என் மலர்
வழிபாடு

தடைகளை நீக்கி வெற்றி தரும் கணபதி ஹோமம்
- 'முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்பார்கள்.
- கணபதி ஹோமத்தை 'விநாயகர் வேள்வி' என்றும் அழைப்பர்.
எந்த ஒரு செயலை தொடங்குவதாக இருந்தாலும் முழுமுதற் கடவுளான கணபதியை வணங்கி விட்டு தொடங்குவது தான் இந்துக்களின் வழக்கம். கணபதிக்குரிய பூஜைகள், ஹோமங்கள் போன்றவற்றை செய்த பிறகு தொடங்கும் காரியங்கள் அனைத்தும் எந்தவித தடைகளும் இன்றி வெற்றிகரமாக நடைபெறும் என்ற நம்பிக்கைதான் இதற்கு காரணம்.
ஒரு கடிதத்தை எழுத தொடங்கும் முன்பு கூட பிள்ளையார் சுழி போட்ட பின்பு தான் எழுத தொடங்குகிறோம். எந்த செயலையும் கணபதியை வணங்கிய பிறகே தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டவரே சிவபெருமான்தான். ஆனால், ஒரு சமயம் சிவபெருமான் முப்புரங்களை அழிக்க புறப்பட்டபோது, கணபதியை வணங்க மறந்துவிட்டார். எனவே செல்லும் வழியில் அவரது தேர் பழுதானது. கணபதியை வணங்காமல் புறப்பட்ட ஈசனுக்கே இந்த நிலைமை ஏற்பட்டது. இதில் இருந்து கணபதியை வணங்குவதன் முக்கியத்துவத்தை அறியலாம்.
'முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்பார்கள்.
எந்தவொரு காரியத்துக்கும் தொடக்கம் நன்றாக இருந்தால் தான் நாம் நினைக்கும் வெற்றியை பெற முடியும். எனவேதான், எல்லா சுப நிகழ்ச்சியையும் முதலில் கணபதி ஹோமம் செய்து தொடங்குகிறார்கள்.
கணபதி ஹோமத்தை 'விநாயகர் வேள்வி' என்றும் அழைப்பர். நம் வீட்டில் நடக்கும் கிரகப்பிரவேசம், காது குத்துதல், கல்யாணம் என எந்த சுபகாரியமாக இருந்தாலும் கணபதி ஹோமத்தை செய்த பிறகு தொடங்குவது சிறந்த பலனை தரும். சுபகாரியங்கள் மட்டும் இன்றி, நம் முன்னோர்களை நினைவுப்படுத்தும் தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற நாட்களிலும் கணபதி ஹோமத்தை நடத்தலாம்.
கணபதி ஹோமத்தை எப்போதும் அதிகாலையில், அதுவும் சூரிய உதயத்திற்கு முன்பாகவே செய்வது தான் வழக்கம். கணபதி ஹோமத்தை மேற்கொள்ளும்போது, விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்களை உச்சரித்து, அவரை புகழ்ந்து பக்தி பாடல்களைப் பாட வேண்டும்






