என் மலர்
உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி
- கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீனம் தொடங்கி வைத்தார்
- சுமங்கலிப் பெண்கள் அகல் விளக்கு ஏற்றி கடல் அன்னைக்கு தீபம் காட்டினார்கள்
கன்னியாகுமரி :
ஆனிமாத பவுர்ணமி யையொட்டி குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரையில் நடந்தது.
கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள வேதபாடசாலையில்இருந்து கைலாய வாத்தியத்துடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாக னத்தில் நடராஜர் எழுந்தருளி கடற்கரையில்உள்ள பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக புறப் பட்டு வந்தார். அங்கு பூஜை நடந்தது.
அதையடுத்து சுமங்கலிப் பெண்கள் அகல் விளக்கு ஏற்றி கடல் அன்னைக்கு தீபம் காட்டினார்கள். தொடர்ந்து வானத்தில் பவுர்ணமி நிலவு தோன்றியதும் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை தலைவர் வக்கீல் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் டாக்டர் சிவசுப்பிர மணியபிள்ளை, பொருளாளர செந்தில், ஒருங்கிணைப்பாளர் அனுசியா செல்வி ஆகியோர் முன்னிலைவகித்தார்கள்.
கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீ சூரிய குரு மகாராஜ் மகாலிங்க தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் தீபம் ஏற்றி முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி குகநாதீஸ் வரர் கோவில் அர்ச்சகர் ராஜாமணி அய்யர் தலைமையில் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் அர்ச்சகர் சுரேஷ் முன்னிலையில் 5 சிவாச்சாரியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் 5 அடுக்கு தீபம் கொண்ட ராட்சத தீபாரதனை த்தட்டில் தீபம் ஏற்றி பவுர்ணமி நிலவை நோக்கி தீபம் காட்டி ஆராதனை செய்தனர்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம் உள்பட திரளான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.