search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரமேஷ் டெண்டுல்கர்"

    • எனக்கு பல விளம்பரச் சலுகைகள் வர ஆரம்பித்தன.
    • புகையிலை பொருட்களை ஒருபோதும் விளம்பரப்படுத்த வேண்டாம் என்று என் தந்தை என்னிடம் கூறினார்.

    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் புகையிலை பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

    இந்த நிகழ்வில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

     

    நான் இந்தியாவுக்காக விளையாடத் தொடங்கியபோது, நான் பள்ளியை விட்டு வெளியே வந்தேன். எனக்கு பல விளம்பரச் சலுகைகள் வர ஆரம்பித்தன. ஆனால் புகையிலை பொருட்களை ஒருபோதும் விளம்பரப்படுத்த வேண்டாம் என்று என் தந்தை என்னிடம் கூறினார். அதனால் எனக்கு இதுபோன்ற பல சலுகைகள் கிடைத்தும் என் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறக்கூடாது என்பதற்காக நான் எதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை.

    நல்ல வாய் ஆரோக்கியம் என்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் ஆகும். 50% குழந்தைகளுக்கு வாய்வழி நோய்கள் உள்ளன. அது அவர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. ஆனால் யாரும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. இது அவர்களின் நம்பிக்கையை சேதப்படுத்தும்.

    அவர் கூறினார்.

    ×