search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லிக்கு எதிராக 322 இலக்கை எளிதாக எட்டியது பெங்கால்: அபிமன்யு 183 ரன்கள் குவித்தார்
    X

    டெல்லிக்கு எதிராக 322 இலக்கை எளிதாக எட்டியது பெங்கால்: அபிமன்யு 183 ரன்கள் குவித்தார்

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கெதிராக 323 ரன் இலக்கை எளிதாக எட்டி பெங்கால் அணி வெற்றி பெற்றது. #RanjiTrophy
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் - டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. அசோக் திண்டாவின் (4 விக்கெட்) அபார பந்து வீச்சால் டெல்லி 240 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஜான்டி சித்து அதிகபட்சமாக 85 ரன்கள் சேர்த்தார்.

    பின்னர் பெங்கால் முதல் இன்னிங்சை தொடங்கியது. டெல்லி அணியும் பந்து வீச்சில் பதிலடி கொடுத்தது. இதனால் பெங்கால் 220 ரன்னில் சுருண்டது. 20 ரன்கள் முன்னிலையுடன் டெல்லி அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஹிம்மத் சிங் (51), சுபோத் பாதி (62) அரைசதம் அடிக்க டெல்லி 301 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    முதல் இன்னிங்சில் 20 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் பெங்கால் அணிக்கு 322 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்து டெல்லி.

    322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்கால் அணி களம் இறங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்க வீரர்களான ஏ ராமன், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ராமன் 52 ரன்கள் சேர்த்தார். ஈஸ்வரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அபிமன்யு ஈஸ்வரன் ஆட்டமிழக்காமல் 183 ரன்கள் குவிக்க 3 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    Next Story
    ×