search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோகராஜ் சிங்"

    • தம்மை தவிர்த்து இந்தியாவுக்காக வேறு எந்த கேப்டனும் உலக கோப்பையை வென்று சாதனை படைப்பதை டோனி விரும்பவில்லை.
    • நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா தோற்க வேண்டும் என்பதற்காக டோனி வேண்டுமென்றே சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை.

    நட்சத்திர முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ் டோனி 3 விதமான உலக கோப்பைகளை வென்ற கேப்டனாகவும் மிகச் சிறந்த விக்கெட் கீப்பராகவும் ஃபினிஷராகவும் போற்றப்படுகிறார்.

    மேலும் 2017 சாம்பியன்ஸ் டிராபியை கருத்தில் கொண்டு ஜனவரியிலேயே வெள்ளைப்பந்து கேப்டன்ஷிப் பதவியை விராட் கோலியிடம் ஒப்படைத்த டோனி அவரது தலைமையில் சாதாரண வீரராக விளையாடினார்.

    இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிபோட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

    அதை விட 2019 உலகக் கோப்பையிலும் விராட் கோலி தலைமையில் மிகவும் வலுவான அணியாக களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் ரோகித் சர்மா 5 சதங்கள் அடித்த உலக சாதனை உதவியுடன் நாக் அவுட் சுற்றுக்கு சென்றது.

    அந்த நிலையில் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை 239 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை வந்தது. அதனால் ரிசர்வ் நாளில் நடைபெற்ற அப்போட்டியில் பவுலிங்க்கு சாதகமாக மாறிய பிட்ச்சில் ஸ்விங் செய்து மிரட்டலாக பந்து வீசிய நியூசிலாந்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராகுல் 1, ரோகித் 1, விராட் 1 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானது இந்தியாவின் வெற்றியை ஆரம்பத்திலேயே பறித்தது.


    சரிந்த இந்தியாவை ரவீந்திர ஜடேஜா மற்றும் டோனி ஆகியோர் நங்கூரமாக நின்று காப்பாற்ற போராடினர். இருப்பினும் அதில் ஒரு கட்டத்திற்கு பின் செட்டிலான டோனி மெதுவாக விளையாடியதால் அழுத்தத்திற்கு உள்ளான ஜடேஜா அதிரடியாக விளையாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு 77 (59) ரன்கள் குவித்து அவுட்டானார்.

    அதைத்தொடர்ந்து அதிரடியை துவக்கிய டோனி கடைசி நேரத்தில் சிக்ஸர் அடித்தாலும் டபுள் ரன்கள் எடுக்க முயற்சித்த போது மார்ட்டின் கப்டில் 50 (72) ரன்களில் ரன் அவுட் செய்தார். இதனால் இறுதியாக 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் கண்ணீர் விடாத குறையாக சோகத்தை வெளிப்படுத்தினர்.


    இந்நிலையில் அந்த போட்டியில் விராட் கோலி உலக கோப்பையை வென்று விடக்கூடாது என்பதற்காக டோனி வேண்டுமென்றே மெதுவாக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்ததாக யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அதை நினைத்தால் எப்போதும் என்னுடைய ரத்தம் கொதிக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா தோற்க வேண்டும் என்பதற்காக டோனி வேண்டுமென்றே சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. ஏனெனில் தம்மை தவிர்த்து இந்தியாவுக்காக வேறு எந்த கேப்டனும் உலக கோப்பையை வென்று சாதனை படைப்பதை டோனி விரும்பவில்லை.

    அதனாலேயே ஒருபுறம் ரவீந்திர ஜடேஜா கடுமையாக இந்தியாவை வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்த போதிலும் டோனி தன்னுடைய தரத்திற்கேற்றார் போல் விளையாடவில்லை. சொல்லப்போனால் அவர் தன்னுடைய தரத்திற்கு 40% மட்டுமே விளையாடாமல் முழுமையாக விளையாடியிருந்தால் 48-வது ஓவரிலேயே இந்தியா வென்றிருக்கும்.

    என்று அவர் கூறினார்.

    ×