search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஞ்சி கோப்பை கிரிக்கெட்"

    • மத்திய பிரதேச அணிக்கு 320 ரன்களை விதர்பா அணி இலக்காக நிர்ணயித்தது.
    • 2-வது இன்னிங்சில் மத்திய பிரதேசம் அணி 258 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இந்தியாவில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் டாஸ் வென்ற விதர்பா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய விதர்பா அணி கருண் நாயரின் அரைசதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 170 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. மத்திய பிரதேச அணி தரப்பில் அவேஷ் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய மத்திய பிரதேச அணி 252 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹிமன்ஷு மந்த்ரி சதமடித்து அசத்தினார். இதன்மூலம் மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 82 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த விதர்பா அணி யாஷ் ரத்தோட் (141), அக்ஷய் வாத்கர்(77) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 402 ரன்களைச் சேர்த்து அசத்தியதுடன், மத்திய பிரதேச அணிக்கு 320 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

    அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய மத்திய பிரதேச அணிக்கு யாஷ் துபே - ஹர்ஷ் கௌலி ஜோடி அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இந்த ஜோடி 100 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர். துபே 94 ரனகளிலும் ஹர்ஷ் கௌலி 67 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து வந்த வேகத்தில் பெவிலியனுக்கு திரும்பினர்.

    இதனால் அந்த அணி இரண்டாவது இன்னிங்சில் 258 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. விதர்பா தரப்பில் யாஷ் தாக்கூர், அக்ஷய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதன்மூலம் விதர்பா அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது.

    இறுதிபோட்டியில் மும்பை - விதர்பா அணிகள் வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது.

    • மும்பை அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 80 பந்துகளில் 90 ரன்கள் குவித்துள்ளார்.
    • அதில் 15 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும்.

    இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் இந்த ஆண்டுக்கான சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் மிக பிரபலமான இந்த ரஞ்சி தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பதனால் அனைத்து மாநில அணிகளை சேர்ந்த வீரர்களும் இந்த தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதன்மை அணிக்கு தேர்வாகும் வாய்ப்பினை எதிர்நோக்கி சிறப்பாக செயல்படுவார்கள்.

    அந்த வகையில் இந்த ஆண்டு தற்போது நடைபெற்று வரும் இந்த ரஞ்சி தொடரில் பல்வேறு இந்திய வீரர்களும் கலந்து கொண்டு விளையாடி வரும் வேளையில் மும்பை அணிக்காக சூர்யகுமார் யாதவ் இன்று நடைபெற்று வரும் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறார். ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் தான் இடம் பிடித்து விளையாட ஆசைப்படுவதால் நிச்சயம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்று உறுதியளித்திருந்தார்.

    மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்று கூட பாராமல் 80 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர்கள் என தனது வழக்கமான அதிரடியை கையிலெடுத்து 80 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் தனது அதிரடியான ரன் குவிப்பை இன்றும் அவர் மும்பை அணிக்காக வழங்கினார். ரகானே தலைமையிலான மும்பை அணியானது தற்போது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்த போட்டியில் ப்ரித்வி ஷா 19 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 90 ரன்களிலும் ஆட்டம் இழந்தாலும் ஜெய்ஷ்வால் மற்றும் ரகானே ஆகியோரது ஜோடி தற்போது மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது.

    ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படையாக சூர்யகுமார் யாதவ் கூறியவேளையில் தற்போது ரஞ்சி போட்டியிலும் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடியுள்ளதால் அவரின் டெஸ்ட் வாய்ப்பை பிடிக்காமல் விடமாட்டார் என்றே தோன்றுகிறது.

    • மத்திய பிரதேச அணியில் 3 வீரர்கள் சதம் அடித்து முத்திரை பதித்தனர்.
    • முதல் இன்னிங்சில் பெற்ற கூடுதல் ரன் மூலம் மத்திய பிரதேச அணி முதல் முறையாக ரஞ்சி கோப்பையை கைப்பற்றுகிறது.

    பெங்களூரு:

    மும்பை-மத்திய பிரரேச அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.

    மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன் குவித்தது. சர்பிராஸ்கான் சதம் (134 ரன்) அடித்தார். கவுரவ் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய மத்திய பிரதேசம் பதிலடி கொடுத்தது. நேற்றைய ஆட்டத்தின் முடிவில் மத்திய பிரதேசம் 3 விக்கெட் இழப்புக்கு 368 ரன் எடுத்து இருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது.

    தொடர்ந்து விளையாடிய மத்திய பிரதேசம் அணி மும்பையின் ஸ்கோரை தாண்டி முன்னிலை பெற்றது. 155 ஓவர் வீசி முடிக்கப்பட்டபோது அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 473 ரன் குவித்து இருந்தது.

    4-வது வீரராக களம் இறங்கிய ரஜத் படிதார் சதம் அடித்தார். தொடக்க வீரர் யாஷ் துபே, 3-வது வரிசையில் ஆடிய சுபம் சர்மா ஆகியோர் ஏற்கனவே சதம் அடித்து இருந்தனர். தற்போது மத்திய பிரதேச அணியில் 3-வது வீரர் செஞ்சுரி அடித்து முத்திரை பதித்தார்.

    இந்த போட்டி டிராவில் முடிய வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் பெற்ற கூடுதல் ரன் மூலம் மத்திய பிரதேச அணி முதல் முறையாக ரஞ்சி கோப்பையை கைப்பற்றுகிறது.

    • முதல் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது.
    • சிறப்பாக விளையாடிய சர்ப்ராஸ் கான் 134 ரன்கள் குவித்தார்.

    87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் மும்பையும், மத்தியபிரதேசமும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் சாம்பியன் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. சர்ப்ராஸ் கான் 40 ரன்னுடனும், ஷம்ஸ் முலானி 12 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இதனை தொடர்ந்து இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது.

    சிறப்பாக விளையாடிய சர்ப்ராஸ் கான் 134 ரன்கள் குவித்தார். சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 374 ரன்கள் எடுத்தது. மத்திய பிரதேசம் தரப்பில் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • மத்தியபிரதேச அணி இதுவரை ரஞ்சி கோப்பையை வென்றதில்லை.
    • 42-வது முறையாக பட்டம் வெல்ல குறி வைத்துள்ள மும்பை அணி ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது.

    பெங்களூரு:

    38 அணிகள் பங்கேற்ற 87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் மும்பையும், மத்தியபிரதேசமும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் சாம்பியன் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் (5 நாள்) பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

    பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி கால்இறுதியில் 725 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரகாண்டை ஊதித்தள்ளியது. உத்தரபிரதேசத்துக்கு எதிரான அரைஇறுதியிலும் ரன்மழை பொழிந்த மும்பை அணி மொத்தம் 746 ரன்கள் முன்னிலையோடு 'டிரா' கண்டு இறுதிசுற்றுக்குள் நுழைந்தது. 42-வது முறையாக பட்டம் வெல்ல குறி வைத்துள்ள மும்பை அணி ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது.

    மத்தியபிரதேச அணி இதுவரை ரஞ்சி கோப்பையை வென்றதில்லை. 1998-99-ம் ஆண்டில் இறுதிப்போட்டி வரை வந்து தோற்று இருக்கிறது. முதல்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் அந்த அணியினர் தங்களை தயார்படுத்தியுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக மத்தியபிரதேச அணிக்கு மும்பையைச் சேர்ந்த சந்திரகாந்த் பண்டிட் பயிற்சியாளராக இருப்பது கூடுதல் பலமாகும். இவர் ஏற்கனவே மும்பை ரஞ்சி அணிக்கு பயிற்சியாளராக இருந்து கோப்பையும் பெற்றுத் தந்துள்ளார். மேலும், தற்போது மும்பை அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றும் அமோல் முஜூம்தார், சந்திரகாந்த் பண்டிட் பயிற்சியின் கீழ் விளையாடி இருக்கிறார். இருவரும் நண்பர்கள் ஆவர். ஆக நன்கு பரிட்சயமான இவ்விரு பயிற்சியாளர்களில் யாருடைய யுக்தி எடுபடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    விதர்பா 2-வது இன்னிங்சில் 200 ரன்னில் சுருண்டதால், சவுராஷ்டிராவின் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #RanjiTrophy
    நாக்பூரில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விதர்பா - சவுராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற நடப்பு சாம்பியன் அணியான விதர்பா பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் விதர்பா 312 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய சவுராஷ்டிரா 307 ரன்கள் சேர்த்தது.

    5 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்ற விதர்பா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் விதர்பா 2 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. கணேஷ் சதிஷ் 24 ரன்னுடனும், வாசிம் ஜாபர் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சவுராஷ்டிரா அணியின் ஜடேஜா பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விதர்பா விக்கெட் மளமளவென சரிந்தது. கணேஷ் சதிஷ் 35 ரன்னிலும், ஜாபர் 11 ரன்னினும் ஆட்டமிழந்தனர். தாக்குப்பிடித்து விளையாடிய சர்வாத் 49 ரன்னில் ஜடேஜா பந்தில் அவட்டாக விதர்பா 200 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜடேஜா 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து விதர்பா 205 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் சவுராஷ்டிராவுக்கு 206 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

    206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சவுராஷ்டிரா 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. இந்தியாவின் நட்சத்திர வீரரான புஜாரா நிலைத்து நின்று விளையாடினால் சவுராஷ்டிரா கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது.
    ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா 307 ரன்னில் ஆல்அவுட் ஆக, விதர்பா 5 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. #RanjiTrophy
    ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விதர்பா - சவுராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த விதர்பா 312 ரன்களில் ஆல்அவுட் ஆனது. பின்னர் சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் விளையாடியது.

    நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் சவுராஷ்டிரா 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்திருந்தது. பட்டேல் 87 ரன்னுடனும், மன்கட் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மன்கட் மேலும் 5 ரன்கள் சேர்த்து 21-ல் ஆட்டமிழந்தார்.

    ஸ்னெல் பட்டேல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 102 ரன்னில் ஆட்டமிழந்தார். 10-வது வீரராக களம் இறங்கிய உனத்கட் 46 ரன்களும், கடைசி வீரராக களம் இறங்கிய சகாரியா 28 ரன்களும் சேர்க்க சவுராஷ்டிரா 307 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சில் ஆல்அவுட் ஆனது. சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா சர்வாத் 5 விக்கெட்டும், அக்சய் வகார் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    சவுராஷ்டிரா கடைசி விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்க்க, விதர்பா அணியால் முதல் இன்னிங்சில் 5 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற முடிந்தது. 5 ரன் முன்னிலையுடன் விதர்பா 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
    ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விதர்பா 312 ரன்னில் ஆல்அவுட் ஆகிய நிலையில், புஜாரா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். #RanjiTrophyFinal
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் விதர்பா - சவுராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டாஸ் வென்ற விதர்பா பேட்டிங் தேர்வு செய்தது. வாசிம் ஜாபர் (23) உள்பட முன்னணி வீரர்கள் சொதப்பியதால், விதர்பா நேற்றைய  முதல்நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களே எடுத்திருந்தது. கார்னிவர் 31 ரன்னுடனும், அக்சேய் வகார் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கார்னிவர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அக்சேய் வகார் 34 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த உமேஷ் யாதவ் 13 ரன்னும், குர்பானி 6 ரன்னும் சேர்க்க விதர்பா 312 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. கார்னிவர் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சவுராஷ்டிரா அணி சார்பில் உனத்கட் அதிகபட்சமாக மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் சவுராஷ்டிரா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் தேசாய் 10 ரன்னிலும், அடுத்து வந்த ஜடேஜா 18 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 4-வது வீரராக களம் இறங்கிய புஜாரா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால் சவுராஷ்டிரா அணி நெருக்கடிக்குள்ளானது.

    அடுதது வந்த வசவதா 13 ரன்னிலும், ஜேக்சன் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் விக்கெட் வீழந்தாலும் மற்றொரு தொடக்க வீரரான விக்கெட் கீப்பர் ஸ்னெல் பட்டேல் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். இவரது அரைசதத்தால் சவுராஷ்டிரா 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்துள்ளது.

    ஸ்னெல் பட்டேல் 87 ரன்னுடனும், மன்கட் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை சவுராஷ்டிரா 154 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதியில் கேரளாவை இன்னிங்ஸ் மற்றும் 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விதர்பா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. கேரள மாநிலம் வயநாட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய கேரளா - நடப்பு சாம்பியன் விதர்பா அணிகள் மோதின.

    டாஸ் வென்ற விதர்பா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய கேரளா முதல் இன்னிங்சில் உமேஷ் யாதவின் (7 விக்கெட்) அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 106 ரன்னில் சுருண்டது. பின்னர் விதர்பா முதல் இன்னிங்சை தொடங்கியது.

    நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் விதர்பா 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய விதர்பா 208 ரன்னில் ஆல்அவுட் ஆனது. சந்தீப் வாரியர் ஐந்து விக்கெட்டும், பாசில் தம்பி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 102 ரன்கள் பின்தங்கிய நிலையில் கேரளா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் உமேஷ் யாதவ் அபாரமாக பந்து வீசினார். இதனால் கேரளா ரன்கள் குவிக்க திணறியது. தொடக்க வீரர் அருண் கார்த்திக் 36 ரன்களும், 3-வது வீரர் விஷ்னு வினோத் 15 ரன்களும், ஜோசப் 17 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 24.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 91 ரன்னில் சுருண்டது. உமேஷ் யாதவ் ஐந்து விக்கெட்டும், யாஷ் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனால் விதர்பா இன்னிங்ஸ் மற்றும் 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஐந்து நாட்கள் கொண்ட போட்டி ஒன்றரை நாட்களில் வெறும் 106.1 ஓவரிலேயே முடிவடைந்தது.
    ரஞ்சி கோப்பை அரையிறுதியில் மயாங்க் அகர்வால், கருண் நாயர் ஏமாற்றம் அளிக்க மணிஷ் பாண்டே, கோபால், ஷரத் ஆட்டத்தில் கர்நாடகா 9 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் சேர்த்துள்ளது.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் கர்நாடகா - சவுராஷ்டிரா அணிகள் மோதும் அரையிறுதி ஆட்டம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற கார்நாடகா பேட்டிங் தேர்வு செய்தது.

    சவுராஷ்டிராவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தொடக்க வீரர்கள் சமர்த் (0), மயாங்க் அகர்வால் (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அடுத்து வந்த சித்தார்த் 12 ரன்னிலும், கருண் நாயர் 9 ரன்னிலும் வெளியேறினார்கள்.

    இதனால் கர்நாடகா 30 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு கேப்டன் மணிஷ் பாண்டே உடன் ஷ்ரேயாஸ் கோபால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி கர்நாடகாவை சரிவில் இருந்து மீட்டது.

    அணியின் ஸ்கோர் 136 ரன்னாக இருக்கும்போது மணிஷ் பாண்டே 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் கோபால் 87 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.



    விக்கெட் கீப்பர் ஷரத் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஆனால் கடைநிலை வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் கர்நாடகா முதல் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் சேர்த்துள்ளது. ஷரத் 74 ரன்களுடனும், மோர் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

    சவுராஷ்டிரா அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான உனத்கட் நான்கு விக்கெட்டுக்களும், சுழற்பந்து வீச்சாளர் கம்லேஷ் மக்வானா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    ரஞ்சி கோப்பை அரையிறுதியில் விதர்பாவிற்கு எதிராக உமேஷ் யாதவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கேரளா முதல் இன்னிங்சில் 106 ரன்னில் சுருண்டது. #RanjiTrophy
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. கேரள மாநிலம் வயநாடில் நடக்கும் போட்டியில் கேரளா - விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற விதர்பா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கேரள அணி முதலில் பேட்டிங் செய்தது. விதர்பா அணியின் குர்பானி, உமேஷ் யாதவ் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கேரள அணி பேட்ஸ்மேன்கள் வரிசையாக பெவிலியன் திரும்பிய வண்ணம் இருந்தனர். 7-வது பேட்ஸ்மேன் விஷ்னு வினோத் மட்டும் தாக்குப்பிடித்து ஆட்டமிழக்காமல் 37 ரன்கள் எடுக்க அந்த அணி 106 ரன்னில் சுருண்டது. 28.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது.



    உமேஷ் யாதவ் அபாரமாக பந்து வீசி 12 ஓவரில் 48 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் சாய்த்தார். ராஜ்னீஷ் குர்பானி 11.4 ஓவரில் 38 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் விதர்பா அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடகா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. #RanjiTrophy
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெங்களூருவில் நடைபெற்ற 3-வது காலிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் - கர்நாடகா அணிகள் மோதின. டாஸ் வென்ற கார்நாடக அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் முதல் இன்னிங்சில் 224 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக பிஷ்னோய் 79 ரன்களும், கேப்டன் லாம்ரோர் 50 ரன்களும் அடித்தனர். கர்நாடக அணி சார்பில் மிதுன், கவுதம் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் கர்நாடகா முதல் இன்னிங்சில் விளையாடியது. ராஜஸ்தானின் துள்ளியமான பந்து வீச்சில் கர்நாடக பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க திணறினார்கள். ஆனால் 9-வது வீரராக களம் இறங்கிய கேப்டன் வினய் குமார் ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் அடிக்க கர்நாடகா 263 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 39 ரன்கள் பின்தங்கிய நிலையில் ராஜஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் விளையாடியது. 2-வது இன்னிங்சிலும் ராஜஸ்தான் அணியால் ரன்கள் குவிக்க இயலவில்லை. லாம்ரோர் 42 ரன்களும், பிஸ்ட் 44 ரன்களும் அடிக்க 222 ரன்னில் சுருண்டது.

    இதனால் ராஜஸ்தான் அணி 183 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கர்நாடகா நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்திருந்தது. கருண் நாயர் 18 ரன்னுடனும், ரோனித் மோர் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மோர் மேலும் 3 ரன்கள் எடுத்து 8 ரன்னில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு கருண் நாயர் உடன் கேப்டன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக மணிஷ் பாண்டே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இருவரும் அரைசதம் அடிக்க கர்நாடக அணி 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
    ×