search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல் கிண்டல்"

    கடந்த 70 ஆண்டுகளில் செய்யாததை தான் செய்திருப்பதாக பிரதமர் மோடி அடிக்கடி கூறுவது உண்மைதான் என்று டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது ராகுல் காந்தி கிண்டலாக கூறினார்.#PetrolDieselPriceHike #BharatBandh #RahulGandhi
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் சார்பில் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், பேரணி, சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் என எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் உள்பட இடதுசாரி தலைவர்கள் பங்கேற்றனர்.



    அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  “பிரதமர் மோடி அனைத்து பிரச்சினைகளிலும் மவுனம் காக்கிறார். பெட்ரோல் விலை உயர்வு, விவசாயிகள் நிலை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் பற்றி பிரதமர் மோடி மவுனம் காக்கிறார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாரதிய ஜனதா ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

    கடந்த 70 ஆண்டுகளில் செய்யாததை கடந்த 4 ஆண்டு ஆட்சிக்காலத்தில் தான் செய்திருப்பதாக மோடி அடிக்கடி கூறுவார். அது உண்மைதான். கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. பெட்ரோல் விலை 80 ரூபாயை தாண்டியுள்ளது.

    மோடியின் ஆட்சியில் வெறுப்புணர்வு பரவி வருகிறது. ஒரு இந்தியர் மற்றவருடன் சண்டையிடுகிறார். நாடு பிளவுபட்டு வருகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணி பாஜகவை தோற்கடிக்கும்” என்றார். #PetrolDieselPriceHike #BharatBandh #RahulGandhi #ModiRule
    ×