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் நடைபெற்றால் அதற்கு உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    வடகொரியாவின் அணுஆயுத மற்றும் ஏவுகணை பரிசோதனைகளும் ஐநா பாதுகாப்பு சபையின் தீர்மாங்னகளுக்கெதிரான சட்ட விரோத நடவடிக்கைகளாகும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த புதன்கிழமை அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தென்கொரியா பகுதியில் தென்பட்டது
    • ஏற்கனவே ஏவுகணைகளை வீசிய வடகொரியா இன்று அதிக அளவில் குரூஸ் ஏவுகணையை பயன்படுத்தியுள்ளது

    கொரியா தீபகற்பத்தின் மேற்கு பகுதியில் உள்ள கடலில் வடகொரியா குரூஸ் ஏவுகணைகளை அடுத்தடுத்து செலுத்தியுள்ளது அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

    ஆணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதித்துள்ளது. அதையும் தாண்டி அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

    வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தும்போதெல்லாம், தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கொரிய கடற்பகுதியில் ராணுவ பலத்தை அதிகரிக்கும்.

    கடந்த புதன்கிழமை தென்கொரிய புகுதியில் அணுஆயுத ஏவுகணைகளை செலுத்தும் ஆற்றல் படைத்த அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தென்பட்டுள்ளது. இதனால் கொரியா ஏவுகணைகளை வீசி எச்சரித்தது.

    இதற்கிடையே தென்கொரியாவில் அமெரிக்காவின் போர்க்கப்பல், ஏவுகணைகள் செலுத்தும் நீர்மூழ்கிக் கப்பல்கள், குண்டுகள் தென்கொரியா கடற்கரையில் காணப்படுவது, நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான அளவுகோல் என வடகொரிய எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், தற்போது குரூஸ் ஏவுகணைகளை அடுத்தடுத்து வீசியுள்ளது. குரூஸ் ஏவுகணை வழிகாட்டுதல் ஏவுகணை என்றும் அழைக்கப்படும். தரை மற்றும் கடலில் எதிரிகளின் இலக்குகளை துல்லியாக கணக்கிட்டு தாக்கக்கூடிய வல்லமை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது.
    • கொரியா தீபகற்பத்தில் ஜப்பான் கடல் பகுதியில் அணு ஆயுதம் தாங்கிய போர் கப்பலை நிறுத்த அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.

    பியாங்யாங்:

    வடகொரியா அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை நடத்தி வருகிறது. தென் கொரியாவுடனான மோதல் காரணமாகவும், அமெரிக்கா-தென்கொரியா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிராகவும் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்த ஆண்டு தொடக்கம் முதலே வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தியது. அமெரிக்கா-தென்கொரியாவின் எச்சரிக்கையை மீறி வடகொரியா சோதனையை நடத்தி வருகிறது.

    இந்தநிலையில் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது. வட கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா ஏவி சோதனை நடத்தியதாக தென் கொரியா தெரிவித்தது.

    இந்த ஏவுகணை, ஜப்பான் கடல் பரப்பில் விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தென்கொரியாவின் கூட்டு படைத்தலைவர்கள், இன்று காலை வடகொரியா தனது ஏவுகணையை ஏவியதை உறுதிப்படுத்தினர்.

    ஆனால் ஏவுகணை எவ்வளவு தூரம் பறந்தது உள்ளிட்ட கூடுதல் விவரங்களை தெரிவிக்கவில்லை. ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, வடகொரியா ஏவுகணையை ஏவியதை கண்டறிந்து உள்ளதாக தெரிவித்தது.

    கொரியா தீபகற்பத்தில் ஜப்பான் கடல் பகுதியில் அணு ஆயுதம் தாங்கிய போர் கப்பலை நிறுத்த அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. இதற்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தங்களது வான் வெளியில் அமெரிக்க உளவு விமானம் அத்துமீறி நுழைந்ததாக வடகொரியா குற்றம் சாட்டியது. வட கொரியா வான்வெளியில் நுழையும் அமெரிக்கா உளவு விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தது.

    இந்த நிலையில் தான் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது. இதனால் கொரியா தீப கற்பத்தில் பதற்றம் நிலவுகிறது.

    ×