search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஞ்சி கோப்பை கிரிக்கெட்"

    குஜராத்தை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 62 வருட ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக கேரள அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. #RanjiTrophy
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 4-வது காலிறுதி ஆட்டத்தில் குஜராத் - கேரளா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கேரளா 185 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய குஜராத் கேரளாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 162 ரன்னில் சுருண்டது.

    23 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய கேரளா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 171 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. 194 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் குஜராத் அணியின் வெற்றிக்கு 195 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கேரளா.

    இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 195 ரன்கள் அடித்து வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் குஜராத் அணி களம் இறங்கியது. கேரள அணியின் சந்தீப் வாரியார், பாசில் தம்பி ஆகியோரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் குஜராத் விக்கெட் மளமளவென சரிந்தது. பாசில் தம்பி 12 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டும், சந்தீப் வாரியர் 13.3 ஓவரில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளும் வீழ்த்த குஜராத் 81 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது.

    இதனால் கேரளா 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 62 வருட ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது. முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டும் வீழ்த்திய பாசில் தம்பி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
    ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குஜராத்திற்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கேரளா. #RanjiTrophy
    ரஞ்சி டிராபி காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் விதர்பா - உத்தரகாண்ட் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற விதர்பா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய உத்தரகாண்ட் 355 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. 4-வது வீரராக களம் இறங்கிய அவ்னீஷ் சுதா 91 ரன்களும், ராவத் 108 ரன்களும் சேர்த்தனர். விதர்பா அணிக்காக விளையாடி வரும் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் விதர்பா களம் இறங்கியது. தொடக்க வீரர் பாசல் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சஞ்சய் உடன் அனுபவ வீரர் வாசிம் ஜாபர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் சதம் விளாச விதர்பா 1 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்துள்ளது. சஞ்சய் 112 ரன்னுடனும், வாசிம் ஜாபர் 111 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    2-வது காலிறுதி ஆட்டத்தில் உத்தர பிரதேசம் - சவுராஷ்டிரா அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற உத்தர பிரதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் தேசாய் 84 ரன்கள் சேர்த்து அடித்தளம் அமைத்தார். முதல் நான்கு வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் கார்க் 49 ரன்களும், ரித்து சிங் 150 ரன்களும், சவுரப் குமார் 55 ரன்களும் சேர்க்க உத்தர பிரதேசம் 385 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. சவுராஷ்டிரா அணியின் உனத்கட் ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    சவுராஷ்டிரா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் 84 ரன்கள் அடிக்க மற்ற வீரர்கள் சொதப்பியதால் சவுராஷ்டிரா 170 ரன்களுக்குள் 7 விக்கெட்டை இழந்ததுள்ளது. மன்கட் 42 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

    3-வது காலிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் - கர்நாடகா அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற கார்நாடகா பீல்டிங் செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் 224 ரன்கள் சேர்த்து அல்அவுட் ஆனது. லாம்ரோன் 50 ரன்களும், பிஷ்னோய் 79 ரன்களும் சேர்த்தனர். கர்நாடகா அணி சார்பில் மிதுன், கவுதம் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய கர்நாடகா ரன்கள் அடிக்க திணறியது. சித்தார்த் 52 ரன்கள் சேர்த்தார். 9-வது வீரராக களம் இறங்கிய கேப்டன் வினய் குமார் ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் சேர்க்க கர்நாடகா 263 ரன்கள் சேர்த்து முன்னிலைப் பெற்றது. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய ராஜஸ்தான் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் சேர்த்துள்ளது.

    4-வது காலிறுதி ஆட்டத்தில் கேரளா - குஜராத் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய கேரளா 185 ரன்னில் சுருண்டது. குஜராத் அணியைச் சேர்ந்த கஜா 4 விக்கெட்டும், நக்வாஸ்வாலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய குஜராத் கேரளாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 162 ரன்னில் சுருண்டது. சந்தீப் வாரியர் 4 விக்கெட்டும், பாசில் தம்பி, நித்தீஷ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    23 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய கேரளா, இதிலும் திணறி 171 ரன்னில் சுருண்டது. அத்துடன் இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கேரளா தற்போது 194 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் நாளை 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கும்.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மத்திய பிரதேச அணி ரன்ஏதும் எடுக்காமல் கடைசி 6 விக்கெட்டுக்களை இழந்தது 35 ரன்னில் சுருண்டது. #RanjiTrophy
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆந்திரா - மத்திய பிரதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற மத்திய பிரதேசம் பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆந்திரா 132 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய மத்திய பிரதேசம் 91 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 31 ரன்கள் முன்னிலையுடன் ஆந்திரா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி கரண் ஷிண்டே (103) சதத்தால் 301 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 33 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மத்திய பிரதேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 8.3 ஓவரில் மத்திய பிரதேசம் 19 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு பிர்லா உடன் டுபே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியது.

    அணியின் ஸ்கோர் 35 ரன்னாக இருக்கும்போது பிர்லா 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது டுபே 16 ரன்கள் எடுத்திருந்தார். அதன்பின் மத்திய பிரதேச அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிய ஆரம்பித்தது. பிர்லா ஆட்டமிழந்த பின்னர் வந்த அனைத்து வீரர்களும் டக்அவுட்டில் வெளியேறினார்கள்.

    டுபே மேற்கொண்டு ரன்ஏதும் எடுக்காமல் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க மத்திய பிரதேசம் 35 ரன்னில் சுருண்டது. கவுரவ் யாதவ் காயம் காரணமாக களம் இறங்கவில்லை. 16.5 ஓவரில் சுருண்ட மத்திய பிரதேசம் 23 பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் 7 விக்கெட்டுக்களை இழந்தது.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் 68 விக்கெட்டுக்கள் வீழ்த்தி பிஷன் பேடியின் 44 வருட சாதனையை பீகார் சுழற்பந்து வீச்சாளர் முறியடித்துள்ளார். #RanjiTrophy
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிளேட் குரூப்பில் பீகார் உள்பட 9 அணிகள் இடம்பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். அதன்படி பீகார் 8 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்றுள்ளது. ஒன்றில் தோல்வியடைந்தது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.

    இந்த தொடரில் பீகாரின் சுழற்பந்து வீச்சாளர் ஆஷுதோஷ் அமன் சிறப்பாக பந்து வீசி 68 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதன்மூலம் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் கடந்த 44 வருடமாக இருந்த பிஷன் பேடியை பின்னுக்குத் தள்ளியுள்ளார். பிஷன் பேடி 64 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதே இதுவரை அதிகபட்ச விக்கெட்டாக இருந்தது.

    டோட்டா கணேஷ், கன்வால்ஜிச் சிங் தலா 62 விக்கெட்டுக்களும், வெங்கட்ராகவன், மணிந்தர் சிங் தலா 58 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளனர்.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இளம் வீரரான ஷுப்மான் கில் 91 ரன்கள் சேர்த்து சதத்தை தவறவிட்ட நிலையில், அன்மோல்ப்ரீத் சிங் சதம் விளாசினார். #RanjiTrophy
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் பெங்கால் - பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த பெங்கால் 187 ரன்னில் சுருண்டது.

    பின்னர் பஞ்சாப் முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் பஞ்சாப் 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மான் கில் 36 ரன்னுடனும், அன்மோல்ப்ரீத் சிங் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மான் கில் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் அன்மோல்ப்ரீத் சிங் சதம் அடித்து இன்றைய ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இருவரின் ஆட்டத்தால் பஞ்சாப் 2-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்துள்ளது. அன்மோல்ப்ரீத் சிங் 124 ரன்னுடனும், சவுத்ரி 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிராக திரிபுரா 35 ரன்னில் சுருண்டது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் 218-ல் ஆல்அவுட் ஆனது. #RanjiTrophy
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் திரிபுரா - ராஜஸ்தான் இடையிலான ஆட்டம் அகர்தலாவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற திரிபுரா பேட்டிங் தேர்வு செய்தது.

    ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திரபுரா பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 18.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 35 ரன்னில் சுருண்டது.

    9-வது வீரராக களம் இறங்கிய நீலம்புஜ் வட்ஸ் 11 ரன்கள் எடுத்து ஆட்மிழக்காமல் இருந்தார். இதுதான் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். தொடக்க வீரர் பனிக் 8 ரன்களும், 6-வது வீரராக களம் இறங்கிய சென் 6 ரன்களும் அடித்தனர். அதன்பின் எக்ஸ்ட்ரா மூலம் கிடைத்த 6 ரன்களே இரண்டாவது அதிகபட்ச ரன்னாகும். 6 பேட்ஸ்மேன்கள் டக்அவுட் ஆனார்கள். ராஜஸ்தான் சார்பில் சவுத்ரி 5 விக்கெட் வீழ்த்தினார்.

    அடுத்து ராஜஸ்தான் களம் இறங்கியது. ராஜஸ்தான் அணியும் தடுமாறியது. கடைநிலை வீரர்கள் தங்களுடைய பங்கிற்கு ஓரளவு ரன்கள் திரட்ட 218 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் திரிபுரா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது. இன்று ஒரே நாளில் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டன.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கெதிராக 323 ரன் இலக்கை எளிதாக எட்டி பெங்கால் அணி வெற்றி பெற்றது. #RanjiTrophy
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் - டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. அசோக் திண்டாவின் (4 விக்கெட்) அபார பந்து வீச்சால் டெல்லி 240 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஜான்டி சித்து அதிகபட்சமாக 85 ரன்கள் சேர்த்தார்.

    பின்னர் பெங்கால் முதல் இன்னிங்சை தொடங்கியது. டெல்லி அணியும் பந்து வீச்சில் பதிலடி கொடுத்தது. இதனால் பெங்கால் 220 ரன்னில் சுருண்டது. 20 ரன்கள் முன்னிலையுடன் டெல்லி அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஹிம்மத் சிங் (51), சுபோத் பாதி (62) அரைசதம் அடிக்க டெல்லி 301 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    முதல் இன்னிங்சில் 20 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் பெங்கால் அணிக்கு 322 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்து டெல்லி.

    322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்கால் அணி களம் இறங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்க வீரர்களான ஏ ராமன், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ராமன் 52 ரன்கள் சேர்த்தார். ஈஸ்வரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அபிமன்யு ஈஸ்வரன் ஆட்டமிழக்காமல் 183 ரன்கள் குவிக்க 3 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    ரஞ்சி டிராபியின் 6-வது சுற்று போட்டியில் தமிழ்நாடு பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. #RanjiTrophy
    ரஞ்சி டிராபி தொடரில் தமிழ்நாடு அணி தனது 6-வது சுற்று போட்டியில் பங்ஞாப் அணியை எதிர்கொண்டது. கடந்த 14-ந்தேதி தொடங்கிய இந்த ஆட்டம் இன்றுவரை நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்தது.

    கோனி (5), பால்டெஜ் சிங் (3) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் தமிழ்நாடு அணி 215 ரன்னில் சுருண்டது. பின்னர் பஞ்சாப் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இளம் வீரரான ஷுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 328 பந்தில் 29 பவுண்டரி, 4 சிக்சருடன் 268 ரன்கள் குவித்தார். இவரது ஆட்டத்தால் பஞ்சாப் அணி 479 ரன்கள் குவித்தது. தமிழ் நாடு அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 107 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    264 ரன்கள் பின்தங்கிய தமிழ் நாடு அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் தமிழ்நாடு 3 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்திருந்தது. பாபா இந்திரஜித் 37 ரன்னுடனும், சாய் கிஷோர் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. பாபா இந்திரஜித் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சாய் கிஷோர் 9 ரன்னில் வெளியேறினார்.

    விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 175 பந்துகள் சந்தித்து 74 ரன்கள் சேர்த்தார். விஜய் சங்கர் 80 பந்தில் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருக்க கடைசி நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. ஆட்டம் முடியும்போது தமிழ் நாடு 121 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 383 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் ஆட்டம் வெற்றித்தோல்வியின்று டிராவில் முடிந்தது.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்கெதிராக ஐதராபாத் முதல் நாளில் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் அக்‌ஷாத் ரெட்டி சதம் அடித்தார்.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது சுற்று இன்று தொடங்கியது. திருநெல்வேலியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது. டேன்மே அகர்வால், கேப்டன் அக்‌ஷாத் ரெட்டி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டேன்மே அகர்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ரோகித் ராயுடு 13 ரன்னிலும், ஹிமாலே அகர்வால் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    4-வது விக்கெட்டுக்கு அக்‌ஷாத் ரெட்டி உடன் பவனகா சந்தீப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அக்‌ஷாத் ரெட்டி சதம் அடிக்க சந்தீப் அரைசதம் அடித்தார். இருவரும் முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். அக்‌ஷாத் ரெட்டி 114 ரன்களுடனும், சந்தீப் 74 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    தமிழ்நாடு அணி சார்பில் விக்னேஷ், எம் முகமது, ரஹில் ஷா தலா ஒரு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    ரஞ்சி டிராபி தொடரில் திண்டுக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு - மத்திய பிரதேசம் இடையிலான ஆட்டம் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. #RanjiTrophy
    ரஞ்சி டிராபி முதல்தர கிரிக்கெட் போட்டி கடந்த 1-ந்தேதி தொடங்கியது. திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - மத்திய பிரதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற மத்திய பிரதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. 3-வது வீரர் பதிடார் 196 ரன்கள் குவிக்க மத்திய பிரதேசம் 393 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஆனால் 157.4 ஓவர்கள் சந்தித்தது.



    பின்னர் தமிழ்நாடு முதல் இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜய் 19 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால், பாபா இந்திரஜித் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க தமிழ்நாடு 77.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்திருக்கும்போது 4-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.
    ×