search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிகள் சேர்க்கை"

    • விண்ண ப்பங்கள் ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டது.
    • காலி இருக்கைகளுக்கான மாணவிகள் சேர்க்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    தருமபுரி, 

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாண விகளுக்கான விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது.

    இங்கு மாணவிகள் தங்கி விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் உள்ள 60 இருக்கைகளுக்கு 40 இடங்கள் காலியாக உள்ளது.

    இதற்கான விண்ண ப்பங்கள் ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் விளையாட்டு விடுதியில் உள்ள காலி இருக்கைகளுக்கான மாணவிகள் சேர்க்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி தலைமையில் நடைபெற்ற இந்த சேர்க்கையின் போது ஏராளமான மாண விகள் தங்களது பெற்றோருடன் வந்து சான்றிதழ்களை சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில் மாணவிகள் சேர்க்கை நடைபெற்றது.

    • திருப்பூா் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரியில் நிகழாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.
    • கணினி பயன்பாட்டியல், வணிக நிா்வாகவியல், வரலாறு ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரியில் நிகழாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகற 30-ந் தேதி தொடங்குகிறது. திருப்பூா் பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2023-24 ம் ஆண்டுக்கான மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த கலந்தாய்வின் முதல் நாளில் சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு (அனைத்து இளநிலை பாடப் பிரிவுகள்) மாற்றுத் திறனாளிகள், மாவட்ட அளவில் விளையாட்டு வீராங்கனைகள், ராணுவ வீரா்களின் வாரிசுகள் பங்கேற்கலாம்.

    இதைத்தொடா்ந்து, ஜூன் 1 மற்றும் 2 ந் தேதிகளில் கணிதம், இயற்பியல், இயற்பியல் சிஏ., வேதியியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல், மின்னணுவியல் பாடப் பிரிவுகளுக்கும், ஜூன் 3 ஆம் தேதி வணிகவியல், வணிகவியல் மற்றும் .தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர ஜூன் 6 -ந் தேதி நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • நாகர்கோவில் யோகி கன்யா கல்வி அறக்கட்டளை இயக்குனர் தகவல்
    • எப்போதும் எந்த வயதிலும் தொலைதூர கல்வி மையத்தில் இணைந்து கல்வியை தொடர முடியும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பர்வதவர்த்தினி சாலையில் செயல்பட்டு வருகிறது யோகி கன்யா அறக்கட்டளை. இந்த அறக்கட்டளை அழகப்பா பல்கலைக்கழகம், மனோ ன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் ஆகிய வற்றின் சார்பில் தொலை தூர கல்வி மையமாக செயல்பட்டு வருகிறது.

    தமிழக அரசு எல்லோருக்கும் எப்போதும் கல்வி என்ற திட்டத்தின் கீழ் இந்த கல்வியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது இதில் 10-ம் வகுப்பு முடித்து 12-ம் வகுப்பு , ஐ.டி.ஐ. அல்லது டிப்ளமோ படித்தவர்கள் பாடத்திட்டங்களை தமிழ் வழியாகவும் ஆங்கில வழியாகவும் பயிலலாம்.

    இந்த கல்வி மையத்தில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு கல்வி மையம் வாயிலாக அசைன்மெண்ட்களுக்கு 25 சதவீதம் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

    இதனால் இங்கு பயிலும் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவது எளிதாக உள்ளது. இங்கு படிக்கும் மாணவ -மாணவிகள் தமிழ்நாட்டில் அவர்கள் விரும்பும் எந்த மாவட்டத்திலும் தேர்வு எழுதும் வசதியும் உள்ளது.

    கடந்த 2005-ம் ஆண்டு இந்த கல்வி மையம் தொடங்கப்பட்டது. 18 வருடங்களைக் கடந்து கல்வி மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகங்களின் தொலைதூர கல்வி மையத்தில் சேர்ந்து படிப்ப தன் மூலம் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகியவற்றை படிக்க முடியும். இங்கு படித்த மாணவ-மாணவிகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.

    அரசு மற்றும் தனியார் துறை வேலைக்கும், வெளி நாட்டு வேலைக்கும் சென்று உள்ளார்கள். இந்த தொலை தூர கல்வி மையத்தில் பள்ளி படிப்பை முடித்தவர்கள் வீட்டிலிருந்தபடியே படிப்ப தற்கும் படித்து முடித்தவர்கள் உயர்கல்வியை பெறுவ தற்கும் வேலையில் இருந்து கொண்டே படிப்பை தொடர்வதற்கும் கல்லூரி யில் படித்துக் கொண்டே மற்றொரு பிரிவில் பட்டம் பெறுவதற்கும் வசதியாக உள்ளது.

    கற்றது கையளவு கல்லா தது உலகளவு. எனவே எப்போதும் எந்த வயதிலும் தொலைதூர கல்வி மையத்தில் இணைந்து கல்வியை தொடர முடியும் என்பதால் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்ப டுத்தி கொண்டு பயனடையவேண்டும்.

    இவ்வாறு யோகி கன்யா கல்வி அறக்கட்டளை திட்ட இயக்குனர் பத்ம பிரபாகர் தெரிவித்துள்ளார்.

    ×