search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ரஞ்சி கோப்பை: மத்திய பிரதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது விதர்பா
    X

    ரஞ்சி கோப்பை: மத்திய பிரதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது விதர்பா

    • மத்திய பிரதேச அணிக்கு 320 ரன்களை விதர்பா அணி இலக்காக நிர்ணயித்தது.
    • 2-வது இன்னிங்சில் மத்திய பிரதேசம் அணி 258 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இந்தியாவில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் டாஸ் வென்ற விதர்பா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய விதர்பா அணி கருண் நாயரின் அரைசதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 170 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. மத்திய பிரதேச அணி தரப்பில் அவேஷ் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய மத்திய பிரதேச அணி 252 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹிமன்ஷு மந்த்ரி சதமடித்து அசத்தினார். இதன்மூலம் மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 82 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த விதர்பா அணி யாஷ் ரத்தோட் (141), அக்ஷய் வாத்கர்(77) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 402 ரன்களைச் சேர்த்து அசத்தியதுடன், மத்திய பிரதேச அணிக்கு 320 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

    அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய மத்திய பிரதேச அணிக்கு யாஷ் துபே - ஹர்ஷ் கௌலி ஜோடி அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இந்த ஜோடி 100 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர். துபே 94 ரனகளிலும் ஹர்ஷ் கௌலி 67 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து வந்த வேகத்தில் பெவிலியனுக்கு திரும்பினர்.

    இதனால் அந்த அணி இரண்டாவது இன்னிங்சில் 258 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. விதர்பா தரப்பில் யாஷ் தாக்கூர், அக்ஷய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதன்மூலம் விதர்பா அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது.

    இறுதிபோட்டியில் மும்பை - விதர்பா அணிகள் வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது.

    Next Story
    ×