search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவியின் கள்ளக்காதலனை"

    • ஆத்திரத்தின உச்சிக்கு சென்ற நந்தகோபால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளங்கோ வயிற்றில் குத்தினார்.
    • இந்நிலையில் தப்பி ஓடிய இளங்கோவை நேற்று இரவு ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சாமிநாத புரத்தை சேர்ந்தவர் நந்தகோபால் (29). இவரது மனைவி ராஜேஸ்வரி (29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமண மாகாத இளங்கோ (23) என்ற வாலிபருடன் ராஜேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. அடிக்கடி இளங்கோ, ராஜேஸ்வரி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

    இது பற்றி நந்தகோபாலுக்கு தெரிய வந்தது. மனைவியை நந்த கோபால் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் இளங்கோவுடன் பழகுவதை கைவிடவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சாவடிப் பாளையம் பகுதியில் உள்ள மறைவான இடத்தில் ராஜேஸ்வரியும், இளங்கோவும் சந்தித்து பேசி கொண்டிருந்தனர். அப்போது பின் தொடர்ந்து வந்த நந்தகோபால் அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    இதில் அவர் களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த நந்தகோபால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளங்கோ வையும், ராஜேஸ்வரியையும் குத்தினார்.

    இதில் ராஜேஸ்வரி முகத்திலும், இளங்கோவின் கையிலும் காயம் ஏற்பட்டது. பின்னர் நந்தகோபால் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதனையடுத்து காயமடைந்த 2 பேரும் ஈரோடு அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டனர். ராஜேஸ்வரி பெண்கள் உள்நோயாளி பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலையில் நந்தகோபால் மனைவி ராஜேஸ்வரி தேடி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். ராஜேஸ்வரியை சிகிச்சை பெற்று வரும் பெண்கள் சிகிச்சை உள்நோயாளிகள் வார்டுக்கு நந்தகோபால் சென்றார்.

    அங்கு ராஜேஸ்வரியை சந்திக்க இளங்கோவும் வந்திருந்ததால் ஆத்திரத்தின உச்சிக்கு சென்ற நந்தகோபால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளங்கோ வயிற்றில் குத்தினார்.

    இதைப்பார்த்த மற்ற நோயாளிகள் பதறி அடித்து கொண்டு ஓடினர். நந்த கோபாலும் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே தப்பி ஓடி விட்டார். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த இளங்கோவை டாக்டர்கள் மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தப்பி ஓடிய இளங்கோவை நேற்று இரவு ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர். பின்னர் இளங்கோ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×