search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganapati Homam"

    • ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும்.
    • இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். பங்குனி மாத பூஜைகள் நாளை (14-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக ஐயப்பன் கோவில் நடை இன்று (13-ந்தேதி) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் கோவில் நடையை திறக்கிறார். இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடை பெறாது. வழக்கமான பூஜைகளுக்கு பிறகு ஹரிவராசனம் பாடப் பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

    பின்பு நாளை(14-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அதன்பிறகு கணபதி ஹோமம், உஷபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடை பெறும். காலை 9 மணி முதல் 11 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 16-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் 9-ம் நாளான வருகிற 24-ந்தேதி சரங்குத்தியில் பள்ளி வேட்டையும், 25-ந்தேதி பம்பையில் ஆராட்டும் நடைபெறுகிறது. அன்றுடன் பங்குனி உத்திர திருவிழா முடி வடைந்து இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

    பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர திருவிழா அடுத்தடுத்து வருவதால் ஐயப்பன் கோவில் நடை நாளை (14-ந்தேதி) முதல் வருகிற 25-ந்தேதி வரை 12 நாட்கள் தொடர்ச்சி யாக திறந்திருக்கும்.

    அந்த 12 நாட்களும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே, சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் உடனடி முன்பதிவு செய்ய பம்பையில் தற்காலிக மையம் திறக்கப்பட்டு இருக்கிறது.

    • சீரமைப்பு பணிகள் நடைபெற்றது
    • புனித நீர் அபிஷேகத்துடன் பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் உள்ள சிவசக்தி வள்ளி முத்து மாரியம்மன் கோவிலில் நன்கொடையாளர் மூலம் ரூ.4 லட்சம் மதிப்பில் தரைக்கு டைல்ஸ், கேட் ஆகிய சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.

    இதையடுத்து நேற்று காலை கோவிலில் கணபதி ஹோமம் நடைபெற்றது. இதில் கோவில் விழாக்குழு தலைவர் கே.டி. குமார், ஓய்வு கண்டக்டர் சேகர், ஏழுமலை, பேருராட்சி வார்டு உறுப்பினர்கள் மணி விஜய் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அம்மனுக்கு புனித நீர் அபிஷேகத்துடன் பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கணபதிக்கும், அனுமனுக்கும் சூரிய பகவான் தான் குரு.
    • அகத்தி இலை-துயரம் தீரும். தாழை இலை- கோபம் நீங்கும்.

    கணபதிக்கும், அனுமனுக்கும் சூரிய பகவான் தான் குரு. இருவரும் வேதங்களை சூரியதேவனிடம் கற்றவர்கள். கணபதி காலையில் சூரிய உதயகாலத்தில் சூரியனை வணங்கி, குருபூஜை செய்யும் சமயம் என்பதால்,கணபதி ஹோமம் நடத்துபவர்கள் அதிகாலை பிரம்மமுகூர்த்தமான நாலரை மணிக்கே ஆரம்பித்து ஆறுமணிக்குள், அதாவது சூரியன் உதிக்கும் முன் முடிப்பது என்பது சம்பிரதாயம். எனவே தான், புதுமனை புகுவிழா நடத்துபவர்கள் சூரிய உதயத் திற்கு முன்னரே கணபதி ஹோமம் செய்து பூஜை நடத்தி முடிக்கின்றனர்.

    விநாயகர் திருமணம்

    விநாயகர் புத்தியும் சித்தியும் என்று இரு மனைவியரை மணந்து வாழ்ந்தார் என்று புராணக்கதை உண்டு. புத்தி என்பது ஞானமும், அறிவும் குறிக்கும்.சித்தி-என்பது திறமை,முன்னேற்றம் மற்றும் வெற்றி ஆகியவற்றை குறிக்கும் என்பது சமயப்பெரியோர்கள் கூற்று.

    மணக்குள விநாயகர் ஆலயத்தில் சித்திபுத்தி விநாயகருக்கு திருமணம் செய்து வைப்பதை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செய்கிறாய்கள். விநாயகருக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுவது இந்த தலத்தில் மட்டுமே நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    விநாயகருக்கு அர்ச்சனை செய்யும் இலைகள்

    விநாயகருக்கு என்னென்ன இலைகளைக்கொண்டு அர்ச்சனை செய்தால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்று வேத நூல்கள் தெரிவிக்கின்றன.

    மருதஇலை-மகப்பேறு.

    அரசு இலை-எதிராளி அடங்குவான் வீண்பழி வாராது.

    அகத்தி இலை-துயரம் தீரும்.

    தாழை இலை- கோபம் நீங்கும்.

    கண்டங்கத்தரி- நற்புகழ் வாய்க்கும்.

    வில்வஇலை- இன்ப வாழ்வு மலரும்.

    வன்னிஇலை- முகம் ஓளிவீசும்.

    வெள்ளெருக்குஇலை- சௌபாக்கியம்.

    • கீழ்வேளூர் அருகே சாட்டியகுடியில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • லட்சுமி ஹோமம், ரக்சா பந்தனத்துடன் யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணா ஹுதி நடைபெ ற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே சாட்டியகுடியில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன், கணபதிஹோமம் முதல் கால யாகசாலை பூஜை நடைப்பெற்றது.

    அதனை த்தொடர்ந்து வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் மற்றும் இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. லட்சுமி ஹோமம், ரக்சா பந்தனத்துடன் யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணா ஹுதி நடைபெ ற்றது.

    தொடர்ந்து மேளதா ளங்கள் முழங்க, சிவாசாரியார்கள் கடத்தை சுமந்து கோவிலை வலம் வந்து வலம்புரி விநாயகர் கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ×