search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொலைதூரக் கல்வி மையம்"

    • நாகர்கோவில் யோகி கன்யா கல்வி அறக்கட்டளை இயக்குனர் தகவல்
    • எப்போதும் எந்த வயதிலும் தொலைதூர கல்வி மையத்தில் இணைந்து கல்வியை தொடர முடியும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பர்வதவர்த்தினி சாலையில் செயல்பட்டு வருகிறது யோகி கன்யா அறக்கட்டளை. இந்த அறக்கட்டளை அழகப்பா பல்கலைக்கழகம், மனோ ன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் ஆகிய வற்றின் சார்பில் தொலை தூர கல்வி மையமாக செயல்பட்டு வருகிறது.

    தமிழக அரசு எல்லோருக்கும் எப்போதும் கல்வி என்ற திட்டத்தின் கீழ் இந்த கல்வியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது இதில் 10-ம் வகுப்பு முடித்து 12-ம் வகுப்பு , ஐ.டி.ஐ. அல்லது டிப்ளமோ படித்தவர்கள் பாடத்திட்டங்களை தமிழ் வழியாகவும் ஆங்கில வழியாகவும் பயிலலாம்.

    இந்த கல்வி மையத்தில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு கல்வி மையம் வாயிலாக அசைன்மெண்ட்களுக்கு 25 சதவீதம் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

    இதனால் இங்கு பயிலும் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவது எளிதாக உள்ளது. இங்கு படிக்கும் மாணவ -மாணவிகள் தமிழ்நாட்டில் அவர்கள் விரும்பும் எந்த மாவட்டத்திலும் தேர்வு எழுதும் வசதியும் உள்ளது.

    கடந்த 2005-ம் ஆண்டு இந்த கல்வி மையம் தொடங்கப்பட்டது. 18 வருடங்களைக் கடந்து கல்வி மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகங்களின் தொலைதூர கல்வி மையத்தில் சேர்ந்து படிப்ப தன் மூலம் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகியவற்றை படிக்க முடியும். இங்கு படித்த மாணவ-மாணவிகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.

    அரசு மற்றும் தனியார் துறை வேலைக்கும், வெளி நாட்டு வேலைக்கும் சென்று உள்ளார்கள். இந்த தொலை தூர கல்வி மையத்தில் பள்ளி படிப்பை முடித்தவர்கள் வீட்டிலிருந்தபடியே படிப்ப தற்கும் படித்து முடித்தவர்கள் உயர்கல்வியை பெறுவ தற்கும் வேலையில் இருந்து கொண்டே படிப்பை தொடர்வதற்கும் கல்லூரி யில் படித்துக் கொண்டே மற்றொரு பிரிவில் பட்டம் பெறுவதற்கும் வசதியாக உள்ளது.

    கற்றது கையளவு கல்லா தது உலகளவு. எனவே எப்போதும் எந்த வயதிலும் தொலைதூர கல்வி மையத்தில் இணைந்து கல்வியை தொடர முடியும் என்பதால் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்ப டுத்தி கொண்டு பயனடையவேண்டும்.

    இவ்வாறு யோகி கன்யா கல்வி அறக்கட்டளை திட்ட இயக்குனர் பத்ம பிரபாகர் தெரிவித்துள்ளார்.

    ×