search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாலைமலர் செய்தி"

    • 24 மணி நேரமும் பறந்த வண்ணம் இருக்கும்.
    • சமீபத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் தேசியக்கொடி சேதமடைந்தது.

    திருப்பூர் :

    நாடு முழுவதும் உள்ள முக்கியமான ரெயில் நிலையங்களின் முன் பிரமாண்ட அளவிலான தேசியக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இந்த கொடியானது 24 மணி நேரமும் பறந்த வண்ணம் இருக்கும். இதுபோன்ற தேசியக்கொடியானது திருப்பூர் ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்த தேசியக்கொடியானது அருகில் உள்ள உயர்மின்கோபுர விளக்கில் பட்டு சேதமடைந்து வந்தது. இதையடுத்து கொடியின் நீள, அகலம் சற்று குறைககப்பட்டதால் கொடி கிழிவது தடுக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பூரில் சமீபத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் தேசியக்கொடி சேதமடைந்தது.

    குறிப்பாக கொடி ஆங்காங்கே கந்தல், கந்தலாக கிழிந்தது. இவ்வாறு மிகவும் மோசமான நிலையில் தேசியக்கொடி பறந்த காட்சி காண்போர் அனைவரையும் கவலை கொள்ள செய்தது. இது குறித்து மாைலமலரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

    இதையடுத்து ரெயில்வே நிர்வாகத்தினர் கிழிந்த நிலையில் இருந்த கொடியை அப்புறப்படுத்தி, புதிய தேசியக்கொடியை ஏற்றினர். அழுக்கடைந்தும், கிழிந்தும் காணப்பட்ட கொடி மாற்றப்பட்டு,புத்தொளி வீசும் புதிய கொடி பறப்பது அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

    ×