search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆராட்டு"

    • ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும்.
    • இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். பங்குனி மாத பூஜைகள் நாளை (14-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக ஐயப்பன் கோவில் நடை இன்று (13-ந்தேதி) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் கோவில் நடையை திறக்கிறார். இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடை பெறாது. வழக்கமான பூஜைகளுக்கு பிறகு ஹரிவராசனம் பாடப் பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

    பின்பு நாளை(14-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அதன்பிறகு கணபதி ஹோமம், உஷபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடை பெறும். காலை 9 மணி முதல் 11 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 16-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் 9-ம் நாளான வருகிற 24-ந்தேதி சரங்குத்தியில் பள்ளி வேட்டையும், 25-ந்தேதி பம்பையில் ஆராட்டும் நடைபெறுகிறது. அன்றுடன் பங்குனி உத்திர திருவிழா முடி வடைந்து இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

    பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர திருவிழா அடுத்தடுத்து வருவதால் ஐயப்பன் கோவில் நடை நாளை (14-ந்தேதி) முதல் வருகிற 25-ந்தேதி வரை 12 நாட்கள் தொடர்ச்சி யாக திறந்திருக்கும்.

    அந்த 12 நாட்களும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே, சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் உடனடி முன்பதிவு செய்ய பம்பையில் தற்காலிக மையம் திறக்கப்பட்டு இருக்கிறது.

    • பங்குனி மாத பூஜைகள் நாளை மறுநாள் கோவில் நடை திறக்கப்படுகிறது.
    • வருகிற 25-ந்தேதி வரை 12 நாட்கள் தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். பங்குனி மாத பூஜைகள் நாளை மறுநாள் (14-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக ஐயப்பன் கோவில் நடை நாளை (13-ந்தேதி) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் கோவில் நடையை திறக்கிறார். நாளை சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. வழக்கமான பூஜைகளுக்குப் பிறகு ஹரிவராசனம் பாடப்பட்டு இரவில் நடை சாத்தப்படும்.

    பின்பு மறுநாள் (14-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அதன்பிறகு கணபதிஹோமம், உஷபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடை பெறும். காலை 9 மணி முதல் 11 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 16-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் 9-ம் நாளான வருகிற 24-ந்தேதி சரங்குத்தியில் பள்ளி வேட்டையும், 25-ந்தேதி பம்பையில் ஆராட்டும் நடைபெறுகிறது.

    அன்றுடன் பங்குனி உத்திர திருவிழா முடிவடைந்து இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர திருவிழா அடுத்தடுத்து வருவதால் ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள் (14-ந்தேதி) முதல் வருகிற 25-ந்தேதி வரை 12 நாட்கள் தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

    அந்த 12 நாட்களும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே, சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் உடனடி முன்பதிவு செய்ய பம்பையில் தற்காலிக மையம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • மார்கழி மாதங்களில ஐயப்ப பூஜைகளும், பஜனைகளும் நடைபெறும்.
    • கோவிலுக்கு அருகே பாலருவியும், அச்சன்கோவில் ஆறும் உள்ளது.

    கோவில் தோற்றம்

    கார்த்திகை மாதம் பிறந்தாலே 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்ற சரண கோஷம் ஊர் தோறும், வீடு தோறும் கேட்கும். அனைத்து ஊர்களிலும் ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்த பக்தர்கள், கருப்பு மற்றும் காவி உடை அணிந்து செல்வதையும் அதிக அளவில் காணலாம். கார்த்திகை, மார்கழி மாதங்களில் எங்கு பார்த்தாலும் ஐயப்ப பூஜைகளும், பஜனைகளும் நடைபெறும். அந்த அளவிற்கு சுவாமி ஐயப்பன் மீது பக்தர்கள் பக்தி கொண்டு மாலை அணிந்து, சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபட்டு வருகிறார்கள்.

     தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை, திருத்தணி என்று அறுபடை வீடுகள் இருப்பது போல், ஐயப்ப சுவாமிக்கும் கேரளாவில் ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, பந்தளம், எரிமேலி, சபரிமலை என அறுபடை வீடுகள் உள்ளன. குளத்துப்புழாவில் பாலகனாகவும், ஆரியங்காவில் பூரண-புஷ்கலையுடன் அய்யனாகவும், அச்சன்கோவிலில் அரசனாகவும், எரிமேலியில் சாஸ்தாவாகவும், சபரிமலையில் ஐயப்பனாகவும் இருந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    சபரிமலைக்கு மாலை அணிந்து செல்கின்ற பக்தர்கள், ஐயப்பனின் இந்த ஆறு கோவில்களுக்கும், தமிழகத்தில் பாபநாசம் மலையில் காரையாற்றில் உள்ள சொரிமுத்து அய்யனார் உள்ளிட்ட பல்வேறு கோவிலுக்கும் சென்று விட்டு சபரிமலை செல்வது வழக்கம்.

    ஐயப்பனின் அறுபடை வீடுகளில் அரசனாக இருந்து ஆட்சி செய்வது, அச்சன்கோவில் திருத்தலமாகும். இந்த அச்சன் கோவில் தர்மசாஸ்தா, மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒருவரான பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். அச்சன் கோவில் திருக்கோவிலானது, தமிழக எல்லையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது.

    செங்கோட்டை, பண்பொழி, மேக்கரை வழியாக காட்டுப்பகுதியில் சென்றால் அச்சன்கோவில் செல்லும் வழியில் கோட்டைவாசல் கருப்பசாமி கோவில் உள்ளது. அச்சன்கோவில் செல்லும் பக்தர்கள் இந்த கோவிலில் வழிபட்ட பின்னரே அச்சன்கோவில் செல்வார்கள். கோவிலுக்கு அருகே பாலருவியும், அச்சன்கோவில் ஆறும் உள்ளது.

    அச்சன்கோவிலில் பூரண - புஷ்கலையுடன் தர்மசாஸ்தா மூலவராக உள்ளார். விநாயகர், முருகர், நாகராஜன், நாகக்கன்னி, குருவாயூரப்பன், வனதேவதைகளும் உள்ளன. கோவிலுக்கு எதிரே கருப்பசாமி கோவில் இருக்கிறது. தர்மதாஸ்தா சுவாமிக்குரிய நகைகள் எல்லாம் புனலூரில் அரசு கருவூலத்தில் உள்ளன. இந்த நகைகள் அனைத்தும், மண்டல பூஜையின் போது கோவிலுக்கு கொண்டு வந்து சுவாமிக்கு அணிவிக்கப்படும்.

    இந்த தர்மசாஸ்தா கோவிலுக்கு ஒரு வாள் உண்டு. காந்த மலைப்பகுதியில் இருந்து இறைவனே இதை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த வாள் இடத்துக்கு இடம், நிறம், எடை மாறும் அதிசயவாள் என்று சொல்லப்படுகிறது.

    சுவாமி தர்மசாஸ்தா இங்கே அரசனாகவும், ஆண்டவனாகவும் இருப்பதால், அவரிடம் வைக்கின்ற கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

    குழந்தை இல்லாத தம்பதியர்கள் சுவாமியை வழிபட்டு நாகராஜா கோவில் வளாகத்தில் உள்ள மரத்தில் முந்தானை சேலையை கிழித்து தொட்டில் கட்டி ஆட்டினால், மறு ஆண்டுக்குள் குழந்தை பாக்கியம் கிடைத்து வீட்டில் தொட்டிலாடும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.

    நாக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகராஜா கோவிலில் வந்து வழிபடுவார்கள். அங்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த வீணை வாசிப்போர் தங்கள் கையில் வைத்திருக்கும் வீணையை இசைத்து நாகராஜன் பற்றி பாடல்களை பாடினாலும், தோஷம் உள்ளவர்களின் ராசி, நட்சத்திரம் பற்றி பாடினாலும் தோஷம் நீங்குவதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அப்பகுதி பக்தர்கள் கூறுகையில், `அச்சன்கோவில் வனப்பகுதியாகும். இந்த கோவிலில் உள்ள தர்மசாஸ்தா அரசனாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களை பாதுகாத்து வருகிறார். அவருடைய கையில் வைத்துள்ள வெள்ளை சந்தனத்தையும், தண்ணீரையும் பாம்பு கடித்தவர்களுக்கு கொடுத்து உயிரை காப்பாற்றி வருகிறார். இந்த சிலை பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. '

    இந்த சிலையை வடித்த சிற்பி தர்மசாஸ்தாவின் கட்டளைப்படி அந்த மலைப்பகுதியில் உள்ள ராஜநாகத்தின் விஷத்தை போக்கும் மருந்தை எடுத்து வைத்து சிலையை செதுக்கி உள்ளார். சிலையை செதுக்கிய இரும்பு உளியை தண்ணீரில் தோய்த்து அடிப்பதற்கு பதிலாக அந்த மருந்தில் நனைத்து செதுக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் சிலையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்த தண்ணீரும், வெள்ளை சந்தனமும் அப்படியே இருக்கும். பாம்பு கடித்தவருக்கு அந்த தண்ணீரையும், சந்தனத்தையும் கொடுத்தவுடன் குணம் கிடைத்து விடுகிறது. நடை மூடிய பிறகும் எந்த நேரமாக இருந்தாலும் கோவில் மணியை அடித்த உடனே பூசாரி வந்து நடையை திறந்து பரிகாரமாய் இந்த சிகிச்சை அளிக்கிறார்' என்றார்கள்.

    இத்தனை சிறப்பு மிக்க அச்சன்கோவிலில் மார்கழி மாதம் நடைபெறுகின்ற மண்டல பூஜை வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினமே ஆபரணப்பெட்டி ஊர்வலம் நடைபெறும். தொடர்ந்து 17-ந் தேதி கொடியேற்றம், 25-ந் தேதி காலை 11 மணிக்கு தேரோட்டம், 26-ந் தேதி ஆராட்டும் நடக்கிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் `நிறைப் புத்தரிசி பூஜை' நடைபெறும். இந்த பூஜையில் பல்வேறு இடங்களில் இருந்து வயல்களில் விளைந்த நெற்கதிர்களை கொண்டு வந்து கொடுத்து பூஜை நடத்தி அதனை பக்தர்களுக்கு கோவிலிலிருந்து வழங்குவார்கள். இதனைப் பெற்று வீட்டில் வைத்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

    இதேபோல் அச்சன்கோவிலுக்கு சொந்தமான வயல்களில் தனியாக நெல் பயிரிடப்பட்டு அந்த நெற்கதிர்களை அறுவடை செய்து அச்சன்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் சபரிமலையில் நடைபெறும் நிறைப்புத்தரிசி விழாவிற்காக விரதம் இருந்த 51 பக்தர் களுடன், 51 நெற்கதிர் கட்டுகளை சபரிமலை கோவில் நிர்வாகத்தினா் சபரிமலைக்கு எடுத்துச் செல்வார்கள்.

    அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து பூஜைகள் நடக்கும். மதியம் 12 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் திறந்திருக்கும். ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் மண்டல பூஜை தேரோட்டம் நடைபெறும். ஐயப்பன் கோவில்களில் தேரோட்டம் நடைபெறும் ஒரே கோவில் இந்த அச்சன்கோவில் ஆகும்.

    ஒவ்வொரு கோவிலிலும் தேரை பக்தர்கள் வடம் (கயிறு), இரும்புச் சங்கிலி ஆகியவற்றால் இழுப்பார்கள். ஆனால் தர்மசாஸ்தா தேரை மட்டும் மூங்கில் பிரம்புகள் வைத்து தான் பக்தர்கள் இழுப்பார்கள். இந்த அதிசயம் இந்தக் கோவிலில் மட்டும் தான் நடைபெறுகிறது.

    தேரோட்டத்தின் போது தமிழக மக்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். தேரோட்டத்தின் போது கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி நடக்கும். இதேபோல் மண்டல பூஜை நாட்களிலும் இந்த கருப்பன் துள்ளல் (அதாவது கருப்பசாமி வல்லயம் அரிவாள் வைத்து ஆடுவது) சிறப்பு வாய்ந்ததாகும்.

    அச்சன்கோவில் பகுதியில் யாருக்கு பாம்பு கடித்தாலும், உடனே கோவிலுக்கு அந்த நபரை கொண்டு வருவார்கள். அவரை கொடிமரத்தின் அருகில் படுக்க வைத்து விட்டு கோவில் மணி அடித்தவுடன் கோவில் பூசாரி வந்து கோவிலைத் திறந்து சுவாமியின் சிலையில் உள்ள சந்தனத்தையும், தீர்த்தத்தையும் (தண்ணீர்) எடுத்து மருந்தாக கொடுக்கிறார். அதை குடித்த உடன் பாம்பின் விஷம் இறங்கி அந்த நபர் உயிர் பிழைத்து விடுவார். அந்த அதிசயம் இன்றும் இங்கு நடைபெறுகிறது.

    கோவில் உள்ள இடம் அடர்ந்த வனப்பகுதியாகும். அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு வர வேண்டுமானால் செங்கோட்டை, புனலூருக்கு தான் செல்ல வேண்டும். அதற்குள் பாம்பு கடித்தவர் இறந்துவிட வாய்ப்புள்ளது. எனவே இந்த கோவிலில் சுவாமியின் சந்தனத்தையும், தீர்த்தத்தையும் கொடுத்தால் விஷம் இறங்கி விடுகிறது என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

    • துப்பாக்கி ஏந்திய போலீசார் மரியாதை
    • கருடவாகனத்தில் வேட்டைக்குச்சென்று திரும்பும் வைபவம் நடைபெற்றது

    கன்னியாகுமரி :

    108 வைணவத் திருத்த லங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

    அதன்படி பங்குனித் திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதன்பிறகு தினமும் சிறப்பு வழிபாடுகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 9.ம் நாள் இரவில் ஆதிகேசவப்பெருமாளும், கிருஷ்ணசாமியும் கருடவாகனத்தில் வேட்டைக்குச்சென்று திரும்பும் வைபவம் நடைபெற்றது. 10-ம் நாளான நேற்று காலை திருவிலக்கம் நடந்தது.

    நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் ஆதிகேசவப்பெருமாளும், கிருஷ்ணசாமியும் கோவில் கிழக்கு நடைவழியாக எழுந்தருளினர். அப்போது துப்பாகிய ஏந்திய போலீசார் மரியாதை செய்தனர். பின்னர் திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி வாள் ஏந்தி முன் செல்ல, சுவாமி விக்ரகங்கள் மேற்கு வாசல் தற்காலிக பாலம், ஆற்றூர் கழுவன் திட்டை சந்திப்பு, தோட்டவாரம் வழியாக 3 நதிகள் சங்கமிக்கும் மூவாற்றுமுகம் ஆற்றுக்கு சென்றது.

    அப்போது பக்தர்கள் வழிநெடுக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மூவாற்று முகம் ஆற்றில் ஆராட்டு நடந்தது. பூஜைகளைத் தொடர்ந்து சுவாமி சுவாமி விக்ரகங்கள் கருட வாகனத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது.

    விழா ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன்குமார், நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் நாகதோஷ பரிகார ஸ்தலங்களில் நாகரே மூலவராகவீற்றிருக்கும் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் தை திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற் றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சாமி வாகன பவனி, சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு, ஆன்மிக சொற் பொழிவு, பரத நாட்டியம் மற்றும் இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    இதைத்தொடர்ந்து விழா வின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தி னம் நடந்தது. குமரி மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பாமா மற்றும் ருக்மணியுடன் அனந்த கிருஷ்ணர் தேரில் எழுந்தருளிய காட்சியை ஏராளமான பக்தர்கள் ரத வீதிகளில் இருபுறமும் கூடிநின்று பார்த்து மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் விழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபி ஷேகம் மற்றும் சிறப்பு வழி பாடு ஆகியவை நடந்தது. மாலையில் நாகராஜா கோவில் தெப்பகுளத்தில் சாமிக்கு ஆராட்டு விழா நடந் தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆராட்டு முடிந்ததும் சாமி ஒழுகினசேரி ஆராட்டு துறைக்கு எழுந்தருளினார். பின்னர் அங்கு அலங்காரம் முடித்து கோவிலுக்கு சாமி புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.

    ஆராட்டுத்துறையில் இருந்து கோவிலுக்கு எழுந்த ருளிய சாமியை வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அத்துடன் 10 நாட்கள் திருவிழா நிறைவடைந்தது. முன்னதாக மாலையில் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.

    • தை அமாவாசை விழா நிறைவுபெற்றதை யொட்டி நடந்தது
    • விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தை அமாவாசை விழா கோலாகலமாக கொண்டாட ப்பட்டது. இதையொட்டி நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடைமட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது.

    அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டது.

    அதன் பிறகு 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனு மதிக்கப்பட்டார்கள். இரவு 9 மணிக்கு பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும்போது பக்தர்கள் வழிெநடுகிலும் தேங்காய்பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்டனர்.

    அம்மன் வீதி உலா முடிந்த பிறகு நள்ளிரவு 11 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின்கிழக்குவாசல் திறக்கப்பட்டு அதன்வழியாக அம்மன்கோவிலுக்குள் பிரவேசித்த நிகழ்ச்சியும் நடந்தது.

    அதன்பிறகு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள்பிர காரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வர செய்தார்கள். பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அதன்பிறகு அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    • கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நடந்தது.
    • ஆடி அமாவாசை விழா நிறைவு பெற்றது.

    கன்னியாகுமரி: 

    கன்னியாகுமரியில் உலகப்புகழ் பெற்ற பகவதி அம்மன்கோவில்உள்ளது.இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் அமாவாசை தினத்தன்று ஆடி அமாவாசை விழா கோலா கலமாகக் கொண்டா டப்படுவது வழக்கம்.

    அதேபோலஇந்தஆண்டு அமாவாசை தினமான நேற்று ஆடி அமாவாசை விழா கோலாகலமாக கொண்டா டப்பட்டது. இதை யொட்டி நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடைமட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது. அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டது.

    அதன் பிறகு 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனும திக்கப்பட்டார்கள்.இரவு 8.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக் கப்பட்ட வெள்ளி கலை மான் வாகனத்தில்அம்மன்எழுந்தருளிவீதிஉலா வந்தநிகழ்ச்சி நடந்தது.

    அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவரும் போது பக்தர்கள் வழி ெநடுகிலும் தேங்காய் பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்டார்கள். அம்மன் வீதி உலா முடிந்த பிறகு நள்ளிரவு 11 மணிக்கு அம்மனுக்கு முக்கடல்சங்கமத்தில்ஆராட்டுநிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல்திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன்கோவிலுக்குள்பிரவேசித்தநிகழ்ச்சியும்நடந்தது.

    அதன்பிறகு அம்மனைவெள்ளிபல்லக்கில்எழுந்தருளச் செய்துகோவிலின்உள்பிரகாரத்தைசுற்றி3 முறை மேளதாளம் முழங்க வலம் வர செய் தார்கள். பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அதன்பிறகு அத்தாழபூஜையும் ஏகாந்த தீபாராதனையும்நடந்தது. விழா ஏற்பாடுகளை கன்னி யாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    • கொடிமரத்தில் இருந்து கொடி இறக்கப்பட்டது
    • திருவிழா நிறைவு பெற்றது

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்த பெற்ற திருக்கோவில்களில் மிகவும் முக்கியமான கோவில்களில் ஒன்றானது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் இந்த கோவிலில் கடந்த ஆறு நாட்களாக நடந்து வந்த சிறப்புத்திருவிழா நேற்று சுவாமி ஆராட்டுடன் நிறைவடைந்தது.

    108 வைணவத்திருப் பதிகளில் ஒன்றானதும், நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பெற்றதுமான திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் 22 நீள கடுசர்க்கரை யோக படிமத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    பல ஆண்டுகளாக நடந்து வந்த திருப்பணியைத் தொடர்ந்து கடந்த ஜூலை 6-ந்தேதி கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது. அத்துடன் அருகில் உள்ள சாஸ்தா சன்னதி, குலசேகரப்பெருமாள் சன்னதியிலும் கும்பாபி ஷேகம் நடந்தது. கும்பாபி ஷேகத்துக்குப் பின்னர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கும்பாபிஷேகத்தை தொடர்ந்து கடந்த 9-ந்தேதி புதியதாக தங்கக்கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று மாலை ஆறுநாள் திருவிழாவுக்காக கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து விழா நாட்களில் சிறப்பு பூஜைகள் சுவாமி நாற்காலி வாகனம், அனந்த வாகனம், கமலவாகனம், பல்லக்கு வாகனம் ஆகியவற்றில் பவனி வருதல் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன் தினம் கோவில் வெளியே அரச மரம் அருகில் சாமி பள்ளி வேட்டைக்குச்செல்லும் நிகழ்வு நடந்தது.

    நேற்று கோவில் ஆராட்டு விழாவுக்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை வழக்கமான பூஜைகள் நடந்தது. மதியம் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் ஆதிகேசவப் பெருமாள் மேற்குவாசல் வழியாக பக்தர்கள் புடை சூழ பறளியாறு பாயும் கிழக்குக்கடவிற்கு ஆராட்டுக்கு எழுந்தருளினார்.

    திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி உடைவாளுடன் வாகனத்தின் முன் சென்றார். அப்போது வானம் இருண்டு மழை கொட்டியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வாகனத்துடன் ஊர்வலமாகச் சென்றனர். பின்னர் பறளியாற்றில் ஆதிகேசவப்பெருமாளுக்கு ஆறாட்டு, நிவேத்யம், தீபாரா தனையைத் தொடர்ந்து சுவாமி கோவிலுக்குத் திரும்புதல் நிகழ்ச்சி நடை பெற்றது.

    திருவிழாவுக்காக ஏற்றப்பட்ட கொடி இறக்கப் பட்டது. மதியம் அன்ன தானம் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.

    • திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த 6-ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
    • ஸ்ரீ பூதபலி பூஜைகள் நடந்தது. அதை தொடர்ந்து தங்க கொடிமரத்தில் இருந்து கொடி இறக்கப்பட்டு கும்பாபிஷேக பூஜைகள் சிறப்பு திருவிழாக்கான பூஜைகள் நிறைவு பெற்றது.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த 6-ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

    அதை தொடர்ந்து கடந்த 9-ம் தேதி முதல் 6 நாட்கள் சிறப்பு திருவிழா புதிய தங்கமுலாம் பூசப்பட்ட 72 - அடி உயர கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கி நடத்துவருகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    நேற்று 5- ம் திருவிழாவில் சிறப்பு பூஜைகளும் இரவு 10 மணிக்கு சாமி பள்ளி வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலின் ஈசான மூலையில் அரச மரத்தின் அருகே வேட்டை தளம் அமைக்கப்பட்டு அதில் பள்ளி வேட்டை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 5 மணிக்கு நிர்மால்ய பூஜை அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து காலை 11 மணிக்கு கோவில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பரளியாற்று கடவில் சாமிக்கு ஆராட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

    மதியம் 12 மணிக்கு கலாபிஷேகம், ஸ்ரீ பூதபலி பூஜைகள் நடந்தது. அதை தொடர்ந்து தங்க கொடிமரத்தில் இருந்து கொடி இறக்கப்பட்டு கும்பாபிஷேக பூஜைகள் சிறப்பு திருவிழாக்கான பூஜைகள் நிறைவு பெற்றது.

    ×