search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணிக் சர்க்கார்"

    • புல்வாமா தாக்குதலையும், பாலக்கோட்டில் வான்தாக்குதல் நடத்தி அளித்த பதிலடியையும் பா.ஜ.க. பயன்படுத்தி 2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது.
    • காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ள தகவல்களால், அவருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பும் என நான் நினைத்தேன்.

    அகர்தலா:

    காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி துணை ராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற வாகனம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினார்கள். இதில் துணை ராணுவ வீரர்கள் (மத்திய ஆயுதப்படை போலீசார்) 40 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதல், அமைப்பு ரீதியான தோல்வி, ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை குறைபாடுகளைக்கொண்டது என்று காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரு பேட்டியின்போது குற்றம்சாட்டினார்.

    அப்போது, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய தரப்பில் நடத்தப்பட்ட பாலக்கோட் வான் தாக்குதல் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சந்தேகத்தை வெளிப்படுத்தியது. ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் என்கிறபோது அதற்கு முன்னதாக இந்த தாக்குதலை நடத்தி வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சினையை மறைக்க பா.ஜ.க. தீவிர சதி செய்துள்ளது என்பதுதான் அந்த கட்சியின் குற்றச்சாட்டாக இருந்தது.

    இந்த நிலையில் புல்வாமா தாக்குதலையும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பாலக்கோட்டில் நடத்தப்பட்ட இந்தியாவின் வான்தாக்குதல் குறித்தும் திரிபுரா முன்னாள் முதல்-மந்திரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான மாணிக் சர்க்கார் கூறியதாவது:-

    புல்வாமா தாக்குதலையும், பாலக்கோட்டில் வான்தாக்குதல் நடத்தி அளித்த பதிலடியையும் பா.ஜ.க. பயன்படுத்தி 2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது. இந்த சம்பவம் நடந்தபோது அங்கு கவர்னராக இருந்த சத்யபால் மாலிக் இதுபற்றி இப்போது பேசி உள்ளார்.

    சத்யபால் மாலிக் தற்போது தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து பிரதமரும், உள்துறை மந்திரியும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் மவுனம் சாதிக்கின்றனர்.

    ஓய்வுபெற்ற ராணுவ தளபதி சங்கர்ராய் சவுத்ரியும், இந்த பிரச்சினையை எழுப்பி உள்ளார்.

    காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ள தகவல்களால், அவருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பும் என நான் நினைத்தேன். அது சரியாகி உள்ளது. அவருக்கு காப்பீட்டு மோசடி ஊழலில் சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். அவர் கருத்துகளை வெளியிட்ட ஒரே வாரத்தில் இது நடந்துள்ளது.

    நமது நாடு இப்படி எதிர்வினையாற்றக்கூடிய அரசை முதல் முறையாக பெற்றிருக்கிறது.

    திரிபுராவில் 60 சதவீத வாக்காளர்கள் பா.ஜ.க.வை ஆதரிக்கவில்லை. பா.ஜ.க.வை வெளிப்படையாக விமர்சித்து வந்த திப்ரா மோதா, சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற உதவியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×