search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யுவன் ஷங்கர் ராஜா"

    • இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது என்சி22 படத்தை இயக்கி வருகிறார்.
    • இவரின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பா ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.


    என்சி22

    இப்படத்தின் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    பிரேம்ஜி - யுவன் ஷங்கர் ராஜா - வெங்கட் பிரபு

    இந்நிலையில், நடிகர் பிரேம்ஜிக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா புதிய மொபைல் போனை பரிசளித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ள பிரேம்ஜி, " எனக்கு பரிசளித்ததற்கு நன்றி என் இசைக்குரு யுவன் ஷங்கர் ராஜா.. லவ் யூ.." என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு, 'அப்போ எனக்கு பரிசு இல்லை' என்று கவலையுடன் பதிவிட்டுள்ளார். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா 'உங்களுக்காக சில இசைகளை குக் செய்து வருகிறேன்' என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 'லவ் டுடே' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் தற்போது இயக்கி நடித்த படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

     

    லவ் டுடே

    லவ் டுடே

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் இடம்பெற்ற என்னை விட்டு பாடல் பலரின் கவனத்தை ஈர்த்து ஹிட் அடித்தது. இந்த பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருந்தார்.

    பிரதீப் ரங்கநாதன் - யுவன் ஷங்கர் ராஜா

    பிரதீப் ரங்கநாதன் - யுவன் ஷங்கர் ராஜா

     

    இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற என்னை விட்டு பாடலை யுவன் ஷங்கர் ராஜா குரலில் இயக்குனர் பிரதீப் வெளியிட்டிருக்கிறார். அதில், நான் உங்களுக்கு உறுதியளித்தபடி, லவ் டுடே படத்தின் என்னை விட்டு பாடல் யுவன் குரலில் இதோ. எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்று பதிவிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
    • இவர் தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

    ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.


    யுவன் ஷங்கர் ராஜா

    இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு, சரத்குமார் உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.


    யுவன் ஷங்கர் ராஜா

    சமீபத்தில் கமல்ஹாசன், பாவனா மற்றும் விக்ரம் ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர். இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவிற்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • 'லவ் டுடே' படத்தின் மூன்றாவது பாடல் சமீபத்தில் வெளியானது.
    • இது குறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    லவ் டுடே

    இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 'லவ் டுடே' படத்தின் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடலான "பச்சை இலை" சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. எனினும் இப்படலின் வரிகள் போதைப் பொருட்களை ஊக்குவிப்பது போல் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.


    யுவன் ஷங்கர் ராஜா

    அதில், "பச்சை இலை பாடலை நீங்கள் அனைவரும் என்ஜாய் பண்ணிருப்பீங்கனு நம்புறேன். இது ஜாலியான தருணத்திற்காக உருவாக்கப்பட்ட ஃபன்னாண பாடல். நிஜ வாழ்க்கையில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதில் இருந்து விலகி இருங்கள். இது எனது வேண்டுகோள்" என்று குறிப்பிட்டுள்ளார். 


    • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
    • இவர் கிட்டத்தட்ட 150-க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. 1997-ஆம் ஆண்டு வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமான இவர் கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


    யுவன் சங்கர் ராஜா

    25 ஆண்டுகளை கடந்து சினிமா துறையில் பயணிக்கும் யுவன் ஷங்கர் ராஜா தற்போது 'லத்தி', 'நானே வருவேன்', 'லவ் டுடே' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.


    யுவன் சங்கர் ராஜா

    சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா இன்று (03.09.2022) நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. டாக்டர் பட்டம் பெற்ற யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    • 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்றது.
    • காமன்வெல்த் போட்டி நிறைவு விழா பர்மிங்காமில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கின. 72 நாடுகள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட விளையாட்டு திருவிழாவில் 5,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த போட்களின் முடிவில் ஆஸ்திரேலியா 178 பதக்கங்களுடன் (67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம்) முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 176 பதக்கங்களுடன் (57 தங்கம், 66 வெள்ளி, 53 வெண்கலம்) இரண்டாவது இடத்தை பிடித்தது. கனடா 92 பதக்கங்களுடன்(26 தங்கம்,32 வெள்ளி, 34 வெண்கலம்) மூன்றாவது இடத்தில் இருந்தது. இந்தியா 61 பதக்கங்களை (22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம்) வென்று நான்காவது இடத்தை கைப்பற்றியது.


    காமன்வெல்த்

    இந்நிலையில் காமன்வெல்த் போட்டி நிறைவு விழா பர்மிங்காமில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அந்த கலை நிகழ்ச்சியில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான 'அவன் இவன்' படத்தில் இடம்பெற்ற 'டியா டியா டோலே' பாடலுக்கு மூன்று பெண்கள் நடனமாடினர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

    • கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன்.
    • இவரின் அடுத்த படத்திற்கு லவ் டுடே என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

    ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தனது முதல் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். ஜெயம் ரவியுடன் இணைந்து யோகிபாபு, காஜல் அகர்வால், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்து நல்ல வரவேற்பை பெற்றது.

    இதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    லவ் டுடே

    இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. விஜய் நடிப்பில் வெளியான லவ் டுடே படத்தின் டைட்டிலை இப்படத்திற்கு சூட்டியுள்ளனர்.

    இதையடுத்து இப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் 'சாசிட்டாலே' வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா குரலில் காதல் பாடலாக உருவாகியுள்ள இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    ×