search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம்"

    • இந்திய அரசின் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் பிபேக் டெப்ராய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.
    • கல்வியாண்டில் ஆண்களை விட பெண்கள் இரண்டரை மடங்கு அதிகமாக பட்டம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக 29-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கழைக் கழகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் அரங்கத்தில் நடைபெற்றது.

    பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் வரவேற்று பேசினார்.விழாவுக்கு தமிழக கவர்னரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக வேந்தருமான ஆர்.என். ரவி தலைமை தாங்கினார்.

    இந்திய அரசின் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் பிபேக் டெப்ராய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.

    கடந்த 2021-22-ம் ஆண்டுகளில் இளநிலை பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றில் முடித்து தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் 13,236 ஆண்களும், 30 ஆயிரத்து 625 பெண்கள் என மொத்தம் 43,861 பேர் பட்டம் பெற தகுதியான வர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

    இவர்களில் ஆராய்ச்சி படிப்பு முடித்த 948 பேர் மற்றும் பல்வேறு பாடங் களில் முதலாம் இடம் பிடித்து பதக்கம் பெறும் 105 நபர்கள் என 1053 நபர்க ளுக்கு கவர்னர் நேரடியாக பட்டங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த கல்வியாண்டில் ஆண்களை விட பெண்கள் இரண்டரை மடங்கு அதிகமாக பட்டம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

    விழாவில் கவர்னர் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினார். அந்த வகையில் திருச்செந்தூரில் உள்ள கோவிந்தம்மாள் கல்லூரி யில் இளங்கலை கணிதம் படித்த திவ்யா என்ற மாணவிக்கு தங்கப் பதக்கத்தை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

    ஆத்தூரை சேர்ந்த மாணவி திவ்யா தற்போது தற்போது ஆதித்தனார் கல்லூரியில் 2-ம் ஆண்டு முதுகலை கணிதம் படித்து வருகிறார். இவர் இளங்கலை கணித பாடப்பிரிவில் பல்கலைக்கழக அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார். மாணவியின் தந்தை லட்சுமணன் என்பவர் ஆத்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் கணக்கராக பணியாற்றி வருகிறார்.

    இதேபோல் கோவிந்தம்மாள் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படிப்பில் மாணவி பாத்திமா சஹாரா தங்கப் பதக்கமும், அதே கல்லூரியில் கம்ப்யூட்டர் படிப்பில் மாணவி ஜெயரூபி தங்கப்பதக்கமும் கவர்னரிடம் இருந்து இன்று பெற்றுக் கொண்டனர்.

    இதே போல் ஆதித்தனார் கல்லூரியை சேர்ந்த 5 பேர் டாக்டர் பட்டமும், கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரியில் படித்த 3 பேரும் டாக்டர் பட்டம் பெற்றனர்.

    மேலும் காயல்பட்டினம் மகளிர் கல்லூரி மாணவி ஆங்கிலம் மற்றும் அரபிக் பாடங்களில் முதலிடம் பிடித்து 2 பதக்கங்களை பெற்றார்.

    விழாவில் எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், நயினார் நாகேந்திரன், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் ஜெயந்தி மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள், பல்கலைக் கழக ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை துணை வேந்தர் சந்திரசேகர், பதிவாளர் சாக்ரடீஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×