search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லியோ படம்"

    • . திருப்பூர் மாவட்டத்தில் லியோ திரைப்படம் மொத்தம் 56 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்த தியேட்டர்களில் இன்று காலை முதலே ரசிகர்கள் குவிந்தனர்.
    • முதல் காட்சியையொட்டி மேள தாளம் முழங்க ஆடி பாடி மகிழ்ந்தனர்

    திருப்பூர்:

    நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியானது. இதனை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் லியோ திரைப்படம் மொத்தம் 56 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்த தியேட்டர்களில் இன்று காலை முதலே ரசிகர்கள் குவிந்தனர். காலை 9மணிக்கு படம் திரையிடப்பட்டது. மதியம் 12-30மணிக்கு படம் முடிந்து வெளியே வந்தனர். திருப்பூரில் உள்ள பிரபல தியேட்டரில் லியோ திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வந்த ரசிகர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

    லியோ திரைப்படம் வேற லெவலாக உள்ளது. டைரக்டர் லோகேஷ் கனகராஜ் பட்டய கிளப்பியுள்ளார். இதற்காக அவர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். ஆரம்பம் முதல் கடைசி வரை படம் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது. அனைவருக்கும் பிடிக்கும் படமாக லியோ இருக்கும். தொடர்ந்து விடுமுறை என்பதால் லியோ வசூலில் சாதனை படைப்பது உறுதி. இப்படத்தில் அரசியல் எதுவும் கிடையாது. தொடர்ந்து விடுமுறை என்பதால் மீண்டும் இந்த திரைப்படத்தை பார்ப்போம். அனிருத் இசை மிகவும் அருமை. வித்தியாசமாக இசையமைத்து மெய்சிலிர்க்க வைத்துள்ளார். நா ெரடி, அண்ணன் வரவா, பேடாஸ் உள்ளிட்ட பாடல்கள் புல்லரிப்பை ஏற்படுத்துகிறது. ரசிகர்களுக்கு மிகவும் கொண்டாட்டமாக அமைந்தது. பொதுமக்களுக்கு இது மிகவும் பிடிக்கும். லியோ திரைப்படம் சாதனை படைப்பது உறுதி என்றனர்.

    முன்னதாக திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் லியோ திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மேலும் தியேட்டர்கள் முன்பு விஜய் பட கட்அவுட்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. முதல் காட்சியையொட்டி மேள தாளம் முழங்க ஆடி பாடி மகிழ்ந்தனர். இதனால் லியோ திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களும் களை கட்டி காணப்பட்டன. மேலும் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை போலீசார் சரி செய்தனர்.

    • பட்டாசு வெடித்து மேளதாளங்கள் முழங்க நடனமாடினர்
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் ஸ்ரீதேவி மற்றும் சிந்து ஆகிய 2 திரையரங்கில் 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.

    இந்நிலையில் லியோ திரைப்படம் திரையிடப்படுவதை முன்னிட்டு 400-க்கும் மேற்பட்ட. ரசிகர்கள் தியேட்டரின் முன்பாக பட்டாசு வெடித்து மேளதாளங்கள் முழங்க நடனமாடினர்.

    விஜய் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் காந்தி ராஜ் முன்னிலையில் விஜய் கட்அவுட்டிற்கு மாலை அணிவித்து பூமாலை தூவி கோஷங்கள் எழுப்பி கொண்டாடினர்.

    மேலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 5 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
    • போலீசாரின் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.

    ஈரோடு, அக். 18-

    நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) வெளியாகிறது.

    இந்த திரைப்படத்தை நாளை முதல் வருகிற 24-ந் தேதி வரை ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் தொடக்க காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சியாக நள்ளிரவு 1.30 மணி அளவில் முடி வடையும் வகையில் திரையி டப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதிய திரைப்படம் வெளியிடும்போது தியேட்டர்களில் முறையான போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தம் வசதிகளை உரிமையாளர்கள் செய்திருக்க வேண்டும்.

    தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள் நடத்தப்படும் போது சுகா தார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    தியே ட்டர்களில் ரசிகர்களின் வாகனங்கள் எளிதாக உள்ளே வந்து வெளியேறும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    போலீசாரின் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். ரசிகர்கள் காட்சி அரங்குக்குள் சிரமமின்றி உள்ளே வந்து வெளியே செல்லும் வகையில் முன்னேற்பாடு செய்திருக்க வேண்டும். இருக்கைகள், தியேட்டர்களின் வளாகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    தியேட்டர்களை சுகாதா ரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடை முறைகளுடன் சிறப்பு காட்சிகள் நடத்தப்பட வேண்டும்.

    அரசால் நிர்ண யிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக நுழைவுக் கட்டணத்தையோ, வாகன நிறுத்த கட்டணத்தையோ வசூலிக்க கூடாது.

    இவ்வாறு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    ×