search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரியம்மன் கோவில்"

    • சென்னிமலை அருகே பசுவபட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது.
    • பெண்கள் கலந்து கொண்ட சென்னி ஆண்டவர் குழுவினரின் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே பசுவபட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 30-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது.

    பின்னர் 7-ந் தேதி இரவு கோவிலில் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் தினமும் காலையில் பெண்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வந்தனர்.

    13-ந் தேதி இரவு பெண்கள் கலந்து கொண்ட சென்னி ஆண்டவர் குழுவினரின் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கோவிலுக்கு உட்பட்ட திரளான பக்தர்கள் ஆடு, கோழிகள் பலியிட்டு பொங்கல் வைத்து மாரியம்மனை வழிபட்டனர்.

    இரவு கம்பம் பிடுங்கி கிணற்றில் விடப்பட்டது.

    • எக்கட்டாம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதி பூச்சாட்டுகளுடன் பொங்கல் விழா தொடங்கியது
    • திரளான பக்தர்கள் ஆடு, கோழிகள் பலியிட்டனர். பின்னர் இரவு கம்பம் பிடுங்கி நொய்யல் ஆற்றில் விடப்பட்டது

    சென்னிமலை,

    சென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதி பூச்சாட்டுகளுடன் பொங்கல் விழா தொடங்கியது.

    பின்னர் 30-ந் தேதி இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நடைபெற்றது.

    இந்த பொங்கல் விழாவில் நொய்யல், அண்ணாமலைபாளையம், புதுவலசு, சாணார் பாளையம், தாமரைக்காட்டுவலசு மற்றும் கோவிலை சேர்ந்த ஏழு கிராமத்து பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    திரளான பக்தர்கள் ஆடு, கோழிகள் பலியிட்டனர். பின்னர் இரவு கம்பம் பிடுங்கி நொய்யல் ஆற்றில் விடப்பட்டது.

    இதேபோல் சென்னிமலை அருகே கே.ஜிவலசு அடுத்துள்ள புதுவலசு மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து மாரியம்மனை வழிபட்டனர்.

    ×