என் மலர்
நீங்கள் தேடியது "Monthly maintenance tasks"
- வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம் ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
- தென்னம்புலம், கரியாப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம் ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளன.
இதன் காரணமாக இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் வேதாராண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்பள்ளி, தோப்புதுறை, பெரியகுத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பகநாதர்குளம், இடும்பவனம் தொண்டியக்காடு, தாணிக்கோட்டகம்,
வாய்மேடு, தகட்டூர் பஞ்நதிக்குளம், மருதூர், தென்னடார், பன்னாள், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், கடிநெல்வயல், கத்தரிபுலம், செட்டிபுலம், நாகக்குடையான், குரவப்புலம், தென்னம்புலம், கரியாப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேலும் பராமரிப்பு பணி முடிவு பெறும் நேரத்திற்கு ஏற்றவாறு மின் வினியோகம் முன்கூட்டியே வழங்க வாய்ப்பு உள்ளது.
எனவே தனிநபர்கள் தன்னிச்சையாக மின்வாரிய பணியாளர் துணையின்றி மின் பாதைகளில் மரம்வெட்டுதல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என மின்வாரிய உதவி செயற்பொறியளார் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது
- காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் தடை
அரக்கோணம்:
அரக்கோணம் கோட்டத்திற்கு உட்பட்ட மின்பாதைகளில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை அரக்கோணம் நகரம், காவனூர், ஆனைபாக்கம், அம்பிரிஷிபுரம், கீழ் குப்பம், நாகவேடு, புளியமங்கலம், ஆத் தூர், செய்யூர், நகரிகுப்பம், அம்மனூர், நேவல், மற்றும் சுற்றி யுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
இதேபோல் இச்சிபுத்தூர் மற்றும் சாலை துணை மின் நிலையங்களில் 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.
அதன் காரணமாக இச்சிபுத்தூர், ஈசலாபுரம், எம்.ஆர்.எப்., தணிகைபோளூர், வாணியம் பேட்டை, வடமாம்பாக்கம், உளியம்பாக்கம், வளர்புரம், தண்டலம், மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலும் சாலைதுணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தண்டலம், மின்னல், நரசிங்க புரம், அன்வர்திகான் பேட்டை, குண்ணத்தூர், கூடலூர், பாராஞ்சி,வேடல், குருவராஜப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என செயற் பொறியாளர் ஏ.எல்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.






