search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக்கடல் சங்கமம்"

    • பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை
    • படித்துறையில் படிந்திருக்கும் பாசிகளையும் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    கன்னியாகுமரி :

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் அய்யப்ப பக்த ர்கள் சீசன் காலம் தொடங்க உள்ளது. சீசன் காலத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்க ணக்கான அய்யப்ப பக்த ர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடு வார்கள். இதனால் பாதுகாப்பு காரணமாக முக்கடல் சங்க மத்தில் பக்தர்கள் குளிக்கும் பகுதியின் இரு புறமும் பாதுகாப்பு மிதவை கள் அமைத்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும். ஆனால் இந்த ஆண்டு பாதுகாப்பு மிதவைகள் அமைக்கப்பட வில்லை. இதனால் பக்தர்க ளின் உயிருக்கு ஆபத்து ஏற்ப டும் சூழல் ஏற்பட்டுஉள்ளது. அதேபோல் தேவசம் போர்டு நிர்வாகம் சார்பில் முக்டல் சங்கமம் படித்து றையில் படிந்திருக்கும் பாசிகள் அகற்றப் படாத தால் புனித நீராட வரும் வயதான பக்தர்கள் மற்றும் குழந்தைகள் கருங்கற்களால் கட்டப்பட்ட படித்துறையில் கீழே விழுந்து கை, கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வருகிறது. நேற்று மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கிழே விழுந்து காயத்துடன் சென்று உள்ள னர்.எனவே உயிர்சேதம் ஏற்படுவதற்கு முன் கன்னி யாகுமரி முக்கடல் சங்க மத்தில் பாதுகாப்பு மிதவை கள் அமைப்பதோடு படித்துறையில் படிந்திருக்கும் பாசிகளையும் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தை அமாவாசை விழா நிறைவுபெற்றதை யொட்டி நடந்தது
    • விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தை அமாவாசை விழா கோலாகலமாக கொண்டாட ப்பட்டது. இதையொட்டி நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடைமட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது.

    அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டது.

    அதன் பிறகு 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனு மதிக்கப்பட்டார்கள். இரவு 9 மணிக்கு பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும்போது பக்தர்கள் வழிெநடுகிலும் தேங்காய்பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்டனர்.

    அம்மன் வீதி உலா முடிந்த பிறகு நள்ளிரவு 11 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின்கிழக்குவாசல் திறக்கப்பட்டு அதன்வழியாக அம்மன்கோவிலுக்குள் பிரவேசித்த நிகழ்ச்சியும் நடந்தது.

    அதன்பிறகு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள்பிர காரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வர செய்தார்கள். பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அதன்பிறகு அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    • ஆடி அமாவாசை நாளில் நீராடும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடு
    • காசி, ராமேஸ்வரத்துக்கு இணையான புண்ணிய தளம் கன்னியாகுமரி.

    கன்னியாகுமரி:

    காசி, ராமேஸ்வரத்துக்கு இணையான புண்ணிய தளம் கன்னியாகுமரி. இங்கு இந்திய பெருங்கடல், வங்கக்கடல், அரபிக் கடல் ஆகிய முக்கடலும் ஒரே இடத்தில் சங்கமிக்கின்றன. இந்த முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் விநாயகர் தீர்த்தம், அனுமன் தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், காயத்ரி தீர்த்தம், கன்னியா தீர்த்தம், தனுஷ்கோடி தீர்த்தம், விசாக தீர்த்தம், மாதிரு தீர்த்தம், தனு தீர்த்தம்உள்பட 16 விசேஷ தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

    இதனால் இந்துக்கள் தங்களது முக்கிய விசேஷ நாட்களான ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை போன்ற சர்வ அமாவாசை நாட்களில் இந்த முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு பலிகர்மபூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் இந்த முக்கடல் சங்கமத்தில் வயதான முதியவர்கள் புனித நீராடும் போது அவர்களின் பாதுகாப்புக்காக முன்பு 4 புறமும் இரும்பு சங்கிலியினால் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் இந்த முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதிக்கு சங்கிலித்துறை கடற்கரைபகுதி என்று ெபயர் வர க்காரணமாயிற்று. காலப்போக்கில் கடல் அலை சீற்றத்தின் காரணமாகவும் கடல் உப்புக்காற்றினால் அந்த இரும்பு சங்கிலி சேதம்அடைந்து காணாமல் போய்விட்டது. தற்போது சங்கிலித்துறை கடற்கரை என்று பெயர் இருக்கிறதே தவிர அந்த பகுதியில் சங்கிலியை காணவில்லை. இதனால் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தக் குளியல் போடும் போது ராட்சத அலையில் சிக்கி அடிக்கடி உயிர்ப்பலியாகும் சம்பவம் நடந்து வருகிறது.

    எனவே இந்த உயிர் பலியை தடுக்க கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இரும்பு சங்கிலிகள் பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும் என்று பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி ஆடி அமாவாசையையொட்டி லட்சக்கணக்கான புத்தர்கள் கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பனம் கொடுப்பார் கள்.

    இதைத்தொடர்ந்து ஆடி அமாவாசைஅன்று புனித நீராடும் பக்தர்களுக்கு வசதியாகவும் வயதான முதியவர்களின் பாதுகாப்புக்காகவும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் 4 புறமும் இரும்பு சங்கிலியினால் பாதுகாப்பு வளையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியினை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேவசம் போர்டு நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    • கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீனம் தொடங்கி வைத்தார்
    • சுமங்கலிப் பெண்கள் அகல் விளக்கு ஏற்றி கடல் அன்னைக்கு தீபம் காட்டினார்கள்

    கன்னியாகுமரி :

    ஆனிமாத பவுர்ணமி யையொட்டி குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரையில் நடந்தது.

    கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள வேதபாடசாலையில்இருந்து கைலாய வாத்தியத்துடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாக னத்தில் நடராஜர் எழுந்தருளி கடற்கரையில்உள்ள பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக புறப் பட்டு வந்தார். அங்கு பூஜை நடந்தது.

    அதையடுத்து சுமங்கலிப் பெண்கள் அகல் விளக்கு ஏற்றி கடல் அன்னைக்கு தீபம் காட்டினார்கள். தொடர்ந்து வானத்தில் பவுர்ணமி நிலவு தோன்றியதும் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை தலைவர் வக்கீல் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் டாக்டர் சிவசுப்பிர மணியபிள்ளை, பொருளாளர செந்தில், ஒருங்கிணைப்பாளர் அனுசியா செல்வி ஆகியோர் முன்னிலைவகித்தார்கள்.

    கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீ சூரிய குரு மகாராஜ் மகாலிங்க தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் தீபம் ஏற்றி முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி குகநாதீஸ் வரர் கோவில் அர்ச்சகர் ராஜாமணி அய்யர் தலைமையில் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் அர்ச்சகர் சுரேஷ் முன்னிலையில் 5 சிவாச்சாரியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் 5 அடுக்கு தீபம் கொண்ட ராட்சத தீபாரதனை த்தட்டில் தீபம் ஏற்றி பவுர்ணமி நிலவை நோக்கி தீபம் காட்டி ஆராதனை செய்தனர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம் உள்பட திரளான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×