search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாட்டரி டிக்கெட்டு"

    • சிதம்பரத்தில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வைத்திருப்பது தெரியவந்தது.

    கடலூர்:

    சிதம்பரம் நகர போலீசார் தில்லை காளி அம்மன் கோவில் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்ற ஒருவரை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் சிதம்பரம் வேங்கான் தெருவை சேர்ந்த சின்னதுரை (56) என்பவரை கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த 10 லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • விழுப்புரம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • டி.எஸ்.பி பார்த்திபன் தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத் தில் கடந்த ஒரு ஆண்டுகளாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1- ம் நம்பர் மற்றும் 2- ம் நம்பர் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்வது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. இருந்தபோதிலும் மறை முகமாக சிறுசிறு டீக்கடை களில் ஓரமாக பைகளை வைத்துக்கொண்டு இந்த தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது ஆங்காங்கே நடை பெறுகிறது. விழுப்புரம் மாவட்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீ நாதாவிற்கு வந்த தகவலின் அடிப்படையில், விழுப்புரம் மாவட்டம் டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் அமைக்கப்பட்டு இந்த தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

    அதன்படி டி.எஸ்.பி பார்த்திபன் தலைமையி–லான தனிப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரம் மாவட்டம் மரகண்ட நல்லூர் கடைவீதி–யில் டீ கடை ஓரமாக சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்த னர். அதில் அவர் அரகண்ட–நல்லூர் வள்ளலார் தெருவை சேர்ந்த கலை–யழகன் (வயது 58) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதும் தெரிய வந்தது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து கலை அழகனை கைது செய்தனர். அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமு–தல் செய்தனர். அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வோர் மீது கடுமை–யான நடவடிக்கை எடுக்க தீவிர கண்காணிப்பு பணிகள் போலீசார் ஈடுபட்டுள்ள–னர்.

    ×