search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் தடை"

    • காஞ்சிபுரம் துணைமின் நிலையத்தில் நாளை அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் தடை ஏற்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் துணைமின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகவே அப்போது காஞ்சிபுரம் நகரம் மற்றும் நகரத்தை ஒட்டியுள்ள சில பகுதிகளான பாலியர்மேடு, திருகாலிமேடு, வெள்ளைகேட், காரைப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம் மற்றும் வேளியூர் துணை மின் நிலையங்களை சேர்ந்த கிராமங்களிலும் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

    • பராமரிப்பு பணிகள் நடக்கிறது
    • 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நிறுத்தம்

    வேலூர்:

    வேலூர் மின் வாரிய செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் கூறுகையில், வருகிற 27-ந்தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சாத்துமதுரை, கீழ்பள்ளிப்பட்டு துணை மின் நிலையங்களில் அத்தியாவசியமான மின் சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக சாத்துமதுரை, அடுக்கம்பாறை, மூஞ்சூர்பட்டு, நெல்வாய், துத்திப்பட்டு, காட்டுப்புத்தூர், கீழ்பள்ளிப்பட்டு, கம்மவான்பேட்டை, சலமநத்தம், காட்டுக்காநல்லூர், ரெட்டிபாளையம் மற்றும் அதைச்சுற்றி கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    • மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பல்லாவரம், மாங்காடு, மாதவரம், பெரம்பூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
    • மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் நாளை (4-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பல்லாவரம், மாங்காடு, மாதவரம், பெரம்பூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    பல்லாவரம் பகுதியில் பம்மல் மெயின் ரோடு, கிருஷ்ணாநகர் 1 முதல் 4-வது தெரு, மூங்கில் ஏரி ஒரு பகுதி, பெருங்களத்தூர் காந்தி ரோடு, என்.ஜி.ஒ. காலனி, பாரதி நகர், கல்கி தெரு, விவேக் நகர். மாங்காடு பகுதியில் பட்டூர் பஜார் தெரு, பாலாஜி தெரு, பாத்திமா நகர், நியூ காமாட்சி நகர், லீலாவதி நகர், பட்டூர் மெயின் ரோடு (குளம்), மாதவரம் பகுதியில் லெதர் எஸ்டேட், ரவி கார்டன், பழனியப்பா நகர், மேதா நகர், ஏ.பி.சி.டி. காலனி, பத்மாவதி நகர், பெரம்பூர் பகுதியில் சிட்கோ கட்டபொம்மன் 3 முதல் 7-வது தெரு, ஆர்.வி.நகர் பகுதி, சின்ன பாப்பம்மாள் தெரு, தெற்கு உயர்நீதிமன்ற காலனி, வில்லிவாக்கம் பகுதி, பாலியம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர், ஆழ்வார்திருநகர், பெரம்பூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
    • மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக இணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர், ஆழ்வார்திருநகர், பெரம்பூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    போரூர் பகுதியில் மாங்காடு நெல்லித்தோப்பு மகாலட்சுமி நகர், திருப்பதி நகர், மாசிலாமணி நகர், சார்ல்ஸ் நகர், கொழு மணிவாக்கம் பகுதி, ராஜீவ் நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, கே.கே நகர், அலெக்ஸ் நகர், முத்துகுமரன் கல்லூரி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

    ஆழ்வார்திருநகர் பகுதியில் திருவள்ளுவர் சாலை மெயின் ரோடு, வீரப்பன் நகர், கிருஷ்ணன் கோவில் தெரு, ஜானகி நகர், அண்ணா தெரு, ராஜாஜி அவென்யூ.

    பெரம்பூர் பகுதியில் பெரியார் நகர் முழுவதும், ஜி.கே.எம் காலனி முழுவதும், எஸ்.ஆர்.பி காலனி, பேப்பர் மில்ஸ் சாலை, பூம்புகார் நகர் முழுவதும், ராஜாஜி நகர், பார்த்திபன் தெரு, காமராஜ் தெரு, ஜானகி ராம் காலனி ஐ.சி.எப் முத்தமிழ் நகர் 4 மற்றும் 5-வது பிளாக் பகுதி, சென்னை பாட்டையா ரோடு, தெற்கு மாட வீதி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம் ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
    • தென்னம்புலம், கரியாப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம் ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் வேதாராண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்பள்ளி, தோப்புதுறை, பெரியகுத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பகநாதர்குளம், இடும்பவனம் தொண்டியக்காடு, தாணிக்கோட்டகம்,

    வாய்மேடு, தகட்டூர் பஞ்நதிக்குளம், மருதூர், தென்னடார், பன்னாள், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், கடிநெல்வயல், கத்தரிபுலம், செட்டிபுலம், நாகக்குடையான், குரவப்புலம், தென்னம்புலம், கரியாப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேலும் பராமரிப்பு பணி முடிவு பெறும் நேரத்திற்கு ஏற்றவாறு மின் வினியோகம் முன்கூட்டியே வழங்க வாய்ப்பு உள்ளது.

    எனவே தனிநபர்கள் தன்னிச்சையாக மின்வாரிய பணியாளர் துணையின்றி மின் பாதைகளில் மரம்வெட்டுதல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என மின்வாரிய உதவி செயற்பொறியளார் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

    • வருகிற 13-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
    • பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கிண்டி, அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    சென்னையில் வருகிற 13-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் வினியோகம் கொடுக்கப்படும்.

    தாம்பரம் பகுதி: பெருங்களத்தூர் காந்திரோடு என்.ஜி.ஓ. காலனி, பாரதி நகர், சேகர் நகர், பாலாஜி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்,

    அம்பத்தூர் பகுதி: பொன்னியம்மன் நகர், 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கிண்டி, அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    தாம்பரம் பகுதி: பல்லாவரம் பெரியார் நகர், அம்மன் நகர், அரண்மனைசாவடி, லட்சுமணன் நகர், சுபம்நகர் மற்றும் திரிசூலம்.

    கிண்டி: தில்லை கங்கா நகர், நங்கநல்லூர் ஒரு பகுதி, பழவந்தாங்கல், ஆதம்பாக்கம், வானுவம் பேட், சாந்திநகர், புழுதிவாக்கம், ஏ.ஜி.எஸ். காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள். அம்பத்தூர் தொழிற்பேட்டை மேட்டு தெரு, ரெட்டி தெரு, காவரை தெரு, நடேசன் நகர், முனுசாமி தெரு, எஸ்.எஸ்.ஐ.ஓ.ஏ. காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பகுதிகளாகும்.

    • நல்லகட்டிபாளையம், நெட்டகட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடைசெய்யப்படும்.
    • வருகிற 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    அவினாசி:

    அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பெருமாநல்லூர் துணை மின்நிலையத்தை சேர்ந்த கணக்கம்பாளையம் உயரழுத்த மின்பாதைக்குட்பட்ட பூலுவப்பட்டி பிரிவு அலுவலகத்தை சேர்ந்த பகுதிகளில் வருகிற 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே அன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை கூலிப்பாளையம், நல்லகட்டிபாளையம், நெட்டகட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடைசெய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பராமரிப்பு பணி நடைபெறுவதால்
    • மங்களமேடு-குன்னம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி. சின்னாறு, எறையூர், அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், திருவாளந்துறை, பிம்பலூர், மறவநத்தம், தைக்கால், நன்னை, அந்தூர், லெப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூர், பென்னகோணம், சு.ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், அந்தூர், குன்னம், வேப்பூர், நன்னை, ஓலைபாடி எழுமூர், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், கே.புதூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என்று லெப்பைக்குடிகாடு உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    • பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
    • திருமானூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் உயரழுத்த மின் பாதையில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான சாத்தமங்கலம், வெற்றியூர், விரகாலூர், கள்ளூர், கீழக்குளத்தூர், திருமானூர், சேனாபதி, முடிகொண்டான், வண்ணம்புத்தூர், கீழக்கவட்டான்குறிச்சி, கரைவெட்டிபரதூர், அண்ணிமங்கலம், அரண்மனைக்குறிச்சி, திருமழபாடி, கண்டிராதித்தம், புதுக்கோட்டை, இலந்தைக்கூடம், கோவிலூர், சின்னபட்டாக்காடு, ஏலாக்குறிச்சி, மாத்தூர், காமரசவல்லி, குருவாடி, தூத்தூர், வைப்பூர், மேலராமநல்லூர், கீழராமநல்லூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். 

    • மாமல்லபுரம் அருகே நள்ளிரவு புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
    • புயல் தாக்கும் மாவட்டங்களில் மின் ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் தீவிர புயலிலிருந்து புயலாக வலுவிழந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று நள்ளிரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே நள்ளிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று மாலை நிலவரப்படி சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கு திசையில் 170 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலைக்கொண்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து தென் கிழக்கே 135 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. புயலின் வேகம் 13 கிலோ மீட்டரிலிருந்து 14 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

    இதுதொடர்பாக தமிழக மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி செய்தியாளர் கூறியதாவது:-

    மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும். மின் கம்பங்கள், ஜேசிபி இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் தேவைக்கு ஏற்ப வைக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் மட்டும் மின் தடை செய்ய வேண்டும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 

    • பெரம்பலூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
    • பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை இருக்காது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் நாளை (17ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை மற்றும் கிராமிய பகுதிகளான ஆலம்பாடி, அருமடல், எளம்பலூர் இந்திரா நகர், தண்ணீர்பந்தல், காவலர் குடியிருப்பு, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (17ம்தேதி) காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என மின் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.
    • ஆதியூா் பிரிவு, செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி, செங்கப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 15-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா். மின்தடை செய்யப்படும் இடங்கள் விவரம் வருமாறு:-

    ஊத்துக்குளி துணை மின் நிலையம்:

    ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.எஸ், வி.ஜி. புதூா்,ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்ப்பாளையம், பி.வி.ஆா்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என். பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆா்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானூா், தொட்டியவலசு, வயக்காட்டுபுதூா்.

    செங்கப்பள்ளி துணை மின் நிலையம்:

    செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடாபாளையம், பள்ளபாளையம், நீலாக்கவுண்டம்பாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூா், வட்டாளபதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு, செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    ×