search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரிபுரா சட்டசபை தேர்தல்"

    • விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தேர்தலில், மக்கள் காலை முதலே ஆர்வமாக வந்து வாக்களித்து வருகின்றனர்.
    • தேர்தலுக்காக 25 ஆயிரம் மத்திய படையினருடன், 31 ஆயிரம் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

    திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. முதல் கட்டமாக இன்று, திரிபுரா மாநிலம், தேர்தலை சந்திக்கிறது.

    60 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தேர்தலில், மக்கள் காலை முதலே ஆர்வமாக வந்து வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில், திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.23 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இங்கு தேர்தலுக்காக 25 ஆயிரம் மத்திய படையினருடன், 31 ஆயிரம் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதுடன், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி வரை தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

    • மேகாலயா மற்றும் நாகலாந்தில் வருகிற 27ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • தேர்தலில் சாதனை ஏற்படுத்தும் வகையில் வாக்களிக்க வரும்படி பிரதமர் மோடி அழைப்பு.

    வடகிழக்கு மாநிலங்களில் திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேகாலயா மற்றும் நாகலாந்தில் வருகிற 27ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    அதுன்படி, திரிபுராவில் இன்று சட்டசபை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தேர்தலில் சாதனை ஏற்படுத்தும் வகையில் வாக்களிக்க வரும்படி பிரதமர் மோடி, மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    திரிபுரா மக்கள் சாதனை அளவாக அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வருகை தந்து, ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என கேட்டு கொள்கிறேன். தேர்தலில், தங்களது கடமையை நிறைவேற்ற வரும்படி இளைஞர்களை தனிப்பட்ட முறையில் கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • கடந்த தேர்தலில் இங்கு பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தது.
    • கேரளாவில் குஸ்தி போடும் கட்சிகள் திரிபுராவில் தோஸ்தாக மாறியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    திரிபுரா மாநிலத்தில் வருகிற 16-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    60 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் மாறி, மாறி ஆட்சி அமைத்து வந்தது. கடந்த தேர்தலில் இங்கு பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தது.

    இப்போது நடக்கும் சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வர பாரதிய ஜனதா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

    பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க அங்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.

    இதனை பாரதிய ஜனதா விமர்சித்து வருகிறது. கேரளாவில் எதிரும், புதிருமாக செயல்படும் கட்சிகள் இங்கு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதாக பாரதிய ஜனதா கட்சியினர் கூறினர். கேரளாவில் குஸ்தி போடும் கட்சிகள் திரிபுராவில் தோஸ்தாக மாறியுள்ளது என்றும் கிண்டல் செய்தனர்.

    பாரதிய ஜனதாவின் விமர்சனத்திற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பதில் அளித்து உள்ளார். இது தொடர்பாக கோட்டயத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரசும் தேர்தல் கூட்டணி அமைத்து கொள்ள பாரதிய ஜனதாவே காரணம். பாரதிய ஜனதாவின் நடவடிக்கைகள் காரணமாகவே காங்கிரசுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கைகோர்த்துள்ளது.

    திரிபுராவில் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. அதற்காகவே அங்கு நாங்கள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறோம், என்றார்.

    • திரிபுராவில் ஆளும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
    • கடந்த 5 ஆண்டில் பா.ஜ.க. திரிபுராவை வளர்ச்சி பாதையில் கொண்டு வந்துள்ளது என்றார் பிரதமர் மோடி.

    அகர்தலா:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் வரும் 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தலாய் மாவட்டத்தின் அம்பாசாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

    காங்கிரசுக்கும், இடதுசாரிகளுக்கும் ஏழைகளை எப்படி ஏமாற்றுவது என்பது மட்டுமே தெரியும். அவர்களை தங்கள் கவலைகளில் இருந்து ஒருபோதும் விடுவிக்கமாட்டார்கள். ஆனால் பா.ஜ.க.வோ உங்களின் கவலைகளைப் போக்குவதற்கு ஒரு வேலைக்காரன் போல, ஒரு உண்மையான பங்காளி போல இரவு, பகலாக பணியாற்றி வருகிறது.

    திரிபுராவில் கிராமங்கள் தோறும் ஆப்டிக்கல் பைபர் நிறுவப்பட்டு வருகின்றன. கடந்த 8 ஆண்டுகளில் 3 மடங்கு ஆப்டிக்கல் பைபர் நிறுவப்பட்டு இருக்கிறது. பா.ஜ.க.வின் இரட்டை என்ஜின் அரசு இந்த திசையில் செயல்படுவதால், தெற்கு ஆசியாவின் வாசலாக திரிபுரா மிக விரைவில் மாறப்போகிறது.

    புதிய இலக்குகளுடன் புதிய நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்தோம். நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை பா.ஜனதா செய்கிறது என்பதையும், உங்களுக்குத் தேவையானதை நாங்கள் செய்கிறோம் என்பதையும் எங்கள் உறுதிப்பாடு நிரூபிக்கிறது. திரிபுராவை வெறும் 5 ஆண்டுகளில் வளர்ச்சியின் பாதையில் பா.ஜனதா கொண்டு வந்திருக்கிறது.

    ஒரு காலத்தில் திரிபுராவில் ஒரு கட்சி மட்டுமே கொடி ஏற்ற அனுமதிக்கப்பட்டது. போலீஸ் நிலையங்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால் இன்று பா.ஜ.க. அரசு திரிபுராவை அச்சம், மிரட்டல் மற்றும் வன்முறையில் இருந்து விடுவித்துள்ளது. மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிறுவி இருக்கிறது.

    நாடு முழுவதும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக பா.ஜ.க. பாடுபட்டு வருகிறது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வஞ்சகத்தில் ஈடுபட்டுள்ளனர். மோசமான ஆட்சியின் பழைய வீரர்கள் கைகோர்த்துள்ளனர். அவர்களின் பெயர் அல்லது கோஷம் எதுவாக இருந்தாலும், அவர்களுக்குப் போகும் ஒவ்வொரு வாக்கும் திரிபுராவை பின்னுக்குத் தள்ளும். எனவே வாக்குப்பதிவின் போது தாமரையின் பட்டனை அழுத்தினால் போதும் என தெரிவித்தார்.

    • திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • திரிபுராவில் வரும் 16-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    அகர்தலா:

    திரிபுராவில் 60 தொகுதிகளைக் கொண்ட சட்டசபைக்கான தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல் மந்திரியாக மாணிக் சஹா செயல்பட்டு வருகிறார்.

    இதற்கிடையே, தேர்தல் பிரசாரத்தின்போது இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல் மந்திரி மாணிக் சஹா, சூழ்நிலையை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மக்கள் தாமரை சின்ன பட்டனை அழுத்துவார்கள். தேர்தல் முடிவு என்ன வரப்போகிறது என்று அனைவருக்கும் தெரியும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார் என அம்மாநில பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

    • திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ், பா.ஜ.க. வெளியிட்டன.

    அகர்தலா:

    வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகியவற்றின் சட்டசபை பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு இந்த 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

    அதன்படி திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதே போல் நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டசபைக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப்ரவரி 27-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. வெளியிட்டுள்ளன. முதற்கட்டமாக 48 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. அறிவித்துள்ளது. அதேபோல் காங்கிரஸ் சார்பில் முதற்கட்டமாக 17 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    • திரிபுராவில் பிப்ரவரி 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    அகர்தலா:

    வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி, திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதே போல் நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டசபைக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் என அம்மாநில முதல் மந்திரி மாணிக் சாஹா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலை பொருட்படுத்தாமல் மக்களுக்காக பா.ஜ.க. உழைத்து வருகிறது. திரிபுராவில் கடந்த தேர்தலை விட எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

    ×