திருவட்டார் ஆதிகேசவ பெருமாளுக்கு மூவாற்று முகம் ஆற்றில் ஆராட்டு

துப்பாக்கி ஏந்திய போலீசார் மரியாதைகருடவாகனத்தில் வேட்டைக்குச்சென்று திரும்பும் வைபவம் நடைபெற்றது
திருவட்டார் ஆதிகேசவ பெருமாளுக்கு மூவாற்று முகம் ஆற்றில் ஆராட்டு
Published on

கன்னியாகுமரி :

108 வைணவத் திருத்த லங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

அதன்படி பங்குனித் திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதன்பிறகு தினமும் சிறப்பு வழிபாடுகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 9.ம் நாள் இரவில் ஆதிகேசவப்பெருமாளும், கிருஷ்ணசாமியும் கருடவாகனத்தில் வேட்டைக்குச்சென்று திரும்பும் வைபவம் நடைபெற்றது. 10-ம் நாளான நேற்று காலை திருவிலக்கம் நடந்தது.

நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் ஆதிகேசவப்பெருமாளும், கிருஷ்ணசாமியும் கோவில் கிழக்கு நடைவழியாக எழுந்தருளினர். அப்போது துப்பாகிய ஏந்திய போலீசார் மரியாதை செய்தனர். பின்னர் திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி வாள் ஏந்தி முன் செல்ல, சுவாமி விக்ரகங்கள் மேற்கு வாசல் தற்காலிக பாலம், ஆற்றூர் கழுவன் திட்டை சந்திப்பு, தோட்டவாரம் வழியாக 3 நதிகள் சங்கமிக்கும் மூவாற்றுமுகம் ஆற்றுக்கு சென்றது.

அப்போது பக்தர்கள் வழிநெடுக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மூவாற்று முகம் ஆற்றில் ஆராட்டு நடந்தது. பூஜைகளைத் தொடர்ந்து சுவாமி சுவாமி விக்ரகங்கள் கருட வாகனத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது.

விழா ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன்குமார், நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com