search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் சேவை"

    • ரெயில்வேயில் பராமரிப்பு பணிகள்கள் நடந்து வருகிறது.
    • கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை :

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே காலை 5.20 மணி, 7.45 மணிக்கும், மதியம் 1.15 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * சூலூர்பேட்டை-நெல்லூர் இடையே காலை 7.50 மணி, 10 மணிக்கும், மதியம் 3.50 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * நெல்லூர்-சூலூர்பேட்டை இடையே காலை 10.15 மணிக்கும், மாலை 6.15 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * சூலூர்பேட்டை-சென்டிரல் இடையே மதியம் 12.35 மணிக்கும், மாலை 6.35 மணிக்கும், இரவு 8.45 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * கூடூர்-சூலூர்பேட்டை இடையே மாலை 5.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * ஆவடி-சென்டிரல் இடையே அதிகாலை 4.25 மணிக்கும், காலை 6.40 மணிக்கும், இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * சென்டிரல்-ஆவடி இடையே இரவு 9.15 மணிக்கும், இரவு 11.30 மணிக்கும், இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே காலை 7.30 மணிக்கும், காலை 10.10 மணிக்கும், மதியம் 2.30 மணிக்கும், மாலை 6 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி, 30-ந்தேதிகளில் கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே செல்லும்.

    * சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே காலை 8.35 மணிக்கும், மாலை 3.30 மணிக்கும், இரவு 7.05 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி, 30-ந்தேதிகளில் எளாவூர்-சூலூர்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் எழவூர் வரை மட்டுமே செல்லும்.

    * சூலூர்பேட்டை-சென்டிரல் இடையே காலை 10 மணிக்கும், மதியம் 1.20 மணிக்கும், மதியம் 3.20 மணிக்கும். இரவு 8.20 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி, 30-ந்தேதிகளில் சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * சூலூர்பேட்டை-சென்டிரல் இடையே காலை 11.35 மணிக்கும், மாலை 6.15 மணிக்கும், இரவு 9.40 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி, 30-ந்தேதிகளில் சூலூர்பேட்டை-எளாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை கடற்கரை-சூலூர்பேட்டை இடையே மதியம் 12.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி, 30-ந்தேதிகளில் கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே செல்லும்.

    * சூலூர்பேட்டை-வேளச்சேரி இடையே மாலை 5.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி, 30-ந்தேதிகளில் சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மகாளய அமாவாசை அன்று பிராயக் திருவேணி சங்கமத்தில் புனித நீராடி, கயா விஷ்ணுபாத ஆலயத்தில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்யலாம்.
    • மதுரை-காசி ஆன்மீக சுற்றுலா ரெயில் முன்பதிவுக்கு www.ularail.com இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.

    மதுரை:

    புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை-காசி இடையே ஆன்மீக சுற்றுலா ரெயில் இயக்கப்பட உள்ளது. இது மதுரையில் இருந்து செப்டம்பர் 22-ந் தேதி புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, சென்னை வழியாக காசி செல்லும்.

    மகாளய அமாவாசை அன்று பிராயக் திருவேணி சங்கமத்தில் புனித நீராடி, கயா விஷ்ணுபாத ஆலயத்தில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்யலாம். அதன் பிறகு காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, அயோத்தி ராமஜென்ம பூமி ஆலயங்களில் தரிசனம், நைமிசாரண்யம் சக்கர தீர்த்தத்தில் நீராடி திவ்யதேச தேவராஜ பெருமாள் தரிசனம், ஹரித்துவார் கங்கையில் நீராடி மானசாதேவி தரிசனம், டெல்லி அக்சர்தாம் சுவாமி நாராயண், மதுரா கிருஷ்ணபூமி கோவர்த்தன தேச பெருமாள் மற்றும் நவமோகன கிருஷ்ண பெருமாள் ஆலய தரிசனத்துடன் சுற்றுலா முடிகிறது.

    இது 12 நாள் சுற்றுலா ஆகும். தனி நபராக பயணம் செய்தால் ரூ.38 ஆயிரத்து 600 மற்றும் 46 ஆயிரத்து 200 ஆகிய கட்டணங்களை தேர்வு செய்யலாம். குடும்பமாக 2, 3 பேர் பயணம் செய்தால், 1 நபருக்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரை கட்டண சலுகை கிடைக்கும். குறைந்த வசதிகளுடன் 3 பேர் பயணம் செய்தால், ஒருவருக்கு ரூ. 24 ஆயிரத்து 900 கட்டணம் வசூலிக்கப்படும்.

    மதுரை-காசி ஆன்மீக சுற்றுலா ரெயில் முன்பதிவுக்கு www.ularail.com இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா ஆகஸ்டு 29-ந்தேதி தொடங்குகிறது.
    • 110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்பாதையில் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது.

    வெளிப்பாளையம் :

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    இதை தொடர்ந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கடந்த 2010-ம் ஆண்டு வேளாங்கண்ணிக்கு அகல பாதையில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

    கொரோனா தொற்று காரணமாக வேளாங்கண்ணி-நாகை இடையே ரெயில் சேவை கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 24-ந் தேதி நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு 2½ ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இருப்பினும் வேளாங்கண்ணிக்கு ரெயில் இயக்கப்படவில்லை. இந்த வழித்தடத்தில் உள்ள தண்டவாளத்தில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருந்ததால் ரெயில் சேவை தொடங்கப்படவில்லை.

    இதை தொடர்ந்து மண் சரிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில் தண்டவாளத்தின் இருபுறங்களிலும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வந்தது. இதற்கிடையில் இந்த வழித்தடத்தை மின் பாதையாக மாற்றும் பணியும் நடந்து வந்தது.

    சீரமைப்பு பணிகள் மற்றும் மின்பாதை அமைக்கும் பணி முடிவடைந்ததையொட்டி ரெயில்வே தொழில்நுட்ப பிரிவினர் இரண்டு முறை சோதனை செய்தனர். மேலும் 110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்பாதையில் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது.

    இதையடுத்து நாகை-வேளாங்கண்ணி மின் பாதையில் 29-ந்தேதி முதல் ரெயில்கள் இயக்கப்படும் என திருச்சி ரெயில்வே கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 2½ ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு புதிதாக அமைக்கப்பட்ட மின் பாதையில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ரெயில் என்ஜின் டிரைவர்கள், நாகை ரெயில் நிலைய மேலாளர் பிரபாகரன் ஆகியோருக்கு நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்க செயலாளர் அரவிந்குமார் மற்றும் சங்கர் ஆகியோர் சால்வை அணிவித்தனர்.

    வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா அடுத்த மாதம்(ஆகஸ்டு) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் வேளாங்கண்ணிக்கு மின்பாதையில் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது பயணிகள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சிக்னல் செயல்படாமல் போனதால் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
    • கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு மின்சார ரெயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு மழை பெய்தது. புறநகர் பகுதியிலும் லேசான பெய்த மழையால் ரெயில் சிக்னலில் கோளாறு ஏற்பட்டது.

    தாம்பரம்-செங்கல்பட்டு இடையே இன்று காலை 7 மணியளவில் சிக்னல் செயல்படாமல் போனதால் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    இதனால் கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு மின்சார ரெயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    பீக் அவர்ஸ் நேரத்தில் இந்த பிரச்சினை ஏற்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி நடந்தது. ஆனாலும் 2 மணி நேரம் ரெயில்கள் குறித்த நேரத்திற்கு இயங்க முடியவில்லை.

    காலை 7 மணி முதல் 9 மணி வரை மின்சார ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.

    இதனால் குறித்த நேரத்திற்கு ரெயில்கள் நிலையங்களுக்கு செல்ல முடியவில்லை. ஒவ்வொரு ரெயிலும் 10 நிமிடங்கள் வரை தாமதமாக வந்ததால் பயணிகள் நிலையங்களில் காத்து நின்றனர். பின்னர் தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதும் வழக்கமாக ஓடியது.

    • ராமேசுவரம்-கன்னியாகுமரி இடையேயான ரெயில் சேவையை விரைவில் தொடங்க வேண்டும்.
    • பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயனடைவார்கள் என பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

    நாகர்கோவில்:

    ரெயில்வே மத்திய மந்திரி அஸ்வினி வைஸ்னவ்வுக்கு, முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷண்ன் கோரிக்கை மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் வழியாக கொல்லம் வரை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படாமல் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது பொதுமக்களுக்கு கடும் அவதியை ஏற்படுத்தும். எனவே ரெயில்வே நிர்வாகம் குமரி மாவட்ட மக்களின் நலன் கருதி நாகர்கோவில் சத்திப்பு வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்.

    அதேசமயம் ராமேசுவரம்-கன்னியாகுமரி இடையேயான ரெயில் சேவையை விரைவில் தொடங்க வேண்டும். இத்தகைய ரெயில் சேவை மூலம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயனடைவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கொருக்குப்பேட்டை- திருவொற்றியூர் 4-வது வழித்தடம் இன்னும் ஒரு மாதத்தில் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    சென்னை சென்டிரல் மற்றும் மூர்மார்க்கெட் புறநகர் ரெயில் சேவையில் தினமும் ஏற்படும் காலதாமதத்தால் பல்வேறு சிரமங்கள் வருகின்றன.

    வட மாநிலங்களில் இருந்து வரும் ஒருசில ரெயில்களை மூர்மார்கெட்- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சரியான நேரத்தில் இயக்க முடிவதில்லை. இதற்கு காரணம் கூடுதல் ரெயில் பாதை இல்லாததே ஆகும்.

    நீண்ட காலமாக இருந்து வரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண 4-வது ரெயில் பாதை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கொருக்குப்பேட்டை- திருவொற்றியூர் இடையே உள்ள 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

    அதே போல சென்னை கடற்கரை - அத்திப்பட்டு இடையேயும் 4-வது வழித்தடம் நிறுவப்படுகிறது. இந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

    கூடுதல் வழித்தடங்கள் அமைக்கப்படுவதன் மூலம் வெளியில் இருந்து வரும் ரெயில்கள் கொருக்குப்பேட்டை வழியாக வந்து எழும்பூர் மற்றும் கடற்கரை ரெயில் நிலையங்களுக்கு செல்ல உதவும். மேலும் பேசின்பிரிட்ஜ் வழியாக ரெயில்களை நெரிசல் ஏற்படாமல் இயக்கவும் உதவும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை-அத்திப்பட்டு- கும்மிடிப்பூண்டி- கூடூர் மார்க்கம் அதிக ரெயில் சேவை கொண்டதாகும். தெற்கு ரெயில்வேயில் மிகவும் பிசியான வழித்தடமாக இது அமைந்துள்ளது. புறநகர் மின்சார ரெயில்கள், எக்ஸ்பிரஸ், பயணிகள் மற்றும் சரக்கு ரெயில்கள் ஆகியவை நாள் முழுவதும் இதில் இயக்கப்படுகின்றன.

    அதிக பயன்பாடு உள்ள வழித் தடமாக இது இருப்பதால் கூடுதலாக ரெயில் பாதை அமைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. தெற்கு ரெயில்வேயில் முக்கிய வழித்தடமாக கருதப்படும் இந்த மார்க்கத்தில் சென்னை கடற்கரை- அத்திப்பட்டு இடையே 3-வது மற்றும் 4-வது வழித்தடம் ரூ.150 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்துதல் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

    இதற்கிடையில் கொருக்குப்பேட்டை- அத்திப்பட்டு இடையே 3-வது பாதை கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அத்திப்பட்டு - எண்ணூர்- திருவொற்றியூர் வரை 4-வது பாதை அமைக்கும் பணி 2016-ல் தொடங்கப்பட்டது.

    தற்போது பணிகள் நடைப்பெற்று வரும் கொருக்குப்பேட்டை- திருவொற்றியூர் 4-வது வழித்தடம் இன்னும் ஒரு மாதத்தில் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    4-வது வழித்தடம் தயாராகி விட்டதால் இனி கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரெயில் போக்குவரத்தை தாமதமின்றி கையாள முடியும். குறிப்பிட்ட நேரத்திற்கு அனைத்து ரெயில்களும் வந்து செல்ல இது உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ×