search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணிக் சாஹா"

    • சிறுமி தனது பிறந்தநாள் ஆகஸ்டு 6-ந் தேதி என்று குறிப்பிட்டார்.
    • சிறுமியின் பிரகாசமான எதிர்காலத்திற்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

    அகர்தலா:

    திரிபுரா முதல்-மந்திரி மாணிக் சாஹா நேற்று முன்தினம் குமார்காட் பகுதியில் இருந்து அகர்தலாவுக்கு ரெயிலில் பயணம் செய்தார். அப்போது ரெயிலில் பயணம் செய்த 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீஅதிதா தாஸ் என்ற சிறுமி முதல்-மந்திரியுடன் உரையாடினார். அப்போது சிறுமி தனது பிறந்தநாள் ஆகஸ்டு 6-ந் தேதி என்று குறிப்பிட்டார். இதை கவனத்தில் கொண்ட முதல்-மந்திரி மாணிக் சாஹா, ஆகஸ்டு 6-ந் தேதியான நேற்று சிறுமி ஸ்ரீஅதிதா தாசுக்கு சமூக வலைத்தளங்களில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஆச்சரியப்படுத்தினார்.

    இதுதொடர்பாக அவரது பேஸ்புக் பதிவில், குமார்காட்டில் இருந்து அகர்தலாவுக்கு திரும்பும் வழியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீஅதிதா தாசிடம் பேசினேன். இன்று அவளுடைய பிறந்தநாள் என்று அறிந்தேன். ஸ்ரீஅதிதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவளுடைய பிரகாசமான எதிர்காலத்திற்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

    • திரிபுராவில் பிப்ரவரி 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    அகர்தலா:

    வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி, திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதே போல் நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டசபைக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் என அம்மாநில முதல் மந்திரி மாணிக் சாஹா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலை பொருட்படுத்தாமல் மக்களுக்காக பா.ஜ.க. உழைத்து வருகிறது. திரிபுராவில் கடந்த தேர்தலை விட எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

    ×