search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள் பேரணி"

    • மாவட்ட செயலாளர் க. சுந்தர், காஞ்சிபுரம் தொகுதி எம்.பி. க.செல்வம் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாநில உரிமையை மீட்டெடுப்போம்.

    காஞ்சிபுரம்:

    தி.மு.க. மாநில இளைஞரணி 2-வது மாநாடு டிசம்பர் மாதம் 17-ந் தேதி சேலத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இரு சக்கர வாகன பிரசார பேரணியை கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார். இதையடுத்து பேரணி பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.

    நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, மதுராந்தகத்தில் சென்றடைந்தது. நேற்று மாலை காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான காஞ்சிபுரம் அருகே உள்ள சின்னையன் சத்திரத்தில் மாவட்ட செயலாளர் க. சுந்தர், காஞ்சிபுரம் தொகுதி எம்.பி. க.செல்வம் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் படுநெல்லி பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மோட்டார்சைக்கிள் பேரணி காஞ்சிபுரம் பொன்னேரி கரை மற்றும் பெரியார் தூண், அண்ணா இல்லம் போன்ற பகுதிகளில் சென்றது. பெரியார் தூணில் பிரசார பேரணிக்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் தொகுதி எம்.பி. க.செல்வம், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தசரதன், பி.எம்.குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம் .எஸ். சுகுமார், வக்கீல் துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மோட்டார்சைக்கிள் பிரசார பேரணியின் போது எழுத்தாளர் ராஜா தமிழ் மாறன் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே பிரசாரம் மேற்கொண்டார் . அப்போது அவர் பேசியதாவது:-

    கருப்பு என்றால் தியாகம், சிவப்பு என்றால் வீரம். வீரத்திற்கும் தியாகத்துக்கும் தமிழர்களுக்கு தமிழர்கள் தான் நிகரானவர்கள். நம்மை பிளவுபடுத்த ஒன்றிய அரசு நினைக்கிறது. இதை ஒருபோதும் நடத்திட முடியாது. கல்வி, சுகாதாரம் மூலம் நம்மை பின்னுக்கு தள்ள நினைக்கிறது. நிதி வசூல் மூலம் நம்மை ஒன்றிய அரசு வஞ்சிக்க நினைக்கிறது . அவர்கள் நினைப்பது ஒரு நாளும் பலிக்காது. நமது கடமையும் கண்ணியமும் கட்டுப்பாடும் நமது தமிழ் டி.என்.ஏ.வில் ஊறி இருக்கிறது. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாநில உரிமையை மீட்டெடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

    • திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி சார்பில் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகாமையில் மோட்டார் சைக்கிள் பேரணி தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.
    • பாஜ.க.வினர் விண்ணில் மூவர்ணத்திலான பலூன்களை பறக்க விட்டு கைகளில் தேசியக்கொடி ஏந்தி பேரணியாக புறப்பட்டு சென்றனர்.

    திருச்சி :

    இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை வீடுகள் தோறும் மூவர்ண தேசிய கொடியேற்றி மக்கள் கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் ஒரு பகுதியாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி சார்பில் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகாமையில் மோட்டார் சைக்கிள் பேரணி தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் கௌதம் நாகராஜன் தலைமை தாங்கினார். கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் வரவேற்றார். இளைஞரணி மாவட்ட தலைவர் ஹரிகுமார் முன்னிலை வகித்தார். இதில் இளைஞர் அணி மாநில தலைவர் ரமேஷ் சிவா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மோட்டார் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து பாஜ.க.வினர் விண்ணில் மூவர்ணத்திலான பலூன்களை பறக்க விட்டு கைகளில் தேசியக்கொடி ஏந்தி பேரணியாக புறப்பட்டு சென்றனர். இந்த பேரணி கலெக்டர் அலுவலகம், மிளகு பாறை, ஜங்ஷன் தலைமை தபால் நிலையம், காந்தி மார்க்கெட் வழியாக சத்திரம் நிலையத்தை சென்றடைந்தது.

    பேரணியில் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் ஸ்ரீராம், மாநில செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு வந்தே மாதரம், பாரத் மாதாக்கி ஜெ... என கோஷங்கள் எழுப்பிய படி சென்றனர்.

    ×