என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் பகுதியில் நாளை மின் தடை
    X

    பெரம்பலூர் பகுதியில் நாளை மின் தடை

    • பெரம்பலூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
    • பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை இருக்காது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் நாளை (17ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை மற்றும் கிராமிய பகுதிகளான ஆலம்பாடி, அருமடல், எளம்பலூர் இந்திரா நகர், தண்ணீர்பந்தல், காவலர் குடியிருப்பு, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (17ம்தேதி) காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என மின் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×