search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவம்"

    • சிங்கம்புணரி அருகே சித்த மருத்துவ முகாம் நடந்தது.
    • வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமை தாங்கினார்.

    சிங்கம்புணரி,

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டாரம், சூரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மருதிப்பட்டியில் சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடந்தது. பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த இந்த முகாமை, ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா வெங்கடேசன், துணைத் தலைவர் கமலா ஆகியோர் தொடங்கி வைத்தனர். வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமை தாங்கினார். சூரக்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆதித்யா, பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சரவணன், சிங்கம்புணரி மருத்துவமனை சித்த மருத்துவர் ரஹீமா பானு ஆகியோர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் 225 பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மருந்தாளுநர் சோலைசாமி, சுகாதார ஆய்வாளர் எழில் உள்ளிட்ட குழுவினர் செய்தனர்.

    • ஆனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் ரத்த அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    சாத்தான்குளம்:

    தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் தூத்துக்குடி சுகாதார பணிகளின் பொற்செல்வன் உத்தரவின் பேரில் சாத்தான்குளம் அருகே ஆனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பண்டாரபுரம் சத்தியநகரம் டி.என்.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் சுகாதார ஆய்வாளர் மந்திர ராஜன் வரவேற்று பேசினார்.

    வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஐலின் சுமதி திட்ட விளக்க உரையாற்றினார். சத்தியநகரம் சேகர குரு மர்காசிஸ் டேவிட் வெஸ்லி ஜெபம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோரிஸ் செல்வதுரை நன்றி கூறினார்.

    முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை, கொலஸ்டிரால் பரிசோதனை, கொரோனா சளி பரிசோதனை, கொரோனா தடுப்பூசி ரத்த அளவு பரிசோதனை செய்யப்பட்டது. 

    • ராமநாதபுரத்தில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • இளம்பெண்கள் எடுத்துகொள்ள வேண்டிய உணவுகள் குறித்து டாக்டர் விளக்கி பேசினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஆரோக்கியா மருத்துவமனை, இன்னர்வீல் கிளப் இணைந்து வளரிளம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    இளம்பெண்கள் எடுத்துகொள்ள வேண்டிய உணவுகள் குறித்தும், இயற்கை காய்கறிகள் சாப்பிடுவதன் அவசியம் குறித்தும் ஆரோக்கியா மருத்துவமனை டாக்டர் வித்யா பிரியதர்ஷினி விளக்கினார்.

    கிளப் தலைவி ரூபா, செயலாளர் பாக்கியலட்சுமி, முன்னாள் தலைவர் ரேகா, தலைமை ஆசிரியை ஜோ விக்டோரினா, தொழிற்கல்வி ஆசிரியை சிவகாமசுந்தரி உட்பட மாணவிகள் பங்கேற்றனர். மாணவிகளுக்கு இரும்புச் சத்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    • தொண்டி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • தனியார் நிறுவனங்கள் இணைந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவி வழங்கப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனியார் நிறுவனங்கள் இணைந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவி மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வட்டார மருத்துவ அலுவலர் கோவலகண்ணன் தலைமையில் நடந்தது.

    நிதி நிறுவன மண்டல மேலாளர் சீனிவாச பெருமாள், வட்டார மேலாளர் ஜெயபாண்டி, தொண்டி கிளை மேலாளர் அஜீத்குமார், சி.கே.மங்கலம் கிளை மேலாளர் கயல் விழி முன்னிலை வகித்தனர். தொண்டி அரசு மருத்துவர் அருண் வரவேற்றார்.

    குடிநீர் சுத்திகரிக்கும் எந்திரம், ரத்த அழுத்த கருவி, ஸ்டெதாஸ்கோப், சர்க்கரை அளவை கண்டறியும் கருவி, கருவில் இருக்கும் குழந்தை களின் இதயத்துடிப்பை அறியும் கருவி, நுண் கதிர் ஒளி படம் பார்க்க உதவி உபகரணங்கள் என ரூ.இரண்டரை லட்சம் மதிப்பிலான கருவிகள் வழங்கப்பட்டன.

    ×