search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி சாரா நிதி நிறுவனங்கள்"

    • பஜாஜ் ஃபின்சர்வ் இரண்டு டிஜிட்டல் கடன் திட்டங்களை செயல்படுத்தி வந்தது
    • கீ ஃபேக்ட்ஸ் ஸ்டேட்மென்ட் விவரங்கள் முறையாக இல்லை என ஆர்பிஐ தெரிவித்தது

    இந்தியாவின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்களில் (NBFC) ஒன்று, பஜாஜ் ஃபின்சர்வ் (Bajaj Finserv).

    தனி நபர் கடன் மற்றும் வர்த்தக கடன் வழங்குவதில் முன்னணியில் உள்ள நிறுவனமான பஜாஜ் ஃபின்சர்வ், நிதி வர்த்தகத்தில் புதுமையாக டிஜிட்டல் முறையில் கடன் வழங்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில், நேற்று இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி (RBI), இந்நிறுவனம் "ஈகாம்" (eCOM) மற்றும் "இன்ஸ்டா ஈஎம்ஐ கார்டு" (Insta EMI Card) எனும் பெயரில் வழங்கி வந்த இரண்டு டிஜிட்டல் கடனுதவி சேவைகளை தொடர தடை விதித்துள்ளது.

    ஒவ்வொரு கடன் வழங்கும் நிறுவனமும் வெவ்வேறு கட்டண விகிதம் வசூலிக்கின்றன; கடனை திருப்பி செலுத்துவதிலும் வெவ்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளன. எனவே கடன் பெறுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்களை எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு நிதி நிறுவனமும் வழங்க வேண்டும்.

    இந்த தகவல்கள் அடங்கிய விவர பட்டியல், "முக்கிய தகவல்களுக்கான குறிப்பு" என்றும் "கீ ஃபேக்ட்ஸ் ஸ்டேட்மென்ட்" (Key Facts Statement) என்றும் அழைக்கப்படும். இப்பட்டியல் மூலம் நிதி நிறுவனத்தின் வட்டி விகிதம், இதர கட்டணங்கள், கால தாமதத்திற்கான வட்டி விகிதம், கடனை வசூல் செய்யும் முறைகள், தவணைக்காலம், காப்பீட்டு தொகை விவரங்கள், முன்னதாகவே அசலை செலுத்தினால் அதற்கான அபராதம் உள்ளிட்ட கடன் பெறுவோர் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்து விவரங்களையும் வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடியும்.

    பஜாஜ் ஃபின்சர்வ், இந்திய ரிசர்வ் வங்கியின் சில விதிமுறைகளை மீறியதாகவும், "கீ ஃபேக்ட்ஸ் ஸ்டேட்மென்ட்" விவர குறிப்பில் கடன் பெறுவோர் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்களை முறையானபடி வழங்கவில்லை என்றும், இதன் காரணமாக அந்நிறுவனத்திற்கு டிஜிட்டல் முறையில் கடன் வழங்க தடை விதிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

    இந்த குறைபாடுகளை பஜாஜ் ஃபின்சர்வ் சரி செய்த பின் அனுமதி வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    ×