search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிஷிவந்தியம்"

    • தேர்தலின்போது திமுக உறுதியளித்தப்படி ரிசிவந்தியம் வட்டம் உருவாக்கும் அறிவிப்பை வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது
    • தொடர் போராட்டங்களை முன்னெடுத்த போதும், மக்களின் கோரிக்கையை அரசு கண்டுகொள்ளாதது மிகுந்த வேதனை

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிசிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கால் நூற்றாண்டிற்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

    ஏறத்தாழ 60 கிராமங்களை உள்ளடக்கிய ரிசிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் வாழும் கிராமப்புற மக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை பெறுவதற்கான அரசு சான்றிதழ்களைப் பெறவும், கோரிக்கை மனுக்களை அளிக்கவும் 50 கிமீ அப்பால் உள்ள சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அலைந்து திரிய வேண்டிய சூழல் உள்ளது. இதனால் ரிசிவந்தியத்தை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக மாணவர்களும், முதியவர்களும், பெண்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு புதிய மாநகராட்சிகள், மாவட்டங்கள் மற்றும் வட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டபோதும், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது உறுதியளித்தப்படி ரிசிவந்தியம் வட்டம் உருவாக்குவதற்கான அறிவிப்பை மட்டும் இதுவரை வெளியிடாதது அப்பகுதி மக்களை மிகுந்த ஏமாற்றமடையச் செய்துள்ளது.

    புதிய வட்டத்தை உருவாக்குவதற்காக ரிசிவந்திய ஊராட்சி ஒன்றிய மக்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்த போதும், அரசு இவர்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாதது மிகுந்த வேதனையளிக்கிறது. ரிசிவந்திய மக்களின் நியாயமான இக்கோரிக்கையை வலியுறுத்தி அறப்போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் 18 பேர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    ஆகவே, ரிசிவந்தியம் ஊராட்சி ஒன்றிய மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு ரிசிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டத்தை உருவாக்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறி உள்ளார்.

    • ரிஷிவந்தியம் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • பக்கத்து வீட்டைசேர்ந்த கோவிந்தன் என்பவருடைய குழந்தைகள்அடுப்பு அருகே விளையாடியதாக கூறப்படுகிறது. பக்கத்து வீட்டைசேர்ந்த கோவிந்தன் என்பவருடைய குழந்தைகள்அடுப்பு அருகே விளையாடியதாக கூறப்படுகிறது.

    கள்ளகுறிச்சி:

    கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி அலமேலு (வயது 40). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டைசேர்ந்த கோவிந்தன் என்பவருடைய குழந்தைகள்அடுப்பு அருகே விளையாடியதாக கூறப்படுகிறது. இதைபார்த்த அலமேலு அந்த குழந்தைகளை தள்ளி சென்று விளையாடுமாறு கூறியுள்ளார்.

    இதைகேட்டு ஆத்திரமடைந்த கோவிந்தன் மற்றும்அவருடைய மனைவி உமா ஆகியோர் அலமேலுவை திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். இதை தடுக்க முயன்ற அலமேலு உறவினர் முனியம்மாளையும் கோவிந்தன், உமா ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கோவிந்தன், உமா ஆகியோர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×