search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லியோ படம் ரிலீஸ் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தால்  களை கட்டிய திருப்பூர் - தியேட்டர்கள் வசூலில் சாதனை படைக்கும் என கருத்து
    X

    திருப்பூரில் உள்ள தியேட்டரில் விஜய் படத்திற்கு மாலை அணிவித்தும், சிங்க வேடமணிந்தும் ரசிகர்கள் மேளதாளத்துடன் ஆடிப்பாடி மகிழ்ந்த காட்சி.   

    லியோ படம் ரிலீஸ் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தால் களை கட்டிய திருப்பூர் - தியேட்டர்கள் வசூலில் சாதனை படைக்கும் என கருத்து

    • . திருப்பூர் மாவட்டத்தில் லியோ திரைப்படம் மொத்தம் 56 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்த தியேட்டர்களில் இன்று காலை முதலே ரசிகர்கள் குவிந்தனர்.
    • முதல் காட்சியையொட்டி மேள தாளம் முழங்க ஆடி பாடி மகிழ்ந்தனர்

    திருப்பூர்:

    நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியானது. இதனை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் லியோ திரைப்படம் மொத்தம் 56 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்த தியேட்டர்களில் இன்று காலை முதலே ரசிகர்கள் குவிந்தனர். காலை 9மணிக்கு படம் திரையிடப்பட்டது. மதியம் 12-30மணிக்கு படம் முடிந்து வெளியே வந்தனர். திருப்பூரில் உள்ள பிரபல தியேட்டரில் லியோ திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வந்த ரசிகர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

    லியோ திரைப்படம் வேற லெவலாக உள்ளது. டைரக்டர் லோகேஷ் கனகராஜ் பட்டய கிளப்பியுள்ளார். இதற்காக அவர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். ஆரம்பம் முதல் கடைசி வரை படம் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது. அனைவருக்கும் பிடிக்கும் படமாக லியோ இருக்கும். தொடர்ந்து விடுமுறை என்பதால் லியோ வசூலில் சாதனை படைப்பது உறுதி. இப்படத்தில் அரசியல் எதுவும் கிடையாது. தொடர்ந்து விடுமுறை என்பதால் மீண்டும் இந்த திரைப்படத்தை பார்ப்போம். அனிருத் இசை மிகவும் அருமை. வித்தியாசமாக இசையமைத்து மெய்சிலிர்க்க வைத்துள்ளார். நா ெரடி, அண்ணன் வரவா, பேடாஸ் உள்ளிட்ட பாடல்கள் புல்லரிப்பை ஏற்படுத்துகிறது. ரசிகர்களுக்கு மிகவும் கொண்டாட்டமாக அமைந்தது. பொதுமக்களுக்கு இது மிகவும் பிடிக்கும். லியோ திரைப்படம் சாதனை படைப்பது உறுதி என்றனர்.

    முன்னதாக திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் லியோ திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மேலும் தியேட்டர்கள் முன்பு விஜய் பட கட்அவுட்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. முதல் காட்சியையொட்டி மேள தாளம் முழங்க ஆடி பாடி மகிழ்ந்தனர். இதனால் லியோ திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களும் களை கட்டி காணப்பட்டன. மேலும் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை போலீசார் சரி செய்தனர்.

    Next Story
    ×