search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூா் எல்.ஆா்.ஜி.கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை கலந்தாய்வு -  30-ந் தேதி தொடங்குகிறது
    X

    கோப்புபடம். 

    திருப்பூா் எல்.ஆா்.ஜி.கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை கலந்தாய்வு - 30-ந் தேதி தொடங்குகிறது

    • திருப்பூா் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரியில் நிகழாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.
    • கணினி பயன்பாட்டியல், வணிக நிா்வாகவியல், வரலாறு ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரியில் நிகழாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகற 30-ந் தேதி தொடங்குகிறது. திருப்பூா் பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2023-24 ம் ஆண்டுக்கான மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த கலந்தாய்வின் முதல் நாளில் சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு (அனைத்து இளநிலை பாடப் பிரிவுகள்) மாற்றுத் திறனாளிகள், மாவட்ட அளவில் விளையாட்டு வீராங்கனைகள், ராணுவ வீரா்களின் வாரிசுகள் பங்கேற்கலாம்.

    இதைத்தொடா்ந்து, ஜூன் 1 மற்றும் 2 ந் தேதிகளில் கணிதம், இயற்பியல், இயற்பியல் சிஏ., வேதியியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல், மின்னணுவியல் பாடப் பிரிவுகளுக்கும், ஜூன் 3 ஆம் தேதி வணிகவியல், வணிகவியல் மற்றும் .தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர ஜூன் 6 -ந் தேதி நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×